இதுவும் கடந்து போகும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 16, 2025
பார்வையிட்டோர்: 7,369 
 
 

ஞாயிறு மதிய உணவு உண்டு , சற்று அசந்து உறங்க ஆரம்பித்தான் ராகவன்.

செல்போன் சிணுங்கியது , ஒரு வாட்ஸ் ஆப் தகவல் நண்பன் கிருஷ்ணனிடம் இருந்து வந்தது.

அதில் வந்த செய்தியை பார்த்ததும் ராகவனுக்கு தூக்கம் தொலைந்தது.

“நண்பா , ராகவா நான் தூக்கு மாட்டிகிட்டு சாக போறேன், நான் இந்த உலகத்தில இருந்து யாருக்கும் எந்த பிரயோசனம் இல்ல. என்ன பெத்தவங்களும் , என் நண்பர்களும் எனக்கு கஷ்டத்துல உதவல. அவங்களே என்னை இந்த கடன் பிரச்சனையில் இருந்து காப்பாத்த நினைக்கல. வேற யாரு என்னை காப்பாத்துவாங்க , அதான் நான் சாக போறேன் “ என்ற தகவல் வந்தது.

அதனை கண்டதும் , ராகவன் பதில் அனுப்பினான்.

“நண்பா கிருஷ்ணா , நீ சொல்றது உண்மை தான். நீ இந்த உலகத்தில் வாழ்ந்து யாருக்கும் பிரயோஜனம் இல்லை தான். செத்து போயிரு. “ என்று அனுப்பி விட்டு , புலம்ப ஆரம்பித்தான் ராகவன்.

“இவனுக்கு வேலை இல்லை , எப்ப பார்த்தாலும் , சாக போறேன் , ஊரை விட்டு ஓட போறேன் , யாருக்கும் சொல்லாம எங்கயாவது போயிருவேன் என்று எல்லார் கிட்டேயும் மிரட்டி கிட்டே இருந்தா , போகட்டும் என்று தான் எல்லாரும் சொல்வார்கள். பிரச்சனைய முடிக்க என்ன வழி என்பதை யோசிப்பதே இல்லை.”

என்று புலம்பி தீர்வதற்குள் , வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ கால் (போன்) வந்தது.அதில் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டு இருப்பதை நேரடியாக காண்பித்து கொண்டு இருந்தான் கிருஷ்ணன்.

அதனை கண்டதும் ராகவன், சட்டென எழுந்து அவன் வீட்டை நோக்கி ஓடினான்.

கிருஷ்ணன் வீடு , பக்கத்து தெருவில் தான் இருக்கிறது, நடந்து சென்றால் ஐந்து நிமிடத்திற்குள் சென்று விடலாம்.

கிருஷ்ணன் வீட்டை அடைந்தான். கிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லை.

உறவினர்களின் திருமண நிகழ்விற்கு சென்று உள்ளனர் கிருஷ்ணனின் அம்மா அப்பா.

வீட்டிற்குள் சென்று , கிருஷ்ணனின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றான் ராகவன்.

சில நிமிட போராட்டம் , கழுத்தில் இருக்கி கொண்டு இருந்த முடிச்சுகள் , ராகவனால் அவிழ்கபட்டது.

கிருஷ்ணன் மூச்சிரைக்க கீழே விழுந்தான். அவனை காப்பற்றிய திருப்தியில் ராகவனும் மூச்சிரைத்த படி அமர்ந்தான்.

“பைத்தியமாடா , நீ. உயிரை விட்டுட்டா எல்லா பிரச்னையும் முடிஞ்சிருமா. நீ போனதுக்கு பிறகு அந்த பிரச்னையும் உன் பெத்தவங்களுக்கு தான் போகும். எந்த பிரச்னையும் நேரா எதிர் கொள்ள தைரியம் இருக்கணும். மத்தவங்கட்ட பேசும் போது நல்ல விதமா பேசணும் , சாக போறேன்னு அடிக்கடி சொன்னா , உன்கிட்ட பேச யாரும் வரமாட்டாங்க. உன்னால வந்த பிரச்சனைய நீ எதிர் கொள்ள பயந்தா , உன் கூட இருக்கிறவங்க எப்படி அதுக்கு பொறுப்பு ஏத்துப்பாங்க. இதுவும் கொஞ்ச காலம் தான் , நீ நல்லா வருவ என்று, முதல்ல நீ நம்பனும். இதுவும் கடந்து போகும் , வாழ்க்கையில நல்லது, கெட்டது என்று மாறி மாறி வரும் , அதனை நாம ஏத்துக்கிற பக்குவத்திற்கு வரணும் , அவ்வளவு தான்.” என்று பேசி , கன்னத்தில் அறையாத குறைக்கு பளீர் என்று பேசி முடித்தான் ராகவன்.

ராகவனின் பேச்சு , கிருஷ்ணனுக்கு நல்ல பாடம் என்றாலும் , அதனை அந்த சூழலில் அவனால் ஏற்று கொள்ள கொஞ்ச நேரம் ஆகும்.

மனம் மாற முயற்சி செய்து கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

இதுவும் கடந்து போகும் என்பது கிருஷ்ணனுக்கு மட்டும் அல்ல, அனைவருக்குமே.

# இதுவும் கடந்து போகும் – இதுவும் சிறிது காலம் தான் , என்று வாழ்க்கையின் கடினமான நேரங்களில் நம் அனைவரின் மனதில் பதிய வேண்டும்.

# வாழ்க்கை வாழ்வதற்கே , மரணத்தை தேடி நாம் போக வேண்டாம் – அது வரும் வரை , வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம்.

மணிராம் கார்த்திக் என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *