இது ஒரு அபூர்வ ரகம்




(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஊஞ்சலின் வேகம் குறைய, காலூன்றி உந்தினால் பொன்னி. காற்று உற்சாகக் குழந்தையாய் அவள் வயிறு, முகம் என போது, கண்களை மூடிப் புன்னகைத்தாள். 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் அவளுக்கு ஊஞ்சவாடும் ஆசை விடவில்லை. உதைத்து விரி ஆடுவதில் பூமி மேலும் கீழுமாக நழுவி ஓடக் கண்டால் அவனுக்குப் பயம். மெல்ல ஆடவிட்டுக் கனவுகளில் லயிப்பது, பூத்தொடுக்க, தைக்கட்ட பாட அலள் சத்தோஷங்கள் எல்லாம் எளிமையானவைதான்.

கண்களைத் திறக்கச் சுற்றிலுமிருந்த அவள் தோட்டத்தின் செவ்வந்தி, ரோஜா, செம்பருத்தி பூக்கள்கூட கைகோர்த்து ஆடும் உணர்வு வந்தது. களை நீங்கி, ஈரப்பாத்திகளுடனிருந்த தோட்டத்தை ஊஞ்சல் கயிற்றில் கன்னம் பதித்தபடி ரசித்தாள்.
சொந்த வீடுதான்,
இங்கு குடிவந்த ஒரு வருடமாக பக்கத்து குடிலசக் குழந்தைகளை தனமும் வரச் செய்து பாடம் படிக்கச் செய்கிறாள் -கணவனின் வசவை வாங்கிக் கொண்டேம்.!
கணவன் மஹிபனுக்கு இவள் இன்பங்கள் புரிவதில்லை. அவன் தேவைகள், கனவுகள் எல்லாம் பெரியவை. கைவழிய பணம், கார், ஆடம்பர வாழ்வு இப்படி….
இரு வேறுபட்ட மளங்களைத் திருமணத்தில் இணைப்பது இறைவளின் பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்று புன்னகையுடன் நினைத்தவள், ஊஞ்சலினின்று இறங்கி வீட்டினுள் நுழைந்தாள்.
கருப்பு மசி மட்டுமே கொண்டு எழுதிய இயேசு நாதரின் பெரிய படம் வெள்ளிச் சட்டத்தினுள் நடுச்சுவரில் தொங்கியது. பிரம்பு சோபாக்களில் பல வண்ணக் குஷன்கள் – அவள் நெய்த திராட்சை, செர்ரி மலர்க் கொத்துகளுடன் பளிச்சிட்டன. பசுஞ்செடி வகைகளும், சலங்கை கோர்த்த குத்து விளக்குகளுமாய் சிறிய வரவேற்பறை அசத்தியது. படுக்கையறை சற்றே பெரியதாகையால், தையல் மிஷினை அங்குதான் போட்டிருந்தாள். சுற்றி குவிந்திருந்த துணிகளில் சிலதை அள்ளி எடுத்து மிஷினை ஓட்ட ஆரம்பித்தாள்.
நேற்று அருகிலிருந்த அநாதைக் குழந்தைகள் இல்லத்திற்கு அவள் போயிருந்தபோது, வார்டனும், இரு உதவியாளர்களுமாய் உட்கார்ந்து கைத் தையல் செய்து கொண்டிருந்தனர்.
“மிஷின் ரிப்பேருங்க பொன்னி. நாப்பது குழந்தைங்க, கிழிசலுங்க அம்பாரமா சேர்ந்து போச்சு.”
“கொக்கி, பட்டன் மட்டும் நீங்க வையுங்க வார்டன் அக்கா, மீதியை ஒரே நாள்ல நான் தைச்சு அனுப்பறேன்” என்றவள், துணிகளை மூட்டை சுட்டி எடுத்து வந்திருந்தாள். மூட்டைகளைத் தூக்கி வந்த சிறுவர்கள், அவள் தோட்டத்தில் நீர் பாய்ச்சி களையெடுத்து விட்டுத்தான் சென்றனர்.
“நீங்க எதுக்குடா செய்யறீங்க? போய் படிங்க. வார்டன் அக்கா தேடுவாங்கல்ல?”
“தோ… அரைமணி நேரத்தில முடிச்சிருவோங்க்கா. எங்க துணி நீங்க தைக்கலை?”
”சனிக்கிழமை தோறும் யாராச்சும் ரெண்டு பேரு வந்து சுத்தம் பண்ணித் தரோம்க்கா” என்று அவள் நீட்டிய முறுக்கை மென்றபடி கிளம்பினார்கள்.
அன்றிரவு வேலைகளை முடித்து, குழந்தைகள் உறங்கிய கையோடு அவள் தைக்க உட்கார, கணவன் சீறினான்.
“சே… என்ன டொக்கு டொக்குங்கற?”
”சாரிப்பா, நாளைக்கு கொடுக்கணுமேன்னு உட்கார்ந்தேன். காலையிலே பண்ணிக்கறேன்.”
“இந்தக் கந்தலெல்லாம் என்ன?” புருவந் தூக்கினான்.
“ஆசிரமக் குழந்தைகளுடையது….”
“ஏன் உனக்குப்புரிய மாட்டேங்குது பொன்னிசஷங்கர்மனைவி ர்மிளாவைப் பார். அவ தைக்கறது அத்தனையும் காக. புது மாடல் வரவர அப்படி இப்படி இவ உடுப்பு, டிரஸ்கன்னு தைச்சு கடைங்களுக்கு வித்துடறா. சேலை எம்பிராய்டரி செய்து தரதிலே நல்ல லாபமாம். கண்ணாடி பாசின்னு வைச்சுத் தைக்கிற ரவிக்கைத் துண்டிலே அம்பது ரூவா வரை திக்குமாம். நீ நம்பவீட்டு கரித்துணிக்கு பூ போட்டு, கிழிசலை தைச்சிட்டு… சே வேஸ்ட்”
“உங்க தங்கைக்கு அந்த மாதிரி மூணு ‘ரவிக்கை செய்து கொடுத்தேங்க. அண்ணா குழந்தைக்குப் பிறந்தநாள் வருது. ரெண்டு உடுப்பு தைச்சு….”
“இதுல கையிலே காசு வராதே மக்கு” சலித்தாள்.
“வெளிவேலைன்னு இறங்கினா முழுநேர வேலையாயிடுங்க. சாயங்காலம் நம்ம குழந்தைகளைத் தவிர படிக்க வற்ற பத்துப் பதினைஞ்சு பிள்ளைங்க…”
“குடிசையிலேர்ந்து வர்ற ஒசி கேசுங்க. அதுங்க ஆளுக்கு ஐம்பது ரூவா தரட்டும்.தவிர இருவது ரவிக்கைத் துணி போடு. விற்றால் ஏதோ உன் ஊசி நூல் செலவுக்காவது ஆச்சு”
“ரவிக்கை எம்பிராய்டரி செய்யறேன் சரி. விக்கறது உங்க பொறுப்பு. சேரி குழந்தைங்க எங்கே போகும் அந்தனை காசுக்கு? இப்போதுதான் அவங்களுக்குப் படிப்பிலே ஒரு ஆர்வம் வந்திருக்குது. முடியாததுங்களுக்குத் தானே நான்…!!
“அதுதான் ஏன்னு கேட்கறேன்?”
“நமக்கு வேண்டியது இருக்குப்பா.”
“ஏன்… கார் வாங்கினா ஏறி வர மாட்டியா? வைரம் வாங்கினா போட்டுக்க மாட்டியா?”
“அப்படி ஆசைப்பட ஆரம்பிச்சா முடிவேயில்லைங்க. இந்தப் பிள்ளைங்களும் ஓசி இல்லை. நேத்து வச்ச புளிக்குழம்பு கத்தரிக்காய், ரேவதி வீட்டில் காய்ச்சது. எத்தனைப் பிஞ்சா இருந்தது. போன மாசம் மருது பத்து தேங்காய் கொண்டு வந்து போட்டான். நம்ப தோட்டத்தில் பூத்திருக்க செவ்வந்தி கையகலத்துலே என்ன வாசனைங்கறீங்க ஆசிரமக் குழந்தைங்க வந்து நட்டு வச்சது அது. தினம் உங்களை பிரேயரிலே நிலைச்சுக்குவோம்ங்கற போது வற்ற நிறைவு பணங்காசிலே கிடைக்காதுப்பா.”
“நான் ஆயிரத்தைப் பற்றிப் பேச நீ தேங்கா மாங்காயிலேயே ரு காலத்துக்குதவாத அபூர்வ ரகம் நீ.”
மஹிபன் எரிச்சலுடன் திரும்பிப் படுத்துக் கொண்டான்,
படுத்த பொன்னிக்கு எண்ணக் குழப்பத்தில் தூக்கம் விலகிப் போனது. ‘ஊருக்கு ஒதுங்கியென்றாலும், கடன்பட்டு தானென்றாலும் சொந்த வீடு – நல்ல வேளல- மணியாய்க் குழந்தைகள்… இத்தனை நிறைவிருக்க பிறரை நினைத்து நாலு நல்லது செய்ய வேண்டியது அவசியந்தானே? ஒரு வேளை தினம் இவர் நச்சரிப்புத் தாளாது சுமுக குடும்பத்திற்காக, நான் மாற வேண்டியது வருமோ என்ற சிந்தனையில் சிக்கி அவள் வெகுநேரம் கண்விழித்துக் கிடந்தாள்.
மறுநாள் காலை வேலைகளை முடித்து பூ கோர்த்தபடி. ஊஞ்சலில் அமர, மனம் தெளிவாக இருந்தது.
“யக்கா… நீங்க வயர் கூடை பின்னக் கத்துத் தந்தீங்களா, இப்போ போட்டதுல ரெண்டு மூணு வித்துக்கூடப் போச்சு. கூட ரெண்டு டிசைஸன் சொல்லித் தாங்களேன்” என்று உற்சாகமாய் வந்து நின்ற அண்டை வீட்டுத் தாவணிகளுக்கு அரை மணி நேரம் செலவிட்ட பிறகு மனம் மேலும் அமைதிப்பட்டிருந்தது.
இறைவன், ஜோடிகளைக் காரணமில்லாது சேர்ப்பதில்லை. இந்த வழி கணவருக்குப் புரிய – பிடித்துப் போக சேர்ந்தே எத்தனையோ நல்லவற்றைச் செய்யலாம் என்ற நிம்மதி அழுத்தமாய் உள்ளே வந்து உட்கார-அவளும் தைக்க மிஷின்முன் அமர்ந்தாள்.
மொத்த வேலைகளையும் முடித்து அடுக்கி நிமிருகையில் மணி நான்காகியிருந்தது. சேமியாவைக் கிளறி முடித்து, முகம் கழுவும்போதே பிள்ளைகளின் குரல் கேட்டது.
“அம்மா. இந்த மாசமும் நாங்கதான் கிளாஸ்ல முதல். சிரிப்பும் பேச்சும் உச்சஸ்தாயியில் கேட்டன. அவர்களின் கனத்த பள்ளிப் பைகளை வாங்கியவள், குனிந்து பிஞ்சர் உன்னங்களில் முத்தமிட்டாள்.
“ஜில்லூணு வாசமா இருக்கிங்கம்மா”
“சரி, இரண்டு பேருமா முதல் இடம்?”
“பின்னே? மிட்டாய் கிடைச்சிருக்கு.”
களைப்பை மீறி முகம் முழுதும் விரிந்த சிரிப்புடன் மகன் கைவிரித்துக் காட்டிவான்.
“ஏது இத்தனை?”
“டீச்சர் கொடுத்தாங்க. மீதி, ஹெட் மிஸ்ட்ரஸ் தந்தது.”
“பரவாயில்லேயே”
“எப்பவும் விடாத முதல் ரேங்க வாங்கறோமாம். நல்ல பிள்ளைங்களா இருக்கோமாம்.”
“அட இதென்ன புதுக்கதை” பொன்னி, பூரிப்புடன் மறுபடி குழந்தைகளை முத்தமிட்டாள்.
ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பந்து மூவரையும் இமை கொட்டாது பார்த்து நின்ற மஹிபன் –
“உண்மைக் கதைதான் பிரின்ஸிபல் என்னிடமும் இவங்களைப் பற்றி ஒரே பாராட்டு, படிப்புதனிர, நண்பர்களுக்கு உதவற நல்ல குணம், ஒருத்தர்கூடேயும் சண்டைன்றதே. கிடையாது. சுத்தம், மரியாதை… இப்படி நிறைய தற்சான்றிதழ் போ. பிரைமரி பள்ளியின் ஸ்பெஷல் பரிசு இவங்க ரெண்டு பேருக்கும் கிடைக்கப் போகுதாம்…”
அவள் கண்கள் பூரித்து நனைந்தன.
“பெருமை, பாராட்டு எல்லாம் உனக்குத்தான் பொள்னி!” மெல்ல சொல்ல, மறுப்பாய்த் தலையசைத்தாள்.
“கடவுள் அருமையான குழந்தைகள் தந்திருக்குப்பா”
“ஒரு குழந்தை மட்டும் இப்படி பரிசு வாங்கினா அதிர்ஷ்டம் அல்லது நீ சொல்றது போல கடவுள் கிருபை – இரண்டு பேரும் என்கிற போது நல்ல வளர்ப்பும் காரணம் பொன்னி. தவிர ஷங்கள் குழந்தைகள் பற்றி ஒரே புகார்.”
“குட்டிகளா, யூனிபாஃர்ம் மாற்றிகிட்டு கைகால் கழுவிட்டு வாங்களேன்” என்று பிள்ளைகளை அனுப்பியவள் கேட்டாள்.
“அதெதுக்கு உங்ககிட்ட சொல்லணும்?”
“அவங்க பெற்றோர் வர்றதேயில்லையாம் – வரச் சொல்லி | என்கிட்டே சொல்வாங்க. சுத்தமா வர்றதில்லை – ஈதா சண்டை, படிப்பிலே போதாதுன்னு…”
“குழந்தைகளோட உட்கார நேரம் கிடைக்க மாட்டேங்கிறது அவங்களுக்கு,”
“நூலைப் போல சேலைங்கறதுலே உண்மையிருக்கும் போல. உள்அன்பு, இரக்கம் பார்த்து நம் குழந்தைங்க மளசிலேயும் அவை படிஞ்சு போச்சு. டியூஷனுக்கு வர்ற பிள்ளைங்களோட இதுங்களும் உட்கார்ந்து கருத்தா படிச்சிடுதுங்க. பணத்தைவிட இப்படி பேர் வாங்கறது நிறைவுதான்.”
உள்ளத்தில் ‘கம்’ மென்று பொங்கிய சந்தோஷம் கண்களில் திரையிட, அதை மறைக்க அவள் அனைவருக்கும் காபி கலக்க சமையலறைக்குள் நுழைந்தாள்.
தட்டில் பால், காபி கோப்பைகளுடன் வந்தவள் கேட்டாள்:
“ஏங் குட்டி அப்பா எங்கே?”
“தோட்டத்துக்கு,”
கொல்லையில் கையசுலச் செவ்வத்தியைப் பறித்து முகர்ந்து கொண்டிருந்தவன் மெல்ல கேட்டான்:
“வாசனைகூட அபாரமா இருக்குதுல்ல?”
“ஆமாப்பா – இது ஒரு அபூர்வ ரகம்.”
“உன்னைப்போல” என்றவன், பூவை அவள் பின்னலில் செருகினான்.
– ராஜம். ஏப்ரல் 1994.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.