ஆமயும் நரியும்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு மலயில – ஆமயும் – நரியும் கூட்டா இருந்திச்சாம். எங்க போனாலும் ரெண்டுந்தா போகுமாம். இந்த நரி எர பெறக்கிட்டு வந்து, இந்த ஆமக்கிக் குடுத்திட்டுத் தானுஞ் சாப்டுமாம்.
அப்ப, அந்த மலயடிவாரதல் ஒருத்தி வெள்ளரிக்காத் தோட்டம் போட்டுருக்கா. நல்லாக் காயு காச்சு இருக்கயில், இந்த நரி வெள்ளரிப் பிஞ்சு, திங்க ஆசப்பட்டு –
இந்த நரி, ஆமயக் கூட்டிக்கிட்டுப் போகுது. போயி, வேலி க்கு வெளிய, ஆமயக் காவ (காவல் வச்சிட்டு, ஆளு வந்தா சொல்லுண்டு சொல்லிட்டு, வெள்ளரிப் பிஞ்சு புடுங்கத் தோட்டத்துக்குள்ள போயிருச்சு. ஆம வெளிய ஒக்காந்துகிட்டிருக்கு. ஆம என்னத்தச் சொல்லி, நரிக்கு கேக்கப் போகுது. இது வெளிய இருக்கு. அங்க நரி பிஞ்சு பெறக்கித் திண்டுகிட்டிருக்கு. இப்டி இருக்கயில், தோட்டக்கார வந்திட்டா. தோட்டக்காரனப் பாத்ததும், ஆம ஓட்டுக்குள்ள, தலய நொளச்சிக்கிருச்சு. இவ போயி, நரியப் புடிச்சுக்கிட்டா. புடிச்சு, மாட்டு – மாட்டுண்டு மாட்றா. நரி,
அலறிக்கிட்டு வெளிய ஓடியாந்து, ஆமயப் பாத்து,
ஆமக் கழுத ஊமக்கழுத,
ஆளு வந்தா சொன்னென்னா கழுத – ண்டு சொல்லுச்சு. அதுக்கு ஆம, கோவம் வந்து, S
அட, நரிக்கழுத நக்குன கழுத
நா என்னத்த பாத்தே
ஒன்னய மாதிரி ஊர் ஊரா அலயாம
கெடச்சதத் திண்ட்டுக் கெட தண்ணில கெடப்பே-ண்டு
சொல்லுச்சு. சொல்லிட்டு ரெண்டும் பிரிஞ்சு போயிருச்சாம். அண்ணக்கிருந்து ரெண்டுங் கூட்டில்ல. ஆமயும் நரியும் சேர முடியுமா? சேருறது கூடத்தான் சேரணும். கண்டதுக கூடயெல்லாம் சேர முடியுமா?
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.