அட ராமா!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2025
பார்வையிட்டோர்: 193 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, புருசனும் பொஞ்சாதியும் இருந்தாங்க. ரெண்டு பேரும் வேலக்கிப் போனாத்தான் கஞ்சி, இல்லண்டா பட்டினி. கஞ்சி குடிச்சுங் குடிக்ககாமயும் வாளுராங்க. அர வகுத்துக் கஞ்சியும் – கா வகுத்துக் கஞ்சியுமாக் குடிச்சுக்கிட்டு இருக்குறாங்க. 

ஒருநா, காலையில எந்திருச்சு வெறகு வெட்ட மலக்கிப்போனார். போகயில, எடவழியில, ராமாயணக் கத சொல்லிக்கிட்டிந்தாங்க. போனவ, கத கேட்டுக்கிட்டு ஒக்காந்துகிட்டா. கத கேட்டுக்கிட்டேத் தூங்கிட்டா. எந்திரிச்சுப் பாக்கயில, பொழுது விழுந்திருச்சு. 

கத சொன்னவங்களெல்லாம் போயிட்டாங்க. அட ராமா!! பிள்ள குட்டிகளப் பட்டினியா போட்டுட்டியேண்டு ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தர். வீட்ல, பொண்டாட்டி ஆர்ப்பரிச்சுட்டு இருக்ககா. அந்த நேரத்ல வாரா. வரவும், சம்பாரிச்சுட்டு வந்ததக் குடு, கஞ்சிக்கு வாங்கிட்டு வரணும்ண்டு, பொண்டாட்டி கேக்குறா. கேக்கவும், இல்ல! மலக்கிப் போனே. போற வழில ராமாயணக் கத சொன்னாங்க. செத்த நேரம் கேட்டுட்டுப் போகலாம்ண்டு ஒக்காந்தே. ஒரங்கிட்ட்ே. இண்ணக்கிச் சும்மா வந்திருக்கேண்டு சொன்னா. 

நீ கெட்ட கேட்டுக்கு, நீ பெறந்த கெழமக்கி, ஒனக்கு ராமாயணக் கத கேக்குதோண்ட்டு, வௌக்க மாத்தக் கொண்டு, நாலு மாட்டு மாட்டிப்பிட்டா. கோவிச்சுக்கிட்டு, வீட்ட விட்டு வெளியேறிப் போயிட்டர். போயி, மலயில உருண்டு செத்துப் போகலாம்ண்டு நெனச்சுக்கிட்டு மலக்கிப் போறர். 

உச்சி மலக்கிப் போயி, அங்கிருந்து, அட ராமாண்டு சொல்லிக்கிட்டு விழுகவும், கீழ விழுக விடாம, கிருஷ்ணர் வந்து ஏந்திக்கிட்டாரு. ஏப்பா? ஒனக்கு என்ன ஆச்சு? ஏஞ்சாகணும்ண்டு நெனச்சு மலயில இருந்து விழுகுறேண்டு கேட்டாரு. கேக்கவும், நா அன்னாடு, வேலக்கிப் போனாத்தே கஞ்சி, போகலண்டா இல்ல. நேத்து வேலக்கிப் போகயில, ராமாயணக் கத கேட்டுக்கிட்டிருந்திட்டே. . எந்திருச்சுப் பாத்தா பொழுது விழுந்திருச்சு. வீட்டுக்கு வந்தே, இண்ணக்கிச் சம்பாத்தியக் குடுண்டு பொண்டாட்டி கேட்டா. வேலக்கிப் போகலண்டு சொன்னே. ஏ…ண்டா நீ கெட்ட கேட்டுக்கு ராம கத வேறயாண்டு வெளக்கமாத்ல அடிச்சுட்டா. என்னால பொறுக்க முடியல. அதா சாகலாம்ண்டு வந்தேண்டு சொன்னா. 

எங்-கதயக் கேட்டதுனாலதான ஒனக்கு வௌக்கமாத்தடிண்டு ராமரு நெனச்சுக்கிட்டு, யப்பா!! மூணு உருண்ட தர்ரே. அதக் கொண்டு போயி வீட்ல வச்சு, பத்தி பொருத்தி வச்சு, வணங்குனயிண்டா, நீ கேட்டது எல்லாம் வரும். அத வச்சு நல்லாப் பொௗச்சுக்கண்டு அனுப்பி வச்சாரு. 

உருண்டய வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தர். வந்து, பத்தி பொருத்தி வச்சு, வணங்கி, மாடமாளிக வாண்டு சொன்னர், வந்திச்சு. நக – நட்டு, பண்ட பாத்திரம் வாண்டு சொன்னர், வந்திச்சு. நஞ்ச – புஞ்ச தானியந் – தவுடு வாண்டு சொன்னர், வந்திச்சு. சகல வசதியோட வாழ்றா. 

இதப்பாத்த அடுத்த வீட்டுக்காரிக்கு பொறாம வந்திருச்சு. இந்தச் சக்காளத்திக்கு எப்டி இம்புட்டுச் சொத்து வந்திச்சுண்டு நெனச்சுக்கிட்டு, பையாப் போயி, ஏது இம்புட்டு சொத்துண்டு கேட்டா. கேக்கவும், அவ, எம் புருசன வேலக்கிப் போகச் சொன்னே. அவரு போகாம, ராமாயணக் கத கேட்டுட்டு வீட்டுக்கு வந்தாரு. வெளக்கமாத்தக் கொண்டு அடிச்சுப்பிட்டே. கோவிச்சுக்கிட்டுப் போயி மலையிலிருந்து விழுந்தாரு. அப்ப ராமரு வந்து ஏந்திக்கிட்டாரு. மூணு உருண்டயக் குடுத்து, இத வீட்டுல வச்சு வணங்கி, எதக் கேட்டாலும், அது வரும்ண்டு சொல்லிக் குடுத்தாரு. அதுமாதிரி செஞ்சு, பூராத்தயும் வரவச்சோம்ண்டு சொன்னா. இதக் கேட்ட அடுத்த வீட்டுக்காரி, வீட்டுக்குப் போயி, புருசன ராமாயணக் கத கேக்கப் போகச சொன்னா . கத கேட்டுட்டு வீட்டுக்கு வந்தவன, வெளக்கமாத்தக்கொண்டு அடிச்சு, வெளியே பத்தி விட்டுட்டா. இவ் வெறுத்துப்போயி, கோவிச்சுக்கிட்டு மலயிலிருந்து உருள, அதே மலக்கிப் போறா. உருளயில, ராமரு வந்து காப்பாத்தி, மூணு உருண்டைகளக் குடுத்து, போயி நல்லா பொழச்சுக்கண்டு சொல்லி அனுப்பி வச்சாரு. 

நேரா வீட்டுக்கு வந்தர். பத்தி பொருத்தி வச்சர், வணங்கினர். வணங்கிட்டு, மாட மாளிக வரணும்ண்டு சொன்னர். மாடமாளிக வந்திருச்சு. எடையில பொண்டாட்டி, எனக்கு நக – நட்டுக் கேளு! நக – நட்டுக் கேளுண்டு தொந்தரவு படுத்திக்கிட்டிருந்தா. வாழுறதுக்கு வேண்டியதெல்லாங் கேட்டுக்கிட்டிருக்கே, நச நசண்டு- நச்சரிக்கிறியேண்டு கோவுச்சுப் பேசுறா. 

நஞ்ச – புஞ்ச வரணும்ண்டு கேட்டர். இவ எடமறுச்ச நக நட்டு வரச்சொல்லுங்கண்டு சொன்னா. பொண்டாட்டி அரிப்பையும் சகுச்சுக்கிட்டு எல்லாத்தையும் வரவழச்சிட்டர். 

சாப்பாடு வாண்டு சொன்னா. அதுக்குள்ள நக கேளுண்டு சொன்னா. நா இங்க என்ன பாடுபட்டுக் கேட்டுக்கிட்டிருக்கே. நிய்யி என்னடாண்டா, நக வா, மயிருவாண்டு கத்துறியேண்டு கோவத்துல சொன்னர். சொல்லவும் வீடு பூராவும் மயிரா வந்து நெறஞ்சு போச்சு. மயிரு வாண்டு சொன்னான்ல்ல. அதா வருது. அளவு கடந்து வந்து, இவங்களப் போட்டு மயிரு மூடிக்கிருச்சு. மயிருத் தொந்திரவு பொறு முடியல. இதென்னடா வம்பாப் போச்சுண்ட்டு, 

அந்தவெளம் – இந்தவௌம்ண்டு மாடமாளிகயும் வேணாம், ஒரு மயிரும் வேணாம் எல்லாம் போண்டு, கடசி உருண்டையப் போட்டா. நஞ்ச – புஞ்ச, நக – நட்டு எல்லாம் போயிருச்சு. கட்சில பாத்தா, பழயபடி ஓட்டை வீட்டுக்குள்ள ஒக்காந்திருக்காங்களாம். இந்தக் கழுத நச்சரிக்காம இருந்தா என்னா. ஆச புடிச்ச கழுத, நக நட்டப் போட்டு, சும்மா அலைக்கச் சொல்லுதாக்கும். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *