அவமானப்பட்ட கணவர்கள்




ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ் எங்கும் பரவியிருந்தது. நந்தனிடம் வரனாசி என்ற ஒரு அமைச்சன் இருந்தான். அவன் நல்ல மதியூகி, கல்விமான, உலக அனுபவம் உடையவன், சிறந்த இராஜ தந்திரி.
அரசனும் அமைச்சனும் சிறந்த பண்பும் புகழும் பெற்றவர்களாக இருந்தாலும் மனைவியரிடம் அடங்கிக் கிடப்பவர்கள். மனைவியர் என்ன சொன்னாலும் தட்டாது செய்து பழகிவிட்டவர்கள்.
ஒருநாள் அமைச்சருக்கும் அவன் மனைவிக்கும் சிறு சச்சரவு மூண்டது. சச்சரவை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அமைச்சன் அன்பே அர்த்தமற்ற சிறு விஷயத்துக்காக இப்படி நீ சண்டை பிடிப்பது நல்லதல்ல. உன்னுடன் சமரசமாகப் போக எண்ணுகின்றேன். நான் என்ன செய்தால் திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாய் என்று சொன்னால் அவ்வாறே செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றான்.
உங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு என் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாள் மனைவி.
அமைச்சன் அவ்வாறே செய்த ஒரு வகையாக மனைவியைச் சமாதானப்படுத்தினான்.
பிறிதொரு நாள் மன்னனுக்கு அவன் மனைவிக்கு மிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
என்ன முயற்சியெடுத்தும் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாத அரசன் அவளிடம் சரணாகதியடைந்துவிடத் தீர்மானித்தான்.
அன்பே நீ தொடர்ந்து சண்டை போட்டால் ஊர் சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இது நம் இருவருக்கும் நல்லது அல்ல. அதனால்தான் என்ன செய்தால் நீ திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாயோ அதைச் சொல். அப்படியே செய்து விடுகின்றேன் என்று கூறினான்.