கதையாசிரியர்: , ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2025
பார்வையிட்டோர்: 22,300 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு வயசு இருபத்தேழுதான். வருஷக் கணக் கிலாவது அபார குணத்திலாவது எனது வாழ்க்கை உயர் வானதல்ல. ஆனாலும் அதற்குச் சற்று மதிப்பு உண்டு. மலர்போல் மெல்லிய ஓர் உள்ளத்தை நோக்கி வண்டு பறந்துவர, அது கால் வைத்த விளைவு அம்மலர் அகாலத்தில் பக்குவமான கனியாக மாறியது. 

அந்தக் கதையின் விஷயம் மிகவும் சிறியது. அதைச் சுருக்கமாகவே எழுதுவேன். சிறியதாகையால் சாதாரண மானதென்று தவறான எண்ணம் கொள்ளாதவர்களே அதன் சுவையை உணர்வார்கள். 

கல்லூரியில் படித்துத் தேர்ச்சிபெற வேண்டிய பரீக்ஷைகள் யாவற்றிலும் தேறிவிட்டேன். சிறு பிள்ளை யாக இருக்கும்பொழுது என் அழகிய முகத்தைச் சிமூல புஷ்பத்தோடும், களாப் பழத்தோடும் ஒப்பீட்டு எங்கள் உபாத்தியாயர் வேடிக்கையாகக் கூறுவார். அது எனக்கு அதிக லஜ்ஜையாக இருக்கும். வயசு ஆக ஆக, “மறு பிறப்பிலும் (அப்படி ஒன்று இரு பக்ஷத்தில்) என் அழகான முகமும் வாத்தியார் அதைக் கேலியாக வர்ணிப் பதும் திரும்பி வருமா ?” என்று சில சமயம் நினைத்துக் கொள்வேன். 

என் தந்தை ஒரு சமயம் பரம ஏழை. பின்னால் வக்கீல் தொழிலில் ஏராளமான பணம் சம்பாதித்தார். ஆனால் அதை அநுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. உயிர் விடும்போதுதான் அவருக்கு ஒழிவு ஏற்பட்டது. 

எனக்கு அப்போது வயசு மிகவும் குறைவு. அம்மாவின் கையில் வளர்ந்து மனிதனானேன். தான் எளிய குடும்பத்துப் பெண், நாங்கள் பணக்காரர் என்பதை அவள் மறக்கவில்லை ; நானும் அதை மறக்காமல் இருக்கும்படிச் செய்தாள். குழந்தைப் பருவம் தொட்டு என்னைத் தரையில் விடாமலே எடுத்து வளர்த் தார்கள். அதனாலேயே கடைசி வரையில் நான் அரை குறையாக நிற்கிறேன். என்னை இன்றைத் தேதிக்குப் பார்த்தால்கூடப் பார்வதியின் மடியில் வீற்றிருக்கும் செல்வப் பிள்ளையாகத் தோன்றும் உங்களுக்கு. 

எனக்கு முக்கிய வாரிசுதார் என் மாமாவே. அவர் என்னைவிட ஆறேழு வருஷம் பெரியவராக இருப்பார். ஆனால் புதை மணலைப்போல் எங்களுடைய குடும்பத்தைத் தம்முள்ளே இழுத்துக்கொண்டு வீட்டார். அவர் அறியாமல் எதுவுமே நடக்காது. இக்காரணத்தால், எதன்பேரிலும் எனக்கு அக்கறையே விழவில்லை. 

பெண்ணைப் பெற்றவர்கள்மட்டும் நான் நல்ல பிள்ளை யென்பதை அறிவார்கள். கெட்ட பழக்கம் எதுவுமே என்னை அணுகவில்லை. பெரிய மனிதனாக வேஷம் போடும் பிரமேயமும் இல்லை. உண்மையில், பெருந் தன்மை என்னிடத்தில் இருந்தது. தாயின் கட்டளைப்படி நடக்க எனக்கு ஆற்றல் உண்டு. அந்தப்புரத்திற்கு அடங்கிச் செல்லும்படியே என்னைத் தயாரித்து வீட்டார்கள். அப்படிச் சுயமாக வரனைத் தேடும் கன்னிகை யாராவது இருந்தால் எனக்குள்ள இந்தச் சிறந்தலக்ஷணத்தைக் கவனத்தில் வைத்துக்கொள்ளட்டும். 

பெரிய இடங்களிலிருந்து சம்பந்தத்திற்குப் பெண்கள் வந்தனர். ஆனால் மாமா இருக்கிறாரே, இந்த உலகத்தில்” என்னுடைய பாக்கிய தசைக்கு அவர் பிரதான ஏஜெண் டானபடியால், விவாக சம்பந்தத்தைப்பற்றித் தனியான அபிப்பிராயங்கள் உடையவர். பணக்காரவீட்டுப் பெண் ணென்றால் அவருக்குப் பிடிக்காது. அகத்துக்கு வருகிற நாட்டுப்பெண் குனீந்த தலையுடன் வரவேண்டும் என்பார். ஆனால் பெண்ணின் ரூபத்தைப்பற்றி அவருக்குள்ள ஆசை அவர் எலும்புவரையில் ஊறியிருந்தது. ஏமாந்த வரையில் பணத்தைக் கறந்துகொள்ள வேண்டும்; அதைக் கொடுக்கும் பெண்ணைப் பெற்றவன்மட்டும். முகத்தைச் சுளித்துக் கொள்ளக்கூடாது; இதுதான் அவர் அபிப்பிராயம். 

என்னுடைய நண்பன் ஹரிசனுக்குக் கான்பூரில் வேலை. லீவுக்காக அவன் கல்கத்தாவுக்கு வந்திருந்தபோது என் மனசைக் கிளறிவிட்டான். “அடே! பெண் என்றால். அந்தமாதிரிக் குட்டி கிடைக்கவேணும்!” என்றான். 

நான் எம்.ஏ., பரீக்ஷையில் தேர்ச்சிபெற்றுச் சில நாட்களே ஆயின. எனக்கு ஓய்வு நேரம் யதேஷ்டமாக இருந்தது. பரீக்ஷையின் கவலை இல்லை. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஊக்கமும் இல்லை ; வேலை இல்லை; எதன் மேலும் இச்சை இல்லை. எனக்கு இருந்- தவர்களெல்லாரும் உள்ளே ஓர் அம்மாவும் வெளியே ஒரு. மாமாவுமே. 

அளவற்ற அவகாசமென்னும் பாலையின் நடுவில் என் உள்ளம் பெண்களின் உருவம் என்னும் கானல் நீரையே. பார்த்து மயங்கி நின்றது. ஆகாயத்தில் அவர்களுடைய கருவிழிகள் தோன்றின; காற்றில் அவர்கள் வீடும் மூச்சை உணர்ந்தேன்; இலைகளின் ஓசையில் அவர் களுடைய ரகசியப் பேச்சைக் கேட்டேன். 

இந்த நிலையில் ஹரிசன் வந்து, “பெண்ணென்றால் அப்படி இருக்கவேண்டும்” என்று சொல்லும்போது என் மனம், வஸந்தமாருதம் அணைந்த மகிழந்தளிரைப் போல் துடிதுடித்தது. ஒளியும் நிழலும் புனைந்து இன்பக் கனவு கண்டது என் மனம். ஹரிசன் ரஸிகன் ; எதையும் சுவையோடு வர்ணிக்கும் சக்தி அவனுக்கு உண்டு. அவன் அந்தப் பெண்ணைப்பற்றிப் பேசப் பேச எனக்கு அதிக வேட்கை மூண்டது. “இதை மாமாவிடம் மெல்ல விட்டுப் பாரேன்” என்றேன் ஹரிசனோடு. வளையக் கட்டுவதில் அவனுக்கு யாரும் இணையே இல்லை. அவனுக்கு எங்கேயும் நல்ல பேர். அவன் அகப்பட்டுவிட்டால் அவனை விடவேமாட்டார் மாமா. என்னுடைய விவாகத்தைப் பற்றி வார்த்தை வந்தது. பெண்ணைக் காட்டிலும் பெண்ணின் தகப்பனாரே அவருக்கு தகப்பனாரே அவருக்கு முக்கியம். ஒரு காலத்தில் அவர்கள் வீட்டில் லக்ஷ்மி தாண்டவம் ஆடினாளாம்; இப்பொழுது அவ்வளவு இல்லையாம். தம் ஊரில் பழைய வம்ச கௌரவத்துடன் வாழமுடியா தெனக் கண்டு அவர் மேற்குப் பிரதேசத்தில் வீடுவாசல் அமைத்துக்கொண்டு எளிய வாழ்க்கையையே நடத்து கிறாராம். ஒரே பெண்ணைத் தவிர வேறே பிள்ளைகுட்டி இல்லையாம். அதனால் மீதியுள்ள ஆஸ்தி சட்டெனக் கரைவதற்கு ஹேது இல்லை. 

எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. பெண்ணுக்குப் பதினைந்தாவது பிராயமென்று கேட்டவுடன் மாமா வுக்குச் சப்பிட்டுவிட்டது. வம்சத்தில் ஏதாவது தோஷம் இருக்குமோ? அதுவும் இல்லை. தேடிப் பார்த்தும் தகுந்த வரன் கிடைக்கவில்லையாம். இப்போது கல்யாணச் சந்தையில் பிள்ளைகள் கிடைப்பதே குதிரைக் கொம்பாய் இருக்கிறது; அதற்குமேல் வரதக்ஷிணை. இவற்றை யெல்லாம் உத்தேசித்துப் பெண்ணின் தகப்பனார் கல்யாணத்தை ஆறப்போட்டுவிட்டார். ஆனால் பெண் ணின் வயசு நில்லென்றால் நிற்குமா? 

எதுவானால் என்ன? ஹரிசன் பேச்சுப் பேசிக் காரியத் தைச் சாதிப்பதில் கெட்டிக்காரன். மாமாவை வழிக்குக் கொண்டுவந்துவிட்டான். விவாகத்தின் பூர்வாங்கங்கள் யாவும் தடையின்றி நடந்தேறின. கல்கத்தாவைத் தவிர உலகத்திலுள்ள மற்ற எல்லா இடமும் அந்தமான் தீவைச் சேர்ந்தவையென்பது மாமாவின் எண்ணம். வாழ்வில் ஒரு தடவை ஏதோ காரியமாகக் கோன் நகர்வரை அவர் போயிருந்தார். மாமா மட்டும் மனுவாய் இருந்திருந்தால் ஹாவ்ரா பாலத்தைக் கடப்பதே சாஸ்திரத்துக்கு விரோத மென்று எழுதிவிட்டிருப்பார். என் கண்ணாலேயே பெண்ணைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று எனக்கு ஆவல். அதை வெளியிட எனக்குத் தைரியம் இல்லை. பெண்ணைப் பார்த்துவீட்டு வரவேண்டுமென்ற சம்பிர தாயத்துக்காகப் பீனு அண்ணாவை அனுப்பினார்கள். அவனுடைய திறமையிலும், அவன் சொல்லிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. பீனு அண்ணா திரும்பி வந்ததும், “சுமாராக இருக்குமென்று நினைத்தேன். பத்தரை மாற்றுத் தங்கந்தான்!” என்றான். பினு அண்ணா எதையும் மிகைப்படுத்திக் கூறவே மாட்டான். ஒன்றை நாம், “முதல்தரம்” என்றால் அவன், “என்னவோ இருக் கிறது ஒரு மாதிரியாக” என்பான். அவனே இப்படிச் சொல்லும்போது முடிபோடும் பிரம்மாவுக்கும், மயலை எழுப்பும் மாரவேளுக்கும் இடையே முரண் ஒன்றும் இராமல் காரியம் முடிவது என் அதிருஷ்டமென்றே கருதினேன். 


விவாக சுபமுகூர்த்தத்திற்குப் பெண்வீட்டாரே கல்கத்தாவுக்கு வந்தார்களென்று கூறவேண்டியதில்லை. பெண்ணின் தகப்பனாரான சம்புநாத பாபு, ஹரிசனின் வார்த்தையை நம்பினாரென்பதற்கு அத்தாட்சியாக, அவர் விவாகத்திற்குச் சில தினங்களுக்கு முன்பு என்னை நேரே வந்து பார்த்துவீட்டுத் திருப்தியுடன் சென்றார். கிட்டத் தட்ட அவருக்கு வயசு நாற்பது இருக்கும். தலைமயிர் நரைக்கவில்லை. மீசையில் மட்டும் நரை தென்பட்டது. கண்ணுக்கு நன்றாக இருந்தார். ஒரு கூட்டத்தின் நடுவில் பார்த்தால் அவருடைய கம்பீரமான தோற்றம் தனியே எடுப்பாகத் தெரியும். அவருக்கு என்னைப் பிடித்திருக்கு மென்று நம்புகிறேன். ஆயினும் அதை அறிவதுதான் சற்றுக் கடினம். ஏனென்றால் அவர் வாயே திறவாத மனிதர். அவர் சொல்லும் இரண்டொரு வார்த்தையைக் அழுத்திச் சொல்வதில்லை. ஆனால் மாமாவின் வளவளவென்று பேச்சுப் பொரிந்துகொண் டிருந்தது. பணத்திலாகட்டும், கௌரவத்திலாகட்டும், இந்தப் பெரிய நகரில் தமக்கு நிகரானவர் எவரும் இல்லை. என்பதை ஸம்பந்தி வீட்டாருக்கு நினைவுறுத்திக் கொண்டே யிருந்தார். சம்புநாத பாபு அந்தச் சம்பாஷணையில் கலந்து கொள்ளவே இல்லை. “உம்” என்றுகூட எப்போதாவது மறந்துபோய்ச் சொல்லவில்லை. மாமா பேசச் சளைக்கவே இல்லை. சம்புநாத பாபு கப்சிப் பென்று இருப்பதைக் கவனித்து, உணர்ச்சி இல்லாத ஆசாமியாக இருக்கிறானே என்று மாமா எண்ணினார். பெண்ணைக் கொடுப்பவர்களிடத்தில் எந்தக் குறை இருந்தாலும் பாதகமில்லை, உணர்ச்சியோடு இருப்பதுதான் பெருங்குற்றமாகும். அது இராதுபோகவே மாமாவுக்கு மனத்துள் சந்தோஷமே. சம்புநாத பாபு எழுந்து போகும்போது, மாமா சுருக்கமாய் மாடியில் இருந்த படியே அவருக்கு வீடை கொடுத்தாரே தவீர வாசல் வரையில் வந்து வழியனுப்பவே இல்லை. 

வரதக்ஷிணை விஷயம் இருதரத்தாருக்கும் மனஸ் தாபம் இல்லாமல் இனிது நிறைவேறியது. இந்தமாதிரி விஷயங்களில் மாமா தம் சாமர்த்தியத்தைத் தாமே மெச்சிக் கொள்வது வழக்கம். அவர் பேசினால் எதிரில் பேசுபவன் முன்னுக்கேறச் சிறிதுகூட இடம் இராது. பணம் எவ்வளவென்று ஸ்திரமாகிவிட்டது. அதற்கு மேல் பெண்ணுக்கு என்ன என்ன நகைகள் போடு வார்கள், எத்தனைச் சவரனில் வளையல்கள், வெள்ளிப் பாத்திரங்கள் எவ்வளவு ரூபாய் எடையில், இந்தக் கணக்கு வழக்கெல்லாம் தீர்ந்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது. இவை விவாகத்தின் முக்கிய அம்சங்கள் என்பதைமட்டும் அறிவேன். மாமா ஒன்றையும் விடமாட்டார்; அவர் மிகவும் பக்காப்பேர்வழி என்று எங்கள் குடும்பத்தார் சிலாகித்தனர். எங்களுக்கு அளவற்ற பொருள்கள் இருந்தாலும், சம்பந்திக்கு மேலும் செய்வதற்குச் சக்தியில்லையென்று தெரிந்தும் கடைசி வரையில் வாட்டி எடுத்துவிடுவார். பீடித்தால் குரங்குப் பிடிதான். 

எனக்குப் ‘பச்சை பூசுதல்’* தடபுடலாய் நடத்தினார். அவர் எடுத்த சீரை மதிப்பீட முடியாது; வரிசையைத் தூக்கிய ஆட்களைக் கணக்கிடவே ஓர் ஆளைப் போட வேண்டும். “சம்பந்தி வீட்டார் இதையெல்லாம் பார்த்து வெட்கிப் போகவேண்டியே செய்தோம்” என்று சொல்லும்போது அம்மாவும் மாமாவுடன் கலந்து கொண்டு நகைத்தாள். 

பாண்டு வாத்தியம், மேளம் இவற்றின் ஆரவாரமும் ஜனசந்தடியும் சேர்ந்து மதம்பீடித்த யானைக் கூட்டம் தாமரைப்பூ நிரம்பிய தடாகத்தை அலைத்துக் குழப்புவது போல் இருந்தது. இந்தத் தடபுடல்கள் புடைசூழ விவாக விடுதிக்கு விஜயம் செய்தேன். மோதிரங்கள், மாலைகள், ஜரிகை ஜாலர்கள் இவற்றால், நடந்து செல்லும் என் சரீரம் ஒரு நகைக் கடையாகவே காட்சி அளித் திருக்கும். மாப்பிள்ளையாக வரப்போகிறவன் எவ்வளவு தாங்குவான் என்பதை ஸம்பந்திகளுக்கு நிரூபீக்கவா இந்தக் கூத்து? 

கல்யாண வீட்டில் நுழைந்தவுடன் மாமாவின் முகம் வாட்டமுற்றது. பீள்ளை வீட்டார் எல்லோரும் அமருவ தற்குப் போதுமான வசதி இல்லை. அதற்குமேல், ஏற்பாடெல்லாம் நடுத்தரமாகத்தான் இருந்தன. சம்புநா தபாபு ஸம்பந்திகளை நன்றாக வரவேற்கவில்லையாம். அவர் வாயைத் திறக்கவே இல்லை. கச்சை இழுத்துக் கட்டிக்கொண்டு, கத்திக் கத்திக் குரல் கம்மிப்போய் நடுத்தலை வழுக்கையாகி, கரியைவிடக் கறுப்பாய்ட் பிரம்மாண்டமான தேகமுடைய அவருடைய நண்பர் கைகுவித்து வணங்கிச் சிரித்த முகத்துடன் வீநயமாக மேளகாரன் முதல் ஸம்பந்தி வரையில் எல்லாருக்குப் மரியாதை செய்து உபசரிக்காமல் இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே எல்லாம் விரஸமாக முடிந்திருக்கும். 

மணப்பந்தலில் நான் உட்கார்ந்த சிறிது நேரத்தி கெல்லாம் மாமா சம்புநாத பாபுவைத் தனியாக அழைத்து என்னவோ பேசினார். சம்புநாத பாபு என்னிடம் வந்து, “அப்பா, இந்தப் பக்கம் வர முடியுமா?” என்றார். 

விஷயம் இதுதான்: உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது லக்ஷ்யம் இராமற் போகாது. மாமாவின் ஒரே லக்ஷ்யம் எந்த விஷயத்திலும் ஏமாந்து போகாமல் இருப்பது. ஸம்பந்தி, பொன்னால் ஆன நகை என்று சொல்லிக் கில்டு நகையைப் போட்டிருந்தால் என்ன செய்வது? விவாக முடிச்சு ஏறிவிட்டால், அப்புறம் சண்டை போடுவதில் சுகமில்லை. இதற்காகவே. எங்களுக்குத் தெரிந்த நகை வியாபாரி ஒருவரை அழைத்து வந்திருந்தார். அடுத்த அறையில் மாமாவும் அந்த நகை வியாபாரியும் தராசு, உரைகல் யாவற்றையும் சித்தமாக வைத்துக்கொண் டிருப்பதைக் கவனித்தேன். 

சம்புநாத பாபு என்னை நோக்கி, “உன் மாமா சொல்லுகிறார் : விவாகம் ஆரம்பிக்கு முன்பே நகைகளை யெல்லாம் காட்ட வேண்டுமாம். நீ என்ன சொல்லு கிறாய்?” என்றார். 

நான் என்ன சொல்லுவது? தலை குனிந்து கொண்டேன். 

“அவனைக் கேட்பானேன்? நான் சொல்லுகிறேன்” என்றார் மாமா. 

சம்புநாத பாபு என் பக்கமாகத் திரும்பி, “அவர் சொல்லுகிறபடியே நடக்கவேண்டுமா? நீ சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லையா ?” என்றார். 

எனக்கு இந்த விஷயத்தில் ஓர் அதிகாரமும் இல்லை யென்பதைக் காட்டத் தலையை அசைத்தேன். 

“சரி, சற்று இருங்கள். குழந்தையின் உடம்பிலிருந்து நகை நட்டுக்களைக் கழற்றிக்கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு அவர் உள்ளே சென்றார். 

மாமா என்னைப் பார்த்து, “அனுபா! இங்கே நீ ” இருக்க வேண்டியதில்லை. பந்தலில் போய் உட்கார்” என்றார். 

அப்போது சம்புநாத பாபு, “வேண்டாம், இங்கேயே இரு அப்பா” என்றார். 

பெரிய துவாலை முடிச்சிலிருந்து நகைகளை ஜமக் காளத்தின்மீது ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். எல்லாம் பழைய மோஸ்தர் நகைகள்; தற்கால நாகரிக- வேலைப்பாடு உள்ளவை அல்ல. எவ்வளவு தடிமனோ. அவ்வளவு பளுவாக இருந்தன. 

