கதையாசிரியர் தொகுப்பு: கோ.புண்ணியவான்

19 கதைகள் கிடைத்துள்ளன.

புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை

 

 எனக்கு மீண்டும் மரண வாடை வீசத்தொடங்கியது. கொஞ்சம் பின்னகர்ந்து போனால் விளக்கமாகச் சொல்லலாம். 1. ஈப்போ ஜாலான் கிந்தாவில், ரேடியோ மலேசியாவுக்கு எதிர்ப்புறம், சீனர்கள் அதிகமாக வாழும் புறநகர்ப்பகுதியை ஒட்டிய கிந்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியின், டொமெட்ரியின் மூன்றாவது மாடியில், நள்ளிரவைத்தாண்டிய மூன்றாவது ஜாமத்தின் ஒரு அந்தகாரப்பொழுதில் உறக்கம் என்னை அரக்கத்தனமாக இறுக்கமாக அணைக்கத்தொடங்கிய நேரம். குளோர் என்ற சத்தத்துடன் ஏழெட்டு பயிற்சி ஆசிரியர்கள் பொறுக்கிகளாக பரிமாணம் கண்டு அந்த டோமெற்றிக்குள் மிகுந்த ஆரவாரத்துடன் நுழைகிறார்கள்.வெண்கல கடைக்குள்


சாமி கண்ண குத்திடுச்சு

 

 போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார்.பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாக தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார்,கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக்கேப்பார்,” என்று மேலும் சொன்னார் தலைவர். “ வருஷா வருஷம் பாரிட் புந்தார்லேர்ந்து சாமிக்கண்ணு கரகப்பூசாரியத்தான கூப்பிடுவோம்.அவருக்கிட்ட என்னா


கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

 

 ராணியின் அப்பா லமர முனீஸ்வரர் லயத்துக்கு நேந்துவிட்ட கடா டு, முனியம்மா வீட்டுக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன் சொந்தக்காரன் சொன்ன கிரயத்துக்கே வாங்கிவந்து, இப்போது கொழு கொழுவென்று வளர்ந்து சாமிக்கு விட்டது என்ற பெருமையோடு, ‘சாமி குத்தமாகிவிடுமே’ என்று,யார் தொந்தரவுக்கும் ளாகாமல் சாவகாசமாய் சுற்றிக்கொண்டிருந்தது.ராணி றாம் ண்டு அரசாங்க சோதனையில் ஏழு ஏ பெற முனீஸ்வரரின் கிருபை கிட்ட, நெருங்கிய உற்றார் உறவினரை அழைத்து, நல்ல நேரம் பார்த்து,


பள்ளிக்கூடம்

 

 அந்த ஊர் தன்னை வெளியுலகுக்குக் காட்ட மறுக்கும் கோர முகங்கொண்ட பெண்ணைப்போல ஒடுங்கிப் பதுங்கியிருந்தது. செம்பனையின் தரைதட்டும் பச்சை மட்டைகளால் தங்களைத் தாங்களே மூடிக் கொண்டதுபோல ஸ்கோட்சியா தோட்டப் பிரிவு ஏழு வெளியுலகத்திலிருந்து எட்டியும் விலகியும் நின்றிருந்தது. வயதோடி மூப்படைந்து மரத்தண்டை விட்டு பிரிய மனமற்றும் ,ஒட்டுறவோடு வாழ பிடிப்பற்றும் தொங்கும் செம்பட்டை நிறமேறிய மட்டைகள் நிலையாமையைச் சுட்டும் வண்ணமாய்த், துவண்டு தொங்கிக் கிடந்தன. தார் சாலையிலிருந்து சூரியன் உதிக்கும் திசையில் திரும்பிக் கிட்டதட்ட பத்து கிலோமீட்டர்


தொடுதூரம்

 

 அவள் முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே என் இயல்பு சரிந்துவிட்டிருந்தது. சோகம் ஒட்டுண்ணியோ? நாற்பதாண்டுகால தாம்பத்யம். அறுபதைக்கடந்து விட்டிருந்த முகம் .அவளுக்கு மூப்பேறிக் கொண்டிருக்கிறது என்பது சோகசெய்திகளின் கிடங்கான இதயத்திலிருந்து இடம்பெயர்ந்ததால் உண்டாவது ! இதயம் எவ்வளவுதான் தாங்கும்? அதனை இடம் பெயர்த்த வேண்டாமா? அதற்காகத்தான் முகம் என்றாகிப்போனதோ!.காரை பெயர்ந்து வாட்டத்தில் மேலுமொரு சோகத்தைதப் புதிதாய் பதிவேற்றம் செய்து வைத்திருந்தது. அதனை வெளியேற்ற என் வருகைக்காகக் காத்திருந்தாள் போலும்! “என்னாச்சு?’ சற்று நேர மௌனத்துக்குப் பிறகு- “அவனுக்கு கொழந்த