அலுமார்






(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சீனிச்சரை சுற்றி வந்த கடதாசி. எழுத்து விரித்துப் பார்த்தான். ஏதோ ஒரு பள்ளிக் கூடத்தின் பரீட்சைத் தாள்போலிருந்தது. சமயபாடம். நாலாம் வகுப்பு. பள்ளிக் கூடத்தின் பெயர் இருந்த இடம் கிழிந்து போக, மூன்றாந் தவணை என்பது பாதி தெரிந்தது. பெயர் என்றிருந்த இடத்தில், க. சிவசுதன் என்று குழந்தை எழுத்துக் கள். வலு அக்கறை எடுத்து எழுதப்பட்டவை.

ஐந்து வயது முடிய முதலாம் வகுப் பிற் சேர்ந்திருந்தாலும், இதை எழுதிய போது அந்தப் பிள்ளைக்குக் கிட்டத்தட்ட ஒன்பது வயதிருந்திருக்கும். ஒன்பது வயதில் ஒரு பிள்ளை எழுதிய பரீட்சையின் விடைத்தாள்…
பெயருக்குப் பக்கத்தில் சிவப்பு வட்டத் திற்குள் ஒரு சிவப்பு முப்பது முழிசிக்கொண் டிருந்தது. கேள்வித் தாளிலேயே விடையும் எழுதவேண்டும். அச்சடித்த கேள்விகள். அருகில் விடை எழுத இடைவெளி. சுருக் கங்களை இழுத்துவிட்டு மேலோட்டமாகப் பார்த்தான். சரிகளிலும் அதிகமான பிழை அடையாளங்கள்.
முதலாங் கேள்வி, தேவாரம். ‘தோடுடைய செவிய’னை சிவசுதன் சரியாக எழுதியிருந்தான். பத்து மாக்ஸ். பிறகு, அநேகமாக எல்லாம் ஒரு சொல் விடைகளாக இருந்தன- கடைசிக் கேள்வியைவிட அதில் திருக்கோவிலில் செய்யத் தகாத ஐந்து குற்றங்களை எழுதும்படி கேட்டு, கீழே ஐந்து வரி விட்டிருந்தார்கள். ‘கதைத்தல்’, ‘துப்புதல்’ என்று இரண்டு சரி. மற்ற மூன்றும் வெறுமை.
இடையில் ஓரிடத்தில் ‘அலுமார்’ என்றெழுதி, அந்தப் பிள்ளை பிழை வாங்கியிருந்தது. கேள்வியைப் பார்த்த போது ‘கீழ்க் காணுஞ் சொற்களுக்குப் பொருள் தருக. அந்தணர் – பிராமணர்; சரி. அடுத்தது, அமரர் அதற்குத்தான் அலுமார். அமரருக்கும் அலுமாருக்கும் என்ன ஒற்றுமை அந்த மனதில் பட்டிருக்கும்?
அநுமாரை ‘அலுமார்’ என்றெழுதிய அந்தப் பிஞ்சை ஒரு தரம் பார்த்துக் கொஞ்ச, அவன் ஆவல் கொண்டான்.
– மல்லிகை, 1978.
– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.