நகைப் பரீக்ஷகர் ஒவ்வொன்றையும் எடுத்து எடை போட்டு மதிப்பீட்டார். “அரக்குப்பொடி, மட்டப்பொன் இவற்றின் கலப்பே இல்லை. அசல் தங்கமென்பதில் கொஞ்சங்கூட ஸந்தேகமே இல்லை” என்று சொல்லிக் கொண்டு மகர முகம் வைத்த ஒரு கெட்டிக் கொலுசை மாதிரிக்கு நசுக்கிக் காண்பித்தார். 

மாமா தம் நோட்டுப் புஸ்தகங்களில் நகையின் வகை களையும் அவற்றின் எடையையும் குறித்துக்கொண்டார். பின்னால் ஏதாவது கோளாறு நடந்தால் சரி பார்க்க இது மிகவும் உதவியாய் இருக்கும் அல்லவா ? கணக்குப் போட்டதில் பெண் வீட்டார் சொன்னதற்கு அதிகப்படி யாக நகைகளைப் போட்டிருந்தார்கள். 

மாமா வைரக் கடுக்கனை எடுத்து நகை வியாபாரி யிடம் கொடுத்து, “இதையும் பார். ‘இமிடேஷன்’ ஏதாவது……” என்று இழுத்தார். 

பூதக் கண்ணாடியின் மூலம் பார்த்துவிட்டுப் பரீக்ஷகர்,- “ஸ்வாமி, இதற்கென்ன சொட்டை! சீமைச் சரக்கு. அல்லவா?” என்றார். 

மாமாவுக்கு எல்லாம் திருப்தியாகி விட்டது. என்னைப்பார்த்து, “போயேண்டா பந்தலுக்கு” என்றதும், ”முகூர்த்தத்தை ஆரம்பிக்கலாமே, ஸம்பந்திவாள்” என்றார் சம்புநாத பாபுவை நோக்கி. 

“வேண்டாம். முதலில் சாப்பாடு ஆகட்டும். இலை போட்டிருக்கிறது” என்றார் சம்புநாத பாபு. 

“சாப்பாட்டிற்கு இப்போது என்ன அவசரம்? முகூர்த்தம் நடக்க வேண்டாமோ ?” என்றார் மாமா. 

“அதற்கென்ன அவசரம்? வாருங்கள் போகலாம்” என்றார் சம்புநாத பாபு. 

வெளிக்கு ஒன்றும் அறியாதவரைப்போல் தோன்றி னாலும், அவர் உள்ளழுத்தம் உடையவர் என்பது அப்போது தான் புரிந்தது. எழுந்திருக்காது வேறு என்ன செய்வது? பிள்ளை வீட்டாருக்கெல்லாம் ஸகல உபசாரத் துடனும் போஜனம் ஆயிற்று. எல்லோரும் சாப்பிட்ட பிறகு சம்புநாத பாபு என்னையும் ஓர் இலையில் உட்கார வைத்தார். மாமா அதைப் பார்த்து, “என்ன,முகூர்த்தம் இன்னும் நடக்கவில்லையே? விரதத்தோடு இருப்பவனா யிற்றே, அவன் எப்படிச் சாப்பீடுவான்?” என்றார். 

மாமாவின் சொல்லுக்குக் குறுக்கே நடப்பது என்னவோ என்னால் முடியாத காரியம். நான் சாப்பிட வில்லை. 

அப்போது சம்புநாத பாபு மாமாவீடம், “ஸ்வாமி, உங்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுத்து விட்டேன். நாங்கள் பணம் படைத்தவர்கள் அல்ல. உங்களுக்கு ஏற்றபடி மரியாதை செய்யச் சக்தி அற்றவன் நான். மன்னிக்க வேண்டும். நாழி யாகிவிட்டது. இன்னும் உங்களுக்கெல்லாம் கஷ்டம் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. நமஸ்காரம். இப்போது -” என்றார் நிதானமாகவே. 

”நாங்களெல்லாரும் தயாராகத்தானே இருக்கிறோம்?……ஆரம்பிக்கலாமே” என்றார் மாமா. “ஆனால் போய் வண்டி ஏற்பாடு பண்ணிவிட்டு வருகிறேன்” என்றார் சம்புநாத பாபு. 

“தமாஷ் பண்ணுகிறீர்களா என்ன ?” என்றார் மாமா; அவருக்குச் சிறிது சிறிதாகக் கோபம் ஏறியது.

“இதுவரையில் தாங்களே தமாஷ் பண்ணினீர்கள்” என்றார் சம்புநாத பாபு. 

மாமாவீன் முகம் பெரிதாகி விட்டது; வாயடைத்து நின்றார். 

“சொந்தப் பெண்ணுக்குப் போட்ட நகையில் சூது இருக்குமோ வென்று சந்தேகிக்கும் ஒரு குடும்பத்தாருக்கு என் ஒரே குழந்தையைப் பறிகொடுக்க நான் தயாராக இல்லை, ஸ்வாமி” என்றார் சம்புநாத பாபு. 

அதற்குமேல் அங்கே என்ன நடந்ததென்பதை உரைக்க எனக்குப் பிடிக்கவில்லை. லஸ்தர் குளோப்கள், வாழைமரம், பந்தற்கால்கள் யாவும் எகிறின. தக்ஷ யக்ஞத்தில் மூண்ட அமர்க்களத்தைப் பிள்ளை வீட்டார் அங்கே நடத்திவிட்டு வெளியே வந்தனர். நான் தனியாக வீடு திரும்பும்போது மேள தாளம் ஒன்றுமே கோஷிக்க வில்லை. தீவட்டி விளக்கெல்லாம் ஆகாயத்தில் மீனு மினுக்கும் நக்ஷத்திரங்களை ஏளனம் செய்துவிட்டு இருக்கிற இடம் தெரியாமல் அணைந்து இருளில் மறைந்தன. 


வீட்டில் எல்லோரும் கொதித்துக்கொண்டிருந்தார்கள். “பெண்ணைப் பெற்றவனுக்கா அவ்வளவு திமிர்? கலிகாலம் அல்லவா? பார்க்கலாம்! அவன் பெண்ணை வேறு இடத்தில் எப்படிக் கட்டிக் கொடுக்கிறான்?” என்றனர் யாவரும். பெண்ணுக்குக் கல்யாணமாகாது போனால், சனீ வீட்டதென்று இருக்கும் மனிதனுக்கு. இந்த மிரட்டல் எம்மாத்திரம்? 

இந்த வங்காள தேசமுழுவதும் நான் ஒருவனே விவாக தினத்தன்று பெண்ணைப் பெற்றவரால் தள்ளப் பட்டவன். மேளங்கள் கொட்டி மணக்கோலம் பூண்டும் எனக்கு நேர்ந்த இந்த அவமானத்திற்குக் காரணம் ஏதாவது கெட்ட கிரகத்தின் சேஷ்டையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தார்கள். 

மானநஷ்டத்திற்குப் போவதாக மாமா எகிறிக் குதிக்கத் தொடங்கினார். ஆனால் அவர் மீசையை முறுக்கி வீட்டுக்கொண்டதுதான் மிச்சம். 

என் மனத்துள் ஏமாற்றமும் அவமானமும் உண் டாயின. கலங்கிய இந்தச் சிந்தனையின் ஓட்டத்திற்குப் பக்கத்தில் மற்றொன்று தெளிந்து சென்றுகொண் டிருந்தது. என் அந்தக்கரணம், நான் கண்ணால் பார்த் தறியாத அவளையே நாடியது. இன்றளவும் என்னால் அவளை என்னிடம் அழைத்துக்கொள்ள முடியவில்லை. 

தூணின் மறைவில் நின்றுகொண் டிருப்பாள் அவள். பிரகாசமான நெற்றியில் அழகான குங்குமப் பொட்டு. உடலில் அருணவர்ணமான கூறைப் புடைவை. நாணத் தினால் சிவந்த முகம். அவள் இருதயத்தில் என்னவே தனை உண்டாயிற்றோ யார் அறிவார்? என் மானஸ் லோகத்தில் உலவும் அந்தக் கற்பகக்கொடி, தன் பூவீன் ஐசுவரியத்தை எனக்கு அளித்துவிட்டுத், தரையில் புரண்டு கிடந்தது. அதன் மணம் இன்னும் வீசுகிறது; அதன் தளிரின் மெல்லொலி இன்னும் என் செவியில் ஒலிக்கிறது. இந்த இன்பக் கனவிலிருந்து ஓர் அடி முன் வைத்தால் உண்மை எதிரே நிற்கிறது. அந்த ஆனந்தவல்லி என்னிடமிருந்து எவ்வளவோ தொலைவில் போய்விட்டாள். 

ஒவ்வொரு நாளும் சாயந்தரம், பீனு அண்ணாவீடம் சென்று அவனை முடுக்கிக்கொண்டே இருந்தேன். பினு அண்ணாவின் வர்ணனைகள் யாவும் அளவுக்கு மேல் போகாததால் அவை நெருப்புப் பொறிகளைப்போல் என் உள்ளத்தைப் பற்ற வைத்துவிட்டன. பெண் ஆச்சரிய மான அழகுடையவளென்று சொல்லக் கேட்டிருந்தேனே தவிர, அவளை நேரிலாவது, படத்தின் மூலமாகவாவது நான் கண்டதே இல்லை. எனக்கு எல்லாம் மங்கலாக இருந்தது. புறத்தில் அவளைக் காண்பது அரிது; அகத்துள் அவளைப்போல் பாவித்துக்கொள்ள முடிய வில்லை. இந்தத் திண்டாட்டத்தில் சிக்கி என் மனம் எந்த நிலைக்கும் வராமல் பேய்போல் அலையத் தொடங்கியது. 

என்னுடைய போட்டோவை அந்தப் பெண் பார்த்தா ளென்ற சமாசாரம் ஹரிசன் மூலமாகத் தெரியவந்தது. அவளுக்கு என்னைப் பிடித்துத்தான் இருக்கவேண்டும். என்னுடைய படத்தை அவள் மறைவாகத் தன் பெட்டி யில் வைத்திருப்பாளென்று என் அசட்டுப் புத்திக்குத் தோற்றும். யாரும் இராத சமயமாகப் பார்த்துத் தனிமை யில் அவள் அதை எடுத்துப் பார்ப்பாள். அவள் குனியும் போது அவளுடைய அலையும் கூந்தல் கொத்தாக அதன் மேல் படியும். யாரோ வரும் சப்தம் கேட்கவே பரபர வென்று சுகந்தம் கமழும் தன் மேலாடையில் அதை மூடிக்கொள்வாள். 

என் எண்ணங்களுக்கு ஒரு வரம்பில்லை. நாட்கள் சென்றன. ஒரு வருஷம் ஆயிற்று. மீண்டும் என்னிடம் விவாகப் பேச்சை எடுக்க மாமாவுக்கு மூஞ்சியே இல்லை. அம்மா மட்டும், ஊர் வம்பளப்பு ஓய்ந்ததும் இதைப் பற்றிப் பேச்சு எடுக்கலாம் என்றிருந்தாள். 

இந்தப் பக்கம் எனக்குக் கேள்வி என்னவென்றால், நல்ல இடம் ஒன்று வந்தபோது, பெண் தனக்கு விவாகமே வேண்டியதில்லை என்று ஒரே பிடிவாதமாய்ச் சொல்லி விட்டாளாம். இந்தச் செய்தியைக் கேட்டதும் என் மனம் துள்ளிக் குதித்தது. மனக்கண்முன் பார்த்தேன்: அவள் உணவை வெறுத்துவிட்டாள். கூந்தலை வாரிப் பின்னிக்கொள்வதில்லை. ‘ஏன் இப்படி இவள் நாளுக்கு நாள் இளைத்துப் போகிறாள்?’ என்று அவளுடைய தகப்பனார் வீசாரப்படுகிறார். அவர் பார்க்கும்போ தெல்லாம் அவள் கண்களில் நீர் தளும்புகிறது. ‘உன் மனசில் என்ன வேதனை, அம்மா?’ என்று அவர் வினவும் போது, அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ‘ஒன்றும் இல்லையே’ என்கிறாள். பாவம்! ஒரே பெண் அவருக்கு. மிகவும் செல்வமாக வளர்த்தார். மழைத்துளி காணாது வதங்கும் பூவீன் அரும்புபோல அவள் இவ்வாறு உருக் குலைவதைப் பார்த்தால் அவர் மனம் தாளுமா? அவர் மானத்தையும் லக்ஷ்யம் செய்யாமல் எங்களிடம் -? அதற்குமேல் கலங்கி ஓடி வருகிறார். அதற்குமேல் ஓடும் சித்தத்தில் ஒரு கருநாகம் சீறுகிறது. அவர் வருகிறார். அவர் வந்து என்னைப் பார்த்து, ‘இது அழகா? மங்களகரமாக வந்து இப்படி மணவறையை அலங்கோலம் செய்துவீட்டுப் போவது தர்மமா?” என்கிறார். இது என் கற்பனையின் வெண்மையான ஓட்டம். இப்போது அது அன்னத்தின் உருவுகொண்டு என்னிடம் வந்து, ‘ஒரு சமயம் தமயந்தியைப் பூங்காவில் சந்தித்தேன். அவ்வாறே என்னைத் தூது அனுப்பு; பிரிவாற்றாது சாம்பும் அந்தப் பெண்ணரசியிடம் நற்செய்தியை வீடுக்கிறன்’ என்றது. அதற்குப் பீன் ? துயர் இருள்விலகியது; புது மழை பெய்தது; வாடிய அப் பெண் மலர் முகம் தூக்கியது. அவளுடைய இருதயத்தைக் கொள்ளை கொண்டவன் ஒருவனே… பின்னர் என்ன?-என் மனச் சித்திரங்கள் மறைகின்றன. ஆனால் நான் சொல்லவேண்டியது இதோடு முடிந்து விடவில்லை. எவ்விடத்தில் அது முடிவுறாமல் நிற்கிறதோ, அவ்விடத்தில் நிகழ்ந்ததைக் கூறியதும் இந்தக் கதைக்கு, முற்றுப்புள்ளி போட்டுவிடுகிறன். 


