ஆசீர்வதிக்கப் பட்ட வாழ்க்கை!





அகிலா தன் கடமைகளை முடித்துக் கொண்டு மாலையில் தான் வீடு திரும்ப ஆயத்தமானாள். நீலநிறத்தில் சிகப்பு நிற போடர் வைத்த சேலையை நேர்த்தியாக சிறிய ப்ளிட் வைத்து அழகாகக் கட்டியிருந்தாள்.அந்த சேலைக்கான அழகே அவள் கட்டியதனால் தானிருக்கும் போலிருந்தது. அதற்கு ஏற்ற வகையில் ப்;;ளவுசும் நிறைய அழங்காரமில்லாது வட்டக் கழுத்து வெட்டி முனங் கைககுக் கீழ் மூன்று இன்ஞ் இருக்கும் படி முக்கால் கை வைத்து இடுப்புக்கும் வயிற்றுக்குமிடையே கால் வாசி இன்ஞ் அளவு கூட தெரியாதப் படி ரொம்பவும் மரியாதையான முறையில் தைக்கப் பட்டிருந்து .கழுத்தில் சிறிய மெல்லிய செயின்; காதுகளில் மொட்டுக் கம்மல் ஒருகையில் சிறிய கைச்செயின் மூன்று இன்ஞ் உயரத்தில் காலணியும் போட்டு அழகான ஒரு சிவப்பு நிறமான ஹேண்ட் பேக்கை கையில் எடுத்தவாறு அலுவலகத்;;திலிருந்து வெளியே வந்தவள் தன் காரை நோக்கிச் சென்றாள். தானே காரைச் செலுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்தவள், கைகளுக்கு சனிசைடரைத் தடவிக் கொண்டே முககவசத்துடனேயே குளியலறைக்குச் சென்று விட்டாள். குளித்து நீண்ட சட்டையை கொஞ்சம் சொகுசுக்காக தளர்வாக அணிந்து வந்தவள் தேனீர் தயாரிப்பதற்காக சமையல் அறைக்குள் புகுந்தாள். அவளைக் கண்ட மல்லிகா எப்படியம்மா இன்றைக்கு நாள் நல்லாயிருந்ததா? என்ற வாறே இரவு உணவைத் தயாரித்துக் கொள்வதில் மும்முரமாய் இயங்கினாள். அகிலாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவள் நினைத்துப் பார்க்காதளவிற்கு மாமியார் உற் பட சுற்றியுள்ள உறவுகள் ஒவ்வொருத்தருமே மிகுந்த அன்போடும் அக்கறையோடும் உறவாடி அந்த வீட்டில் எல்லோரையும் எல்லோரும் சந்தோசமாய் வைத்துக் கொள்வார்கள் . அங்கே சந்தோசம் நிலைத்திருப்பதற்கு பல காரணங்கள் ஆதாரமாய் இருந்தாலும் வயதுப் போன தாத்தா பாட்டி மாமா மாமி போன்றவர்களின் நல்ல நடை முறைப் பழக்க வழக்கங்களும் மனசுகளும் தான் என்றால் அது பொய்யாகாது. அகிலாவை மல்லிகா ஒருநாள் கோயிலில் தான் சந்தித்தாள். குடை வெட்டில் நீள் கை வைத்த மெருன் கலர் சுடிதாரில் சிறிய பருப்பளவில் பொட்டு வைத்து தலை முடியை ஈரம் சொட்ட சொட்ட விட்டுப் பிண்ணி அடியில் பூல் பேண்ட் போட்டு ரொம்பவே பெண்ணுக்கேற்ற இலட்சனத்தோடு பக்தியாய் பிள்ளையாரை வணங்கிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்ட மல்லிகா தான் சுவாமியை வணங்கி பூசை முடித்த நிலையில் இருந்தமையால் அகிலா வெளியில் வரும் வரை கோயிலுக்கு வெளியே படியில் அமர்ந்து காத்திருந்தாள் .அகிலாவும் பூசை முடித்து வெளியில் வந்ததும்~~ தான் மல்லிகா என்றும் நகைக்கடை உரிமையாளர் மாதவனின் மனைவி|| என்றும் அறிமுகம் செய்துக் கொண்டு உரையாடலை ஆரம்பித்தாள்.
அகிலாவின் விபரங்களை எடுத்துக் கொண்டவள் தான் தொடர்பு கொள்ள விரும்பினால் அப்பா அம்மாவின் தொலைப்பேசிக்கு அழைப்புக் கொடுத்தால் பரவாயில்லையா? எனக்கேட்டுக் கொள்ளவே அகிலாவும் அதற்கு இணங்கிடவே தொலைப்பேசி எண்கள் கை மாறிக் கொள்ளப் பட்டன .பிறகு ஒரு புதன் கிழமை நாளில் மல்லிகா அகிலாவின் தந்தை குமரனோடு தொடர்பு கொண்டு உரையாடினாள் .தனக்கு ஆண் பிள்ளைகள் இரண்டுபேரும் பெண் பிள்ளைகள் மூவருமாக ஜந்து பிள்ளைகளிருப்பதாகவும், மூத்தவன் அமுதன் தனியார் நிறுவனமொன்றில் தொழில் செய்வதாகவும், தற்போது அவனுக்குப் பெண் பார்ப்பதாகவும், அகிலாவைக் கோயிளில் கண்டதும் தனக்குப் பிடித்து விட்டதாகவும் கூறிப் பேசிடவே குமரனும் வீட்டில் கலந்துப் பேசி விட்டு அழைப்புத் தருகிறேன் என்று வைத்து விட்டார்.
குமரன் குமுதினி தம்பதியருக்கு மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே. மூவரும் படித்து விட்டு நல்ல தொழில்களோடு அழகாக கௌரவமாக வீட்டு சூழ்நிலமை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
அகிலா தான் வீட்டில் மூத்தப் பிள்ளை. ஆக அகிலாவின் வீட்டாரும் விருப்பம் தெரிவித்திடவே நல்ல நாளில் பெண் பார்த்து அமுதனுக்கும் அகிலாவைப் பிடித்திடவே சுமுகமான முறையில் இருவீட்டார் சம்மதத்துடன் அமுதன் அகிலா திருமணம் நடந்தேறியது.
அமுதனின் குடும்பச் சூழல் நன்றாகவே இருக்கின்றது. இதுவொரு நல்லக் குடும்பம் என்று பார்ப்போர் கூறிடுமளவிற்கு அமைந்திருந்தது.
அகிலாவிற்கும் அந்த குரும்பத்தோடு ஒட்டி உறவாடிட அவ்வளவு சிரமப்படத் தேவையிருக்கவில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருத்தரையும் புரிந்து நடந்துக் கொள்ளும் முறைகளைத் தெரிந்து வைத்திருந்தார்கள்.
அமுதனும் அகிலாவை சுற்றி சுற்றி வந்தான். அவன் அன்பு அகிலாவிற்கும் அகிலாவின் அன்பு அவனுக்கும் இனித்திட இனித்திட இரசித்து வாழும் தன்மையே மேலாய்க் காட்டியது.
இருந்;தும் தெளிந்த நீரோடையில் கல் விழுந்தது போல் திடீரென்று அமுதனின் மன நிலைக் குழம்பிப் போய் இரண்டு மூன்று நாட்களாக முகம் கொடுத்து பேசாமல் இருந்தவன் தனியறையில் இருவரும் சண்டைப் போட்டு இரண்டு நாட்கள் தொடரான பிரச்சினை நீடித்து, வீட்டு விறாந்தை வரை வந்து பெற்றோரும் மற்றோரும் நிற்க வைத்து கேள்விக் கேட்டு புத்தி சொல்லுமளவிற்கு இருவருக்குமிடையில் கோபமும் வைராக்கியமும் நிமிர்ந்து நின்று தலை விரித்தாடியது.
கணவன் மனைவிப் பிரச்சினை இன்று நாளை சரியாகி விடும் என்ற நிலையில் மல்லிகாவும் நாகரீகம் கருதித் தலையிடவில்லை. அன்றொரு நாள் காலை அழுதழுது கண்கள் குலமாகிட மூக்குச் சிவந்து முகம் வீங்கி குணிந்த தலை நிமிராது யாரும் கண்டிடக் கூடாதென்பதில் கவனமாய் வேலைக்குப் போகப் புறப்பட்டாள் அகிலா.
எதேச்சையாக அவள் மாமியார் மல்லிகா ஏதோ ஒன்றைக் கேட்டிட, இவளும் குணிந்தவாரே பதில் சொல்லிட அவளது குரல் மாற்றம் மல்லிகாவுக்கு என்னவோப் போலாகி விட்டது. ஒருவீட்டில் எந்த ஓரு பெண்ணும் சந்தோசமாய் இருக்கும் வரைத்தான் வீடு நிம்மதியாயிருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட மல்லிகா துடித்துப் போனாள். அகிலாவை ஆதரவாய்த் தழுவி ஏன் முகமெல்லாம் வீங்கிப்போய் ஒருவிதமாய் இருக்கின்றாய் உடம்புக்கு ஏதும் பிரச்சினையா அல்லது அலுவலகத்தில் ஏதும் சிக்கலா என அன்போடு விசாரித்திட தன் மாமியாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் துளியும் அருகதையற்ற தன் கணவனின் குணத்தைப் பற்றிய குறைகளைக் கூறிட முடியாதுத் தடுமாறினாள்.
தன் நண்பனின் திருமணத்தி;ற்குப் போய் வந்தவன் வந்ததிலிருந்து பெண் வீட்டார் நண்பனுக்கு வீடு கொடுத்து வியாபாரத்திற்கு காசு கொடுத்துத் தான் பெண்ணைக் கட்டிக் கொடுத்தார்களாம். அது போல் தனக்கும் மனைவி வீட்டிலிருந்து கிடைக்க வேண்டுமென்ற பேராசையிலும் வீடு வாகனம் காசு என்று பெண் வீட்டில்; வாங்கிக் கட்டிக் கொள்ள தகுதியற்றவனா?. இல்iலையே என்க்கும் எல்லா தகுதியும் இருக்கின்றது. அகிலா வீட்டிலிருந்து இவை அனைத்தையும் பெற்றோரிடம் கேட்கும் படி மனைவியை வற்புறுத்தினான். தினமும் சண்டைப் பிடித்து அவள் நிம்மதியையும் குழைத்துக் கொண்டு அவன் நிதானம் நிம்மதி எல்லாவற்றையும் குழைத்துக் கொண்டு தடுமாறினான்.
திருமணப் பேச்சு ஆரம்பிக்கும் போதே குமரன் அகிலாவிற்கு குறிப்பிட்டளவு நகையும் திருமண செலவில் பாதியும் வீட்டு உபயோகப் பொருட்களும் தருவதாகக் கூறிய போதே அகிலா தன் பெற்றோருக்கு அறிவுறுத்தினாள். தயவு செய்து உங்கள் காலங்களில் போல் பொதுவாக அதைத் தருகிறோம் இதைத் தருகிறோம் என்றுக் கூறாது இது மட்டும் தான் தருகிறோமென்று பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதனால் நீங்கள் பேசும் போது கட்டாயம் பொருட்களைக் குறிப்பிட்டு சொல்லுங்கள். ஏன் என்றால் இன்றையக் காலத்தில் சீதனம் சீர்வரிசை எல்லாம் தர மாட்டோம். பெண்ணை விரும்பினால் பெண்ணை மட்டும் கட்டிக் கொண்டு போங்கள் என அடம்பிடித்து நாம் சீதனத்தை எதிர்க்கின்றோம். வரதட்சனைக் கேட்டால் நாம் திருமணமே செய்துக் கொள்ள மாட்டோம் என்ரெல்லாம் கூறி நிற்க மாட்டோம். பெண்ணைக் கொடுப்பவர்கள் சொல்லுக் கடணுக்கு இடம் வைத்து தினம் தினம் பிரச்சினையோடு வாழ ஆசைப் படாமல் நிம்மதியாய் அழகான கௌரவமான வாழ்க்கை வாழத்தான் நினைக்கின்றோம்.
இருந்தாலும் வீட்டு உபயோகப் பொருட்கள் எனும் போது இடத்திற்கு ஏற்றாட் போல் வேறுபடுகின்றது. முன்னைய காலம் போன்று சில்வர் செப்பு அலுமினியப் பாத்திரங்கலும், கட்டில் மெத்தை தலையனை பாய் பெட்சீட் என இக்காலத்தில் அடங்காது. நாம் வீட்டுச் சாமான்கள் என இவைகளைக் குறிப்பிட்டால் மாப்பிள்ளைக் குடும்பத்தார் ஹோம் தியேட்டர் ஏசி வொசிங் மெசின் ப்ரிட்ஜ் என விலையுயர்ந்த நாகரீகப் பொருட்களை எதிர்ப்பார்ப்பார்கள். நாமிதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டோம்.
ஆக என்ன தருகின்றோம் எனக் குறிப்பிட்டு சொல்லி விடுங்கள்! எனக் கூறிய போது அமுதனின் தாயார் மல்லிகாவும் தந்தை மாதவனும் தமக்கு ஒன்றுமே வேண்டாம் அகிலாவை எமக்குப் பிடித்திருக்கின்றது எமது மூத்த மகனுக்கு மனைவியாகவும் எம் வீட்டுக் குல விளக்காகவும் மட்டும் தான் நாம் கேட்கின்றோம். என்ன கொடுக்கின்றீர்கள் எனக் கேட்டு அறிவுமிக்க பெண் பிள்ளைகளைக் கொச்சைப்படுத்தி எங்களையும் எங்கள் மகனையும் அசிங்கப்படுத்தி உங்கள் மகளை அழைத்துச் சென்றிட நாம் விரும்பவில்லை. மகனுக்கும் இதில் சம்மதமே! என அமுதனின் முகத்தின் முன்னேதான் பேசி முடித்தார்கள்.
இருந்தும் அகிலாவின் வீட்டார் அவர்களின் தகுதிக்கு ஏற்றாட்போல் நகைகள் வீட்டு உபயோகப் பொருட்கள் இத்தியாதி – இத்தியாதி என நாம் கொடுப்போமென பேசி முடித்துத்தான் கொடுத்தார்கள்.
அதனால் நாம் எப்படி வாக்குத் தவறாதவர்களோ அது போன்று எம்மோடு சம்மந்தியாய் இணையும் மாதவன் குடும்பமும் வாக்குத் தவறாதவர்களாய் இருப்பார்கள் என்று முழுதாய் நம்பினார்கள். பலப்பேர் கூறியிருக்கின்றார்கள் தாம் எம்மைப் போன்று நல்லவர்கள் பட்டியலிலேயே மற்றவர்களையும் நம்பிச் சேர்த்துக் கொள்வது தவறு என்று. அதிகமானோரின் வாழக்கைத் தோல்விக்கு இந்த தப்பான எண்ணமும் ஒரு காரணம் என்றும். இருந்தும் இவர்கள் நம்பினார்கள்.
மல்லிகா அகிலாவைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அமுதன் கீழிரங்கி வந்துக் கொண்டே என்ன அருமை மருமகளைக் கொஞ்சிக் கொஞ்சியே என் தகுதியை மற்றவர்கள் முன் குறைத்துக் காட்டிடீங்களே அம்மா! என்னை எவ்வளவு செலவு செய்து படிக்கவைத்தீங்கம்மா. தொழில் வீடு கார் என வசதியோடு இருக்கின்றேன். அதற்கேற்றாட் போல் வசதியுள்ள இடத்தில் தானே எனக்கு பெண் பார்த்திருக்க வேண்டும். இப்படி ஒன்றுமில்லாத தராதரமில்லாத குடும்பத்தில் சம்மந்தம் கலந்து என்னையும் அசிங்கப்படுத்தி என் எதிர் காலத்தையும் வீணாக்கிட்டீங்களே என்று கத்தினான். மல்லிகா துடித்துப் போனாள். அமுதன் நீஎன்ன கதைக்கிறாய். யாருனக்கு இப்படி பிழையானதொரு கருத்தை உனக்குள் உள் வாங்கச் செய்தது. உனக்கு என்ன குறை. எல்லா வசதியோடும் வாழ்ந்திடும் தகுதியோடிருக்கும் நீ ஏன் மற்றவர்களின் வசதி வாய்புகளை எதிர்ப்பார்க்கின்றாய். இதற்குத்தான் அகிலாவின் முகம் இரண்டு நாட்களாக வாடிப் போய் கவலை தோய்ந்திருந்ததா. அவளிடம் என்ன கேட்டாயென கேள்விகளை எழுப்பிக் கொண்டுப் போக அமுதன் உடனே நான் உங்களிடம் கல்யாணம் ணே;டுமெனக் கேட்டேனா? நீங்களே ஒரு பெண்ணைப் பார்த்து கட்டு என்றீர்கள் .இது சரியா! வசதியான வீடு கார் பணமென்று தரக்கூடியயிடத்தில் பெண் பார்த்திருக்களாம் தானே!.
எனது நண்பனுக்கு வீடு, வியாபாரத்திற்கு பணம் இப்படியெல்லாமே கொடுத்துத்தான் பெண்ணைக் கட்டிக் கொடுத்திருகின்றார்கள். நானும் அவனை விட எல்லாவற்றிலும் நிறைவாகத்தானே இருக்கின்றேன். எனக்கு மட்டும் நீங்கள் இப்படியொருத்தியை பார்த்து கட்டி வைத்திட்டீங்க.!இது சரியா.
மல்லிகாவிற்கு மகனை பளார் பளார் என நான்கு அரைக்கொடுத்து வீட்டை விட்டே விரட்ட வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி செய்திட முடியாதே! அகிலா வருத்தப்படுவாள். வீட்டின் மற்றவர் நிம்மதியெல்லாம் குழைந்து போய்விடும் அமுதனும் வைராக்கியமாய் அகிலா மீது வெறுப்பைக் காட்டிடத் துணிந்திடுவான். ஆகவே! இவனுக்கு மெதுவாகத்தான் எடுத்துச் சொல்ல வேண்டுமென முடிவு பண்ணியவள் இரு கண்களையும் சிறிது நேரம் மூடி அமைதியாகயிருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
மகனை அன்போடு கட்டியணைத்து முத்தமிட்டு கதிரையில் அமரச்செய்தாள். அகிலாவையும் அமரச் சொன்னாள் இருவரும் சிறிதுநேரம் கண்களை மூடி உங்களை சுதாகரித்துக் கொள்ளுங்கலெனக் கூறி ஜந்து நிமிட நேரம் இவளும் மௌனமாயிருந்தாள்.
பிறகு அமுதனைப் பார்த்து ~~ஏன்அமுதன் உன்னை யாரும் கண்களை கட்டி வைத்து பெண் பார்க்கக் கூட்டிப் போகவில்லையே! அதேப் போன்று பக்குவமில்லாத சிறுவயதில் உன்னைக் கேட்காமல் உனக்கு விருப்பமில்லாதவளைத் திருமணம் செய்து வைக்கவுமில்லையே!. அகிலாவுடன் பேசிப் பழக விடாது அந்த வீட்டு நிலவரத்தைத் தெரிந்துக் கொள்ளுமுன்பே அவசரப்பட்டு எதையும் செய்து வைக்கவுமில்லையே!. வசதியான குடும்பங்கள் நிறையவேயிருக்கின்றன. அதற்காக அந்தக் குடும்பத்து வசதியெல்லாவற்றையும் எங்கிருந்தோ மாப்பிள்ளை என்றப் பெயரில் வந்தவனுக்கு அத்தனை சீக்கிரமே கொடுத்து விட முடியாது தானே! ஏனென்றால் அந்தக் குடும்பத்தில் வேறு வேறு தேவைகளும் இருக்குமல்லவா. அகிலாவிடம் நீ கேட்பது சீதனம் தானே!. நானே எத்தனையோ சீதனம் கேட்ட குடுமபங்களை அசிங்கப்படுத்தி வெறுத்திருக்கின்றேன். பெண்ணிடம் சீதனம் கேட்குமளவிற்கு உங்கள் யாரையும் கடவுள் முடமாய்
படைக்கவில்லையே!. உனக்கு எல்லாத் தகுதியும் தராதரமும் இருக்கின்றதென்றால் அதில் முக்கியமான தகுதி அம்மாவின் நல்ல வளர்ப்பை வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் ஒரு மனைவிக்கு நல்லக் கணவனாய் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாய், வளரும் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாய் இறை நம்பிக்கையுள்ள மனிதனாய் வாழ்ந்து சிறப்பித்திட முயற்சிப்பது தானே சரியாயிருக்கும்.
அதை விட்டுவிட்டு ஒரு மனைவியாய் ஏற்றுக் கொண்டவளை அடிமைப் படுத்தி தினம் தினம் அவளுக்கு கண்ணீரையும் வேதனையையும் கொடுத்து துன்புறுத்தி அவளுடைய நிம்மதியையும் இல்லாது செய்து உன் நிம்மதி;யையும் இழந்து அவள் சார்ந்தோரையும் உன் சார்ந்தோரையும் வேதனைப்படுத்தி வாழும் வாழ்க்கை நல்லாயில்லையே!. போயும் போயும் கல்யாணம் என்ற ஒன்றுக்குள் புகுந்ததால் எல்லாமே தப்பாகிப் போனதேயென வாழ்க்கையின் சந்தோசத்தை இழந்து விடக் கூடாது.
உனக்கும் அகிலாவுக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. உன் பெறுமதி உனக்குத் தெரியாமல் போனதுதான் பிரச்சினை. இந்த வீட்டில் காலை மாலை விளக்கேற்றிக் கடவுளை வேண்டி ஆயள் ஆரோக்கியத்தோடு சுகமான வாழ்க்கை வாழ்கின்றோம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இந்த வீட்டிலிருக்கும் பெரியோர் முதல் சிறியோர் வரை பெண்களின் சந்தோசத்தை முக்கியமாய் கருதுவதால்தான். ஒரு பெண்ணை வீட்டிற்குள் வேதனைப்படுத்தி கண்ணீரைப் பார்த்து விட்டு ஒரு ஆணால் வெளியில் போய் நிம்மதியைத் தேடிட முடியாது என்ற உண்மையை உன் தாத்தா அப்பா இருவரும் தெரிந்து வைத்திருப்பதால்தான் என்பதைத் தெரிந்துக் கொள். அந்த விடயத்தை நீ ஏன் தெரிந்து வைத்திருக்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை.
நீ அகிலாவிடம் வீடு கார் பணம் என்பவற்றைக் கேட்டால் அதுவொன்றும் அவர்களுக்குப் பெரிய விடயமில்லை. ஏதோவொரு வகையில் உன் விருப்பத்தை மகளின் வாழ்வுக்காக சரிப்படுத்தி விடுவார்கள். நீ அதை அனுபவிப்பாய். ஆனால் அகிலாவால் அதை சந்தோசமாய் அனுபவிக்க முடி;யாதே!.வீட்டாரை சிரமபப்படுத்தி வந்தவற்றைப் பார்க்கும் போதெல்லாம் ~~இப்படியொரு அடிமட்ட வஞ்சகக்காரனுக்கு மனைவியாய் வாழத்தான் வேண்டுமா என ஒரு முறைக்கு இருமுறை சிந்தக்கத் தோண்றிவிடும்.அப்பொழுதான் கணவன் மனைவி மனசொத்துப் போக முடியாமல் பிரிவு என்றதொரு பிழையான பாதையை ஏற்படுத்திக் கொண்டு, செல்லும் வழித் தெரியாமல் நடுவில் தத்தளிக்க வைத்து விடுகின்றது. காலங்கள் வீணே சந்தோசமில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கும். உனக்கான நல்லெண்ணம் உருவாகும்வரை காலத்துக்குக் காத்திருக்கத் தெரியாதுதானே!. நீ அம்மாவை மதிப்பாயானால் எல்லாப் பெண்களையும் மதிக்கக் கற்றுக்கொள். அதுதான் வாழ்க்கையில் எல்லா சந்தோசத்தையும் முன்னேற்றத்தையும் தர உதவும்.
யாரிடமும் எதையும் எதிர்ப்பார்க்காது உனக்கும் உன் மனைவிக்கும் உன்னை சார்ந்தவர்களுக்கும் உங்களிருவருக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் நல்ல கணவனாய் நல்ல அப்பாவாய் வாழ்ந்திடப் பழகிப் பார் அதுதான் சரியாயிருக்கும். பிரச்சினைகளை உருவாக்கி விட்டிடலாம். அதைத் தீர்த்துக் கொள்ள சரியானத் தெளிவான மனங்கொண்டவரிடம் பிரச்சணைப் போய் சேராவிட்டால் குறுக்கும் நெடுக்குமாய் வழிகளைச் சொல்லி வாழ்க்கைப் பாதையை திசைத் திருப்பி நாடகமாக்கி விட்டிடுவார்கள்.
இன்றைக்கு உனக்கு வீடு கார் காசு வாங்காமல் கட்டினது கௌரவக் குறைவாய்த் தென்பட்டாலும் அவைகளை வாங்கிக் கட்டியிருந்தால் நாளை அதுவே உன் தலைக் குணிந்த வாழ்க்கைக்கு உறு துணையாயிருந்திடும். ஒருபெண்ணின் கண்ணீரின் கீழ் நீ சந்தோசமாய் பயணித்திட நினைக்க வேண்டாம். அவளின் இதயம் நிறைந்த கணவனாய் செயற்பட்டு அவளின் புன் சிரிப்பைக் காணும் சந்தோசத்தோடு வீட்டை விட்டு வெளியில் சென்று வீட்டிற்குள் வா!. அதுதான் ஒரு இல்லற வாழ்க்கைக்கு வெற்றியாயிருக்கும். அவளுடைய மகிழ்ச்சி பலமடங்கு உயர்வை உனக்குத் தரும். அவளை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும் உன்னை கடவுள் முகம் பார்ப்பார். எல்லா சுகமும் தானேக் கிடைக்கும். வாழ்க்கை ஒர் தவம். வரம் கொடுப்பணை.இதை அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் வாழ நினைக்காது அறிவாலும் அன்பாலும் வாழ்ந்திட முயற்சிக்க வேண்டும். என பலவாறு மகனுக்கு அறிவுரைக் கூறி தெளிவுப் படுத்திய மல்லிகா அகிலாவைப் பார்த்து அவளது கீழ் தாடையைத் தனது வலது கையால் தூக்கித் தாங்கிப் பிடித்து நீயும் அமுதன் கூறியவற்றையெல்லாம் மனதில் வைத்து வருத்தப்பட வேண்டாம். நீங்களிருவருமே சிறியவர்கள். ஒருத்தரை ஒருத்தர் புரிந்துக் கொண்டு அன்பாய் ஆதரவாய் ஆசையாய் வாழ்க்கையை வழி நடத்திட பழகிக் கொள்ளுங்கள். நீயுமிந்தப் பிரச்சினையை உன் வீட்டார் வரைக் கொண்டு
செல்ல வேண்டாம். அவர்கள் மனசு தாங்கமாட்டார்கள். அத்தோடு அமுதன் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் மரியாதையும் குறைந்திடும். அமுதன் மேல் வைத்திருக்கும் மரியாதைக் குறையும் போது உங்களிருவராலுமே அவர்களிடம் முகம் கொடுத்து உறவாடிட சங்கடமாயிருக்கும். அதுவேயிரு குடும்பத்தாரிடையே இடை வெளியை ஏற்ப்படுத்தி பகையை நிலைத்திட செய்திடும்.
எனவே இதுவரை நடந்த எல்லாவற்றையும் இருவருமே ~~ஒரு மழை பேய்ந்து ஓய்ந்து விட்டதாய்; நினைத்து மறந்து விடுங்கள்||. இப்படி அன்பாக அறிவுரைக் கூறிய மல்லிகாவைப் பார்த்து அகிலாவால் எப்படிப் பாராட்டுவதென்றேத் தெரியவில்லை. மகன்களுக்கு அம்மாயென்றால் இப்படித்தானிருக்க வேண்டும். இவர் அமுதனுக்கு மட்டும் அம்மாயில்லை. எத்தனையோ மகன்கள் வாழ்க்கையை பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இப்படியான அம்மாக்கள் அமைய வேண்டும். இப்படியானவர்களால் தான் மகன்களை வாழவைக்க முடியும். எனக்கு இவர் மாமியார் வடிவிலான பெண் தெய்வம.; நிறையப் பெண்களுக்கு இப்படியான தெய்வங்கள் கிடைப்பதால்தான் வாழ்க்கையை அனுபவித்து இரசித்து மகிழ்ச்சியாய் வாழமுடிகின்றது.
அன்போடிருக்கும் தன் மாமியாரைப் போன்ற தெய்வங்களிருக்கும் வரை மகன்களின் மருமகள்களின் வாழ்க்கைகள் உண்மையிலேயே ஆசீர் வதிக்கப்பட்ட வாழ்க்கையாகவே அமைந்து விடும். அதேபோன்று அம்மாக் கூறிய அறிவுரைகளைக் கேட்டுக் கொண்ட அமுதனும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே!. இப்படியான அம்மாக்கள் கிடைப்பது தவமென்றால் நல்லக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மகன்களும் மகள்களும் கூட ஆசீர் வதிக்கப்பட்ட மானிடம் தான். கடவுளுக்கு நன்றிகள் கோடி என மன நிம்மதியில் சந்தோசப் பட்டாள் அகிலா.