இருக்கா… இருக்கா? – ஒரு பக்கக் கதை






ஒரு சிறுவன் பரிசுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று, “டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை இருக்கா?” என்று கேட்டான்.

“இல்லை” என்றார் கடைக்காரர்.
அந்தச் சிறுவன் மறுநாளும் அதே கடைக்குச் சென்று, “டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை இருக்கா?” என்று கேட்டான்.
“இல்லை… இல்லை!” என்றார் கடைக்காரர் எரிச்சலாக.
அவன் மூன்றாம் நாளும் அதே கடைக்குச் சென்று, டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை இருக்கா என்று கேட்க, கடுப்பானார் கடைக்காரர். “இல்லைன்னு எத்தனை தடவை சொல்றது? இன்னொரு தடவை வந்து கேட்டியானா, உன்னை அந்தத் தூணோடு சேர்த்து வெச்சுக் கயித் தால கட்டிப் போட்டுடுவேன்!” என்றார்.
அந்தப் பையன் அடுத்த நாளும் வந்தான். கடைக்காரர் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு, “என்ன?” என்றார். “உங்ககிட்டே கயிறு இருக்கா?” என்று கேட்டான் பையன்.
கடைக்காரர் சாந்தமாகி, “இல்லை தம்பி!” என்றார்.
பையன் அடுத்துக் கேட்டான்…
“சரி, டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை இருக்கா?”
– ஜூலை 2007