தீர்த்த யாத்திரை செய்ய அம்மா கிளம்பினாள். அவளுக்கு நான் துணையாகச் செல்லவேண்டி இருந்தது. ரெயில் வண்டியில் தூங்கிக்கொண் டிருந்தேன். வண்டி குலுங்கிக் குலுங்கிச் செல்லுகையில் தலைகால் இராத விசித்திரமான கனவுகள் வந்து போயின. திடீரென்று ஒரு ஸ்டேஷனில் தூக்கி வாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன். தூக்க மயக்கத்தில் எல்லாம் குழம்பி. உலகமே ஒளியும் நிழலும் கலந்த கனவுபோல் தோற் றியது. வானத்தில் சிரிக்கும் மீன்களே எனக்கு நித்திய அறிமுகமாய் இருந்தன. ஸ்டேஷனில் எரியும் விளக்குகள், பீளாட்பாரத்தில் செல்வோர் எல்லாம் சேர்ந்து வெகு தூரத்தில் நான் கண்டிராத ஓர் உலகில் ஸஞ்சரிப்பதுபோல் பிரமை ஏற்பட்டது. அம்மா தூங்கிக் கொண் டிருந்தாள். வண்டியில் எரியும் விளக்குப் பச்சை நிறத் திரை யிடப்பட்டது போலவும் சாமான், படுக்கை, பெட்டிகள் யாவும் தலைகீழாக இருப்பது போலவும் தோற்றின. தூக்கம் தெளியும் சமயம் என்முன் தோற்றிய ஓர் அற்புத உலகின் காட்சிகளாகும் இவை யாவும். 

அந்த ஆச்சரியமான உலகில், ஓர் அதிசயமான இரவிலே இனிமையான குரல் ஒன்று, “சீக்கிரம் வாயேன். அந்த வண்டியில் இடம் இருக்கிறது” என்று சொல்வது போல் கேட்டது. 

மனித கண்டமா அல்லது தேவகண்டமாவென்று சந்தேகம் பிறந்தது. வங்கதேசத்துப் பெண்ணின் குரலில் வங்க மொழியானது அவ்வளவு மதுரமாகத் தொனித் ததை எனக்கு ஏற்பட்டதுபோன்ற இடம், பொருள், ஏவலில் கேட்டிருப்பீர்களானால் நீங்களுந்தான் திகைத்துப் போயிருப்பீர்கள். 

நெடுங்காலம் வரையில் குரலோசை ஒன்றுதான் அழியாமல் மனத்துள் பதிந்துவிடுகிறது. ஆனால் மனித னிடத்தில் அந்தரங்கமானதும், வர்ணிக்க முடியாததுமான ஒரு தன்மையை, எதிரொலிக்கச் செய்வது இக்கண்ட ஸ்வரமே. விரைவாக ஜன்னலைத் திறந்து வெளியே முகத்தை நீட்டிப் பார்த்தபோது யாரையுமே காண வில்லை. பீளாட்பாரத்தின் இருட்டில் நிற்கும் ‘கார்டு’ பச்சை விளக்கைக் காட்டினான். வண்டியும் நகர்ந்தது. ஜன்னலண்டையே கிடந்தேன். என் கண் எந்த உருவத்தையும் காணவில்லை. ஆனால் உள்ளத்துள் மட்டும் வேறோர் இருதயத்தின் உருவைக் கண்டேன். தாரகைகள் சிதறிய கங்குலைப்போல் என் உள்ளத்தில் ஓர் உருவம் எழுந்தது; ஆனால் அதைப் பற்ற என்னால் முடியவில்லை. இன்னிசைக் குரலே ! நான் கேட்டறியாத கண்டத் துவனியே, ஒரே கணத்தில் என் அந்தரங்கத்தில் குடிகொண்டு வீட்டாயே ! பரிபூரணமாய் என்னைக் கவர்ந்த விந்தை என்னே ! நில்லாது ஓடும் காலப் பெருக்கில் முளைத்து அழகுற்ற மலரே! காலத்தின் அலை உன் இதழை அசைக்கவில்லையா? உன் மென்மை சற்றும் அதனால் நலிவுறவில்லையா? 

ரெயில்வண்டி பல்வேறு ஜதிகளில் தாளங்களைப் போட்டுக்கொண்டே சென்றது. என் மனம் அதற்குத் தகுந்தாற்போல் பாட்டைப் பாடிக்கொண்டே இருந்தது. அதன் பல்லவிதான், “இடம் இருக்கிறது” என்பது. ‘அவள் யாரோ?’ ‘அவள் யாரோ ?’ என்பது வெறும் பனித்திரை. அது ஒரு மாயை. அது விலகினால், யாரென்பது அறிமுகம் ஆகிவிடும். அமிர்தமயமான குரலே! என் இருதயத்தில் திகழும் உருவற்ற அழகே! என்றென்றும் எனக்கு அறிமுகமாகாது இருப்பாயா ? இடம் இருக்கிறது, இடம் இருக்கிறது. விரைந்து வா’ என்று அழைக்கிறாயா? வந்துவிட்டேனே, இதோ தாமதம் செய்யாமல் ! 

அன்றிரவு எனக்குத் தூக்கம் வரவே இல்லை. ஒவ்வொரு ஸ்டேஷன் வரும்போதும் தலையை வெளியே வீட்டுக் கவனித்தேன். ராத்திரியே ஏதாவது ஸ்டேஷனில் அவள் இறங்குவதாக இருந்தால் என்ன செய்வதென்று கதிகலங்கினேன். 

மறுநாள் ஒரு பெரிய ஜங்ஷனில் வண்டி மாற வேண்டி யிருந்தது. எங்களுக்கு முதல்வகுப்பு டிக்கட்டு இருந்தது. வேறு வண்டியில் இடம் சுலபமாகக் கிடைக்கு மென்றே நம்பியிருந்தோம். இறங்கிப் பார்த்த போது, பீளாட்பாரத்தில் மலையளவு ‘ஸூட்கேஸ்’களை வைத்துக்கொண்டு வெள்ளைத் துரையின் பரிவார மொன்று தயாராய்க் காத்திருந்தது. ஆசாமீ யாரோ ராணுவ உத்தியோகஸ்தனாம். யாத்திரை செய்ய அந்த வண்டியில்தான் ஏறப்போகிறானென்று தெரிந்தது.

இரண்டு மூன்று நிமிஷங்கள் கழித்து நாங்கள் செல்ல வேண்டிய வண்டித்தொடர் பிளாட்பாரத்திற்கு வந்தது. அம்மாவை அழைத்துக்கொண்டு எந்த இடத்தில் ஏறிக் கொள்வதென்று இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் அலைந்தேன். முதல் வகுப்பைத் தன்னுடையதாக்கிக் கொண்டான் அந்தச் சீமைத்துரை. எல்லா வண்டியிலும் கூட்டம் தாங்கமுடியவில்லை. எதிலாவது ஏறித்தானே தொலையவேண்டுமென்று திரும்புகையில் இரண்டாம் வகுப்பிலிருந்து ஒரு பெண்மணி அம்மா வைப் பார்த்து, “இப்படி வந்து ஏறிக்கொள்ளுங்களேன். இங்கே இடம் இருக்கிறது” என்று கூப்பிட்டாள். 

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கொஞ்சும் அதே இன்னீசைக்குரல்! “இடம் இருக்கிறது” என்னும் அதே பாட்டின் அடி ! தாமதம் செய்யாமல் அம்மாவுடன் அந்த வண்டியிலேயே ஏறிக்கொண்டேன். சாமான்களை எடுத்து வரக்கூட எனக்கு அவகாசமில்லை. என்னைப் போன்ற கையாலாகாதவன் உலகத்திலேயே அகப்பட மாட்டான். வண்டி புறப்பட்டுவீட்டது. அந்தப் பெண் மணி பரபரவென்று கூலியாளைக் கொண்டு என்னுடைய சாமான்களை உள்ளே இழுத்துப் போட்டாள். இந்த அவசரத்தில் என்னுடைய ‘காமிரா’வை ஸ்டேஷனில் வீட்டுவிட்டேன். அதைக்கூட நான் லக்ஷ்யம் செய்யவில்லை: 

அதற்குமேல் என்ன செய்வதென்று தெரியவில்லை. என் மனத்துள் திகழும் ஓர் இன்பக் காட்சியை எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது? அதைச் சொற்களால் விவரிக்க எனக்கு இப்போது இஷ்டமில்லை. கடைசியில் அவ்வீனிய குரலை நேரில் கேட்டேன்; கண்டேன். அப் போதும் அவளை ஒரு குரலோசையாகவே பாவித்தேன். 

அம்மாவை உற்று நோக்கினேன். அவளுடைய கண்கள் இமைக்கவே இல்லை. பெண்மணிக்கு வயசு பதினாறு அல்லது பதினேழுதான் இருக்கும். ஆனால் இளமை அவளது மேனியில் அதிகமாகத் தன் ஆதிக்கியத் தைச் செலுத்தவில்லை. சகஜமான நடை, நிர்மலமான சுபாவம், பரிசுத்தமான அழகு. ஓர் இடத்திலாவது குறை தென்படவேண்டுமே; சிறிதளவும் இல்லை. நானே பார்த்தேன். விரித்துச் சொல்ல ஆகாது. அவள் அணிந் திருந்த புடைவையின் நிறம் இன்னதென்று சொல்ல அவ்வளவு ஆராய்ச்சி செய்யவில்லை நான். அவளை வீட உடையில் கண்ணைக் கவரக்கூடிய தொன்றும் எனக்குப் புலப்படவில்லை. தன்னைச்சுற்றி உள்ளவற்றைக்காட்டிலும் அவள் ஒரு படி அதிகமே. துல்லிய சண்பக மலர், தன் நீண்ட காம்பில் தனி எழிலுடன் நிற்பதுபோல், அவளும் தன் இனத்தைக் கடந்து தனி அழகுடன் விளங்கினாள். அவளுடன் இரண்டு மூன்று சிறுமிகள் இருந்தனர். அவர் களுடன் அவள் உல்லாஸமாகச் சிரித்து விளையாடியது இவ்வளவு அவ்வளவல்ல. குழந்தைகளுடன் பழகும் போது அவளுடைய உள்ளம் சிசுவினுடையது போல் மாறி விடுகிறது. படங்கள் அடங்கிய கதைப் புத்தகம் ஒன்று பக்கத்தில் இருந்தது. அதினின்று கதை சொல்லும் படி அச்சிறுமிகள் அவளைப் பிய்த்து எடுத்தனர். அவர்கள் நூறு தடவைக்குமேல் கேட்டிருந்த கதையாகத்தான் இருக்கவேண்டும் அது. ஆயினும் குழந்தைகளுக்கு ஏன் இவ்வளவு ஆவல் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த அமிர் தம்போன்ற குரலில் வரும் சொற்கள் யாவும் அமுத மாகவே மாறின. அப்பெண்மணியின் சரீரத்திலும், சொற்களிலும்,பாவனையிலும் ஜீவன் ததும்பியது. அவள் வாயினின்று வரும் கதை அச்சிறுமிகளுக்கு வெறும் கதையாக இல்லை; அவர்கள் இருதயத்துள் பாயும் உணர்ச்சியின் அருவியாகவே இருந்தது. இந்தக் கண்டஸ்வரமே. அன்றொரு நாள் என்னுள் மகிழ்விரித்த கதிரொளியை மீண்டும் உயிர்ப்பித்தது. அடுத்த ஸ்டேஷனில் சிற்றுண்டி விற்பவனிடமிருந்து பலவிதப் பக்ஷணங்களை வாங்கிக் கூட வந்த குழந்தைகளுக்குக் கொடுத்துத் தானும் வேடிக்கை யாகத் தின்றாள். என் சங்கோசம் என்னைத் தடுத்தது. இல்லாவிட்டால், நானும் கை நீட்டி மகிழ்ச்சியின் வடிவ மான அவளிடமிருந்து தின்பண்டத்தை யாசித்திருப்பேன். 

பிடித்ததும் பீடிக்காததுமாக, இருவிதமாகச் செல்லும் மனத்தினளாய் அம்மா உட்கார்ந்து இவற்றை யெல்லாம் கவனித்தாள். அந்த வண்டியில் நான் ஒருவனே ஆடவன். அவள் சற்றும் கூச்சங்கொள்ளாது பக்ஷணங்களை ஆவலுடன் தின்பதைப் பார்த்து அம்மாவுக்குப் பிடிக்க வில்லை. இவ்வளவு பெரிய பெண்ணுக்கு ஆடவர்கள் எதிரே மட்டுமரியாதை இல்லையே என்று நினைத்தாள் போலும். அம்மா யாருடனும் சட்டெனப் பழகமாட்டாள். ஓதுங்கி இருக்கவே விரும்புவாள். ஆனால் அந்தப் பெண்ணின் வசீகரம் அவளைத் தன்னையும் மீறிப் பேசத் தூண்டியது. 

அதேசமயம், வண்டியும் பெரிய ஸ்டேஷன் ஒன்றில் வந்து நின்றது. அந்தச் சீமைத்துரையின் கூட்டாளி யான மற்றொரு துரை வண்டியில் ஏறப் பிரயத்தனப் பட்டுக்கொண் டிருந்தான். எந்த வண்டியிலும் இடமே இல்லை. அவன் அடிக்கடி எங்கள் அறை எதிரேயே சுற்றிக்கொண் டிருந்தான். அம்மாவுக்குத் திகிலாய் இருந்தது. எனக்கோ ஆத்திரம். 

வண்டி நகருவதற்குச் சிறிது நேரத்திற்குமுன் ரெயில்வே உத்தியோகஸ்தனான நம் நாட்டைச் சேர்ந்த ஒருவன், பெயர் எழுதிய இரண்டு சீட்டுக்களை எங்கள் வண்டியில் இரண்டிடத்தில் மாட்டிவிட்டு, “இந்தப் பெட்டியில் உட்காருவதற்கு இரண்டு இடம் முன்ன தாகவே துரைமார் இருவர் ‘ரிஸர்வ்’ பண்ணியிருக்கிறார். கள். நீங்கள் வேறு வண்டியில் இடம் தேடிக்கொள்ளுங் கள்” என்றான். நான் வேறொன்றும் கூறமுடியாமல் இடத்தைவீட்டு எழுந்திருந்தேன். அப்போது அப் பெண்மணி ஹிந்தியில், “இவர்களை வண்டியைவிட்டு அப் புறப்படுத்தக் கூடாது” என்றாள். 

அவன் ஒரே பீடிவாதமாக, “போய்த்தான் ஆக வேண்டும்” என்றான். 

ஆனால், யாரும் நகராதிருப்பதைப் பார்த்து, அவன் ஆங்கிலேயனான ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து வந்தான். ஸ்டேஷன் மாஸ்டர் என்னைப் பார்த்து, “தயை செய்து தாங்கள் என்று ஆரம்பித்தான். நான், “கூலி கூலி” என்று கூவினேன், சாமான்களை எடுத்துக் கொண்டு போவதற்காக. அப்போது அந்தப் பெண்மணி கண்களில் தீப்பொறி பறக்க, “நீங்கள் இதைவிட்டுப் போகவேண்டியது அநாவசியம். உட்காருங்கள் ; என்ன நடக்கிறதோ பார்க்கலாம்” என்றாள். 

இதைக் கூறியதும் அவள் வண்டியின் வாயிலை மறைத்துக்கொண்டு ஆங்கிலத்தில், “இந்தவண்டி முன்பே ‘ரிஸர்வ்’ பண்ணப்பட்டிருக்கும் பேச்சுச் சுத்தப் பொய்” என்றாள். உடனே இரு வெள்ளையரின் பெயர்கள் உள்ள சீட்டுக்களையும் பிய்த்துப் பிளாட்பாரத்தில் வீசி எறிந்தாள். 

இதற்குள் டவாலியுடன் ராணுவ உடை பூண்ட துரையும் வண்டியண்டை வந்தான். உள்ளே நுழையப் போகும்போது பெண்மணியின் ரௌத்திராகாரத்தைப் பார்த்து ஒதுங்கிப்போய் ஸ்டேஷன் மாஸ்டருடன் என்னவோ பேசினான். வண்டி புறப்படும் வேளை அதிக்கிரமித்தும், எங்களுடைய வண்டித் தொடரோடு வேறொரு பெட்டியை இணைத்த பிறகே வண்டி கூவென்று நகர்ந்தது. அந்தப் பெண்சிங்கம் பழைய கலகலப்புடன் பேச ஆரம்பித்துவிட்டாள். வெட்கத்தால் நான் என் மூஞ்சியை ஜன்னலுக்கு வெளியிலேயே நீட்டிக் கொண்டிருந்தேன். 

கான்பூரில் வண்டி வந்து நின்றது. அப்பெண்மணி தன் சாமான்களைச் சரிவர எடுத்து வைத்துக்கொண்டாள். ஸ்டேஷனிலிருந்து ஒரு ஹிந்துஸ்தானிக்காரன் ஓடிவந்து சாமான்களைக் கீழே இறக்கி வைத்தான். அந்தப் பெண் ணோடு பேச அம்மா ஆவல் கொண்டாள்; “உன் பெயர் என்ன, அம்மா ?” என்று கேட்டாள். 

“என் பெயர் கல்யாணி” என்றாள் அந்த ரமணி. இதைச் செவியுற்றதும் அம்மாவும் நானும் திடுக்குற்றோம். 

“உன் அப்பா யார்?” 

“அந்த ஊரில் ஒரு டாக்டர். அவர் பெயர் சம்புநாத ஸேன்.” 

அப்புறம் நாங்கள் வெவ்வேறு திசையாகப் பிரிந்தோம். 

பின்னுரை 

மாமா கீறிய கோட்டை மீறி, அம்மாவின் ஆக்ஞையை மீறி நான் கான்பூருக்கு வந்தேன். கல்யாணி பின் தகப்பனாரையும் சந்தித்தேன்! கல்யாணியையும் நேரில் கண்டேன். சம்புநாத பாபுவைக் கைகூப்பித் தலைவணங் கினேன். அவர் மனம் இளகியது. ஆனால் கல்யாணி, “விவாகம் வேண்டாம்” என்று சொல்லி விட்டாள். 

“ஏன் அப்படி ?” என்று வினவினேன்.

“மாதாவின் கட்டளை” என்றாள். 

இதென்ன ஸங்கடம்? அவளுக்குக்கூட என் மாமா வைப்போல் தடையாக யாராவது இருக்கிறார்களா என்ன? 

‘மாதா’ என்பது ‘மாத்ருபூமி’ என்று அப்புறம் தெரிந்துகொண்டேன். விவாகப் பேச்சு முறிந்தது முதல் கல்யாணி பெண்பாலரிடையை கல்வியைப் பரப்பும் மகத்தான தொண்டில் இறங்கிவிட்டாள். 

ஆனால் நான்மட்டும் நமபிக்கையை வீடவில்லை. அந்த இனிய குரல் இன்றளவும் என் இருதயத்தில் ஒலித்துக் கொண் டிருக்கிறது. என்னை வீட்டினின்று வெளி யேற்றி உலக அரங்கிற்கு அழைத்தது அந்தக் குரலின் இசையே ! அன்றிரவு இருளினின்று எழுந்து என் செவியில் புகுந்த, “இடம் இருக்கிறது” என்னும் சொல் எனக்குச் சலிப்பைத் தராத ஒரு பாட்டின் பல்லவியாக நீடுழி நிலவும். அப்போது வயசு எனக்கு இருபத்து மூன்று; இப்போதோ இருபத்தேழாகி விட்டது. ஆயினும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆனால் மாமாவை விட்டொழித்தேன். ஒரே பிள்ளையான படியால் என்னைத் துறக்க அம்மாவினால் முடியவில்லை. 

கல்யாணம் செய்துகொள்ள எனக்கு ஆசை இருக்கிற தென்று நினைக்கிறீர்களா? அது ஒருகாலும் நடவாது. 

அன்றோர் இரவு முன் பீன் அறியாததோர் மதுரமான குரலோசையைக் கேட்டதே போதுமென்று என் மனம் சொல்லுகிறது. எனக்கு ‘இடம் இருக்கிறது’. இல்லாமற் *போனால் -? இவ்வாறு ஒவ்வொரு வருஷமும் சென்று மறைகிறது. அவளை எப்போதாவது கண்ணாறக் காண் கிறேன். அவளது இன்குரல் என் செவிக்கு இன்பத்தேனை ஊற்றுகிறது. சமயம் வாய்க்கும்போது அவள் இடும் ஏவலைச் செய்து வருகிறேன். என்னுள் ஒன்று, “உனக்கு இடம் கிடைத்துவிட்டதே” என்று எப்போதும் சொல்லிக் கொண்டே. இருக்கிறது. ‘நீ யாரோ? உன் பரிசயம் எனக்கு இன்னும் பூர்ணமாகவில்லை. ஆகவும் ஆகாது உன்னிடம் வருவதற்கு இடமாவது கிடைத்ததே; அதுவே என் அதிருஷ்டம் !’ என்று மனம் எண்ணுகிறது.

– காரும் கதிரும் (சிறுகதைகள்), ஆசிரியர்: ரவீந்திரநாத் தாகூர், மொழிபெயர்த்தோர்: த.நா.குமாரசுவாமி, த.நா.சேனாதிபதி, முதற் பதிப்பு: 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *