இரவினில் ஆட்டம்..! பகலினில் தூக்கம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 7,282 
 
 

காளிதாஸ் ஈஸ்வரனை அழைத்தான்.’நாளைக்கு நம்ம பக்கிரிசாமித் தெருவுலதான் நாம கைவரிசையைக் காட்டப்போறோம்!’ ரெடியா இரு! நான் ஃபோன் பண்றேன்!; என்றான்.

‘குறிப்பா அங்க எதுக்குண்ணே?!’ என்றான் ஈஸ்வரன்.

‘அந்தத் தெருவுல நாலாம் நம்பர் வீட்டுக்கு முன்னாடி இருக்கிற ஏடி எம்தான் நம்ம குறி…! நாம யாருன்னு இந்த ஊரு உலகத்துக்குக் காட்டணும்!’ என்றான் காளி.

‘ஏ.டி.எம் முன்னாடிதான் பளிச்சினு மெர்க்குரி தெரு லைட் இருக்கே? மாட்டிக்க மாட்டோமா?’ என்றான் ஈஸ்வரன்.

‘மெர்குரி தெரு லைட்’ இருக்கு…! ஆனா.. அது எரியுதா தெரியுமா…??!! கேட்டுவிட்டுச் சொன்னான் காளி …’ராத்திரி எல்லாம் ஒரே ஆட்டம் எரிஞ்சு எரிஞ்சு அணைஞ்சு… கண் சிமிட்டும் ஆட்டம் போடும்! பகலில் சுத்தமாத் தூங்கிடும்!. இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்.’ என்றான் காளிதாஸ் சிரித்தபடி!.

நேரம் குறித்து, இருவரும் நள்ளிரவு அந்த இடத்தை நெருங்கினார்கள்.

ஆள் அரவமில்லை! ஊர் அடங்கி இருந்தது. நடமாட்டம் இல்லை!

இருவரும் பேசிக்கொண்டபடியே தெருவை அடைய, மெர்க்குரி தெரு லைட் ‘பக்கு பக்குனு’ எரிஞ்சு எரிஞ்சு அணைஞ்சது!. வெளிச்சம் வருவதும், உடனே போய் இருட்டு நெடுநேரம் தொடர்வதுமாக இருக்க, ஏ டி எம் ஐ உடைக்க உள்ளே புகுந்தார்கள்.

‘அய்யோ…! அய்யோ..!’ என்று ஆபத்தில் அலறுவதுபோல சைரன் சப்தமிட்டபடி போலீஸ் ஏடி எம்மில் புகுந்தவர்களைக் கொத்தியது.

பாவம் திருடவந்த அவர்களுக்குத் தெரியவில்லை பிளஸ்டூ எக்ஸாமுக்குப் படிக்கும் திவ்யா மாடியில் லைட்போட்டுப் படித்துக் கொண்டிருந்ததும் போலீசுக்குத் தகவல் தந்ததும்..!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *