இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 5,218 
 
 

அன்று ஒரேகளேபரம் வீட்டில். சம்பந்தி வரப்போறார். என்ன டிபன் செய்வது என்று ஆளாளுக்கு மெனு யோசிக்க கடைசியாய் ஒன்று முடிவாயிற்று. அதொன்றும் பெரிய ‘டிஷ்’ இல்லைதான்., என்றாலும் அதை அப்படிச் செய்வதென்றால் பெரிய வேதனைதான். எப்படிச் செய்வது?! அது நல்லா வரணுமேன்னு பக்கத்துவீட்டுல கேட்டு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் போன்போட்டுக் செய்முறை கேட்டு கடைசில ‘யூ டியூபில’ தேடி… சரியாப் புரியாம யூடியூபென்ன எக்ஸ் வொய் டபிள்யூ டியூப் வரை தேடி கடைசியாய் ஒரு உபாத்தியார் சொன்னது கொஞ்சம் பிடிபட்டது. ஆனால், சம்பந்திதான் ஏதோ வரமுடியலை ‘சாரி’ன்னு போன் பண்ணீட்டார். அதுக்காக மெனக்கெடாம முடியுமா?! அந்த டிஷ் அப்படி!

வெள்ளை ரவை உப்புமா…! பட்டண ரவை உப்புமான்னு செய்வாங்களே அது ஹோட்டல்ல, கல்யாணத்துல எல்லாம்செஞ்சா எப்படி பொடி பொடியா உதிரி உதிரியா வருது. நமக்கு மட்டும் வீட்டுல வரவே மாட்டேங்குதே! சட்டியோடு ஒட்டி உறவாடுதே ஏன்? ஏன்?

நாங்க செஞ்சா பிசுபிசுன்னு சட்டியில இருந்து வரதே இல்லை. வாத்தியார் சொன்னா மாதிரி செஞ்சா அட, அது சட்டியிலிருந்து சட்டுனு தட்டுல விழுந்துட்டுது! ஆனா சட்டாகப்பைதான் விழுந்த உப்புமாத் தட்டிலிருந்து பிரிஞ்சுவராம பிரச்சனை பண்ணிச்சு. ஏன்?

அந்தக் காலத்துலேல்லாம் அம்மா அடுக்களையில் குழந்தைக்கு அஞ்சு வயசானதுமே வீடு கூட்ட சமைக்க கத்துத்தருவா! அப்போ வந்தது. இப்போ, மெத்தனம் நான் யூடியூப் பார்த்துக் கத்துக்குவேன், இல்லைனா இருக்கவே இருக்கு ‘சுகினு’ சொல்றதால சமையலும் வரதில்லே.. சாப்பிட வீட்டுக்கு உறவும் வரதில்லே…!

1 thought on “இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *