ஆண்டவன் வேலையை நாம் செய்யவேண்டாமே!
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 5,407
ஆக்கல் ,காத்தல்,அழித்தல் இவை மூன்றும் அந்த ஆண்டவன் வேலைகள். இதை எல்லா மத்ததாரும் ஒத்துக் கொண்டு இருக்கும் உண்மை.
அந்த ஆண்டவன் எல்லா ஜீவ ராசிகளிலும் ஆண் வர்க்கத்தையும், பெண் வர்க்கத்தையும் படைத்து,இன உற்பத்தியை செய்கிறார்.
இப்படி செய்து அவர் ஆக்கல் வேலையை செய்து வருகிறார்.
வலிமை மிகுந்த வன விலங்குகளான சிங்கம்,புலி,சிறுத்தை ஓனாய்,முதலை போன்ற ஜீவராசி சிகள் வலிமை குறைந்த ஜிவ ராசிகளான ஆடு,மாடு,வா¢க்குதிரை,காட்டேருமை,மான் போன்ற ஜீவ ராசிகளை ஓடிப் பிடித்து அவைகளை கொன்று தங்கள் உணவு ஆக்கி வாழ்ந்து வருகின்றன.
பூனை எலியை கொன்று தனக்கு உணவு ஆக்கி வருகிறது.பருந்து கருடன்,கொக்கு,நாரை போன்ற பறவைகள் தரையிலும்,தண்ணீரிலும் வாழ்ந்து வரும் ஜீவ ராசிகளை பிடித்து சென்று அவை களை கொன்று தங்களுக்கு உணவு ஆக்கி வாழ்ந்து வருகின்றன.
யானை,ஒட்டக சிவிங்கி,ஒட்டகம்,போன்ற பல பலசாலிகளான சில ஜீவ ராசிகள் இலை,காய் பழம் போன்றவற்றை உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன.இன்னும் சின்ன ஜீவ ராசிகளான மான், ஆடு மாடு போன்ற ஜீவ ராசிகள் இலை தழைகளை உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன.
அந்த ஆண்டவன் மற்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் உணவு கொடுத்து உயிர் வாழ வைக்கிறார்.
இப்படி செய்து அவர் தன் அடுத்த தொழிலான காத்தல் வேலையை செய்து வருகிறார்.
அந்த அந்த ஜீவ ராசிகள் செய்த முன் வினை பயனின் படி,அந்த அந்த ஜீவ ராசிகள் காலம் முடிந்த பிறகு அழித்தல் வேலையை செய்து அவைகளுக்கு மறு பிறவியை தருகிறார்.
அவர் தனக்கு என்று வைத்து இருக்கும் மூன்று வேலைகளையும் இப்படியாக செவ்வனே செய்து வருவதை நான் அன்றாடம் பார்க்கிறோம்.
இப்போது சமீப காலமாக நாம் தினசா¢ பத்திரிக்கைகளிலும்,தொலை காட்சி பெட்டிகளிலும் வரும் செய்திகளை படித்தால் மனம் மிகவும் வேதனைப் படுகிறது.
நிலத் தகறாரு காரணமாக ஒரு விவசாயி மற்ற ஒரு விவசாயியை கொன்று விடுவதும்,பணத் தகறாரு,சொத்து தகறாரு காரணமாக அண்ணனை தம்பி கொன்று விடுவதும்,தம்பியை அண்ண னை கொன்று விடுவதும்,ஒரு பணக்காரை மிரட்டி பணம் கேட்டு அவர் கொடுக்க மறுத்ததால், அவர் மகனையோ,மகளையோ கடத்திப் போய் கொன்று விடுவது,ஒரு காதலன் அவன் காதலித்தப் பெண் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள மறுத்ததால்,கோபம் அடைத்து காதலியை கொன்று விடு வதும்,கள்ள காதல்,கணவன் மணைவி இடையே மன பேதம்,சந்தேகம் இவைகளை காரணம் காட்டி, மணைவி கணவனை கொன்று விடுவதும்,கணவன் மணைவியை கொன்று விடுவதும்,அரசியல் பகை மை காரணமாக ஒரு அரசியல் பிரமுகரை மற்றொரு அரசியல் பிரமுகர் கொன்று விடுவதும்,ஓடும் வண்டியில் வாக்கு வாதம் முற்றி கோபத்தால் ஒருவரை மற்றோருவர் வண்டியில் இருந்து கீழே தள்ளி கொன்று விடுவதும்,இன்னும் இது போன்ற அநேக நிகழ்வுகளை நாம் படித்தும்,பார்த்தும்,வந்து கொண்டு இருக்கிறோம்.
இவைகள் போதாதென்று குடி போதையினாலும்,கவனக் குறைவாலும் வாகன ஓட்டுனர்கள் ஒன்றும் அறியாத பாத சாரிகளை அவர்கள் ஓட்டி வரும் வாகனத்தை ஏற்றி கொன்று விடும் நிகழச்சி களையும் கேள்வி பட்டு வருகிறோம்.
தங்களுக்கு வாய்க்கு ருசியான உணவு வேண்டும் என்று பலர் ஆடு, மாடு,கோழி,மீன்,வான் கோழி,போன்ற ஜீவ ராசிகளை கொன்று உணவு சமைத்து சாப்பிட்டு ஆனந்தம் அடைந்து வருகிறார் கள்.
இன்னும் பலர் வேண்டுதல் காரணமாக ஆடு,கோழி, இவைகளை பலி கொடுத்து அவர்கள வேண்டி வரும் தெய்வங்களை சந்தோஷப் படுத்துகிறார்கள்.
ஓடும் சில ஜீவ ராசிகளை அம்பு அடித்து கொன்று விட்டு,அந்த ஜீவராசிகளீன் உடலை உணவாக சமைத்து சாப்பிடும் சில பழங்குடி மக்கள் இருக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்டு உள்ள அத்தனை பேரும் அந்த ஆண்டவன் செய்ய வேண்டிய அழித்தல் தொழிலை செய்கிறார்கள்.
மேலே சொன்ன அனைவறாலும் அந்த ஆண்டவன் ஆசீர்வாதம் இல்லாமல் படைத்தல் வேலையையோ,காத்தல் வேலையையோ செய்ய முடியாமல் இருக்கும் போது ,அவர் செய்ய வேண்டிய அழித்தல் வேலையை மட்டும் ஏன் செய்ய வேண்டும்?
ஆறறிவு இல்லாத சில மிருகங்களும்,சில பறவைகளும் தங்கள் உணவுக்கு அழித்தல் வேலை செய்து வருகின்றன.
ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் கோபத்தாலும்,வெறி தனத்தாலும் எந்த ஜீவ ராசிகளையும் அழிக்கமலும்,வாய்க்கு ருசியான உணவு வேண்டும்,ஆண்டவனை சந்தோஷப் படுத்த வேண்டும் என் பதற்காக எந்த ஜீவ ராசிகளையும் அழிக்காமலும்,அண்ணல் மஹாத்மா காந்தி காட்டிய “அஹிம்ஸா” வழியில் சென்று,காய்றிகள்,பழங்கள்,கீரை வகைகள் போன்ற உணவு வகைகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்து, அந்த அழித்தல் தொழிலை அந்த ஆண்டவனே செய்யட்டும் என்று நாம் ஏன் சும்மா இருந்து வரக் கூடாது.
நன்றாக சிந்திப்போம்.
மேலே சொன்னதை இன்றே செயல் படுத்தி நாம் வாழ்ந்து வரலாமே!!