பெண்மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 4,686 
 

அவனுடைய மனம் குழப்பமாகவே கிடக்கிறது.எழுத்து வேலையில்,’மனசு இறங்க மாட்டேன்’என முரண்டு பிடிக்கிறது.தேத்தண்ணீர் ஆற்றுறவன் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும்., ம‌ரதன் ஓடுறவன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எழுதுறவனும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். முகமூடியைப் போட்டு விட்ட நடிகன் பிறகு அதை கழற்றி வைக்க முடியாதல்லவா. அவன் நிறுத்தி விட்டால், யார் கோகுலனா, அப்படி ஒரு பிறவி இருந்ததா ? புறநாடாக இராது சொந்த நாட்டில் இருந்திருந்தால், அங்கேயும் சொந்தமாக காணி நிலமும் வேண்டுமய்யா, ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவி நினைவு கூர்ந்து வருவார்கள்.ஒரு மாமரக்கன்றை அல்லது ஒரு முருங்கையை நட்டு விட்டு அது பலன் தருகிற போதெல்லாம் அரூபமாகவும் அவனும் வலம் வந்து கொண்டிருப்பான். இது கண்டம் விட்டு கண்டம் மாறி பனி விழும் மண்ணிலே இங்குள்ள சிறிதுபனிபிடித்த மக்களிற்கு மத்தியில்…அடையாளமே இல்லை. தன் இருப்பை மறக்கடிக்கக் கூடாது என்று நம்மாள், வீட்டிலே அடிக்கடி முறைக்கிறார், திட்டுறார்….சிந்தித்துப் பாருங்கள்.என்ன செய்வது உலகச்ம் இப்படி தான் இயங்கிறது.எமக்கெல்லாம் ஒரு நல்ல குரு,வழி நடத்த ஒரு அமைப்பு வந்து அமைவதில்லை. வெளியிலும் அதே தான் நிலமை.

அமெரிக்கத் தலைவர் ‘சுப்பர் போல்'(கிரிக்கெட்) வருணையாளர் போல’ரஸ்யப் போரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். கனடாத் தலைவர் மூச்சு விடாமல் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சினிமா பாட்டு பாடுறது போல, தடை உத்தரவுகளை விதித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கொசுறுச் செய்தி, கனடிய தலைவரின் தந்தையார், சோவியத் ரஸ்யாவிற்கு யாலுவா, சீனாவிற்கு யாலுவா, கியூபாவிற்கும் யாலுவா க இருந்தவர். நேட்டோ தோழர்கள் பரிகசித்த போதிலும்….இருந்தவர். தற்போதையவர் வாரிசாக இருந்திருந்தால்….இந்தப்போரை நிகழ விட்டிருக்க மாட்டார். உலக வெப்பதிற்கு குரல் கொடுத்தவர்”போரும் ஒரு காபன் பிரச்சனை தான் !”என்பதை புரிந்து நிறுத்தி இருப்பார். இனி, இந்த ஜென்மத்தில் இந்த நாடு…இவ்விரு பிரச்சனைகள் பற்றிக் கதைத்தால் கை கொட்டிச் சிரிப்பார்கள். இந்த பையன்,’தானே கட்டிய அழகான‌ பொம்மையை நிலத்தில் போட்டு உடைத்து விட்டது !. இவருகைய கட்சியில் இருந்த கிழவரான பழுத்த தலைவர் ஒரு முறை கூறினