இளஞ் சேட் சென்னி




இளஞ்சேட் சென்னி சிறந்த மன்னன். எதையும் செம்மையாகச் செய்வான். ஒன்றைச் செய்து பின் வருத்தப்படமாட்டான்.
பார்த்தவுடன் எவரையும் தெரிந்து கொள்வான்.
கோள் சொல்லைக் கேட்க மாட்டான்.
புகழ் பாடுவோரை நம்பான். அவன் பிறர் செய்யும் குற்றத்தை நன்கு ஆராய்வான்.
நடு நிலை தவறாமல் தண்டனை அளிப்பான்.
தவறு செய்தவன், காலடியில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டால் தண்டனையைக் குறைப்பான்;
அவனிடம் முன்னிலும் அதிகமாக அன்பு காட்டுவான்.
புலவரெல்லாம் அவன் புகழ் பாடினர்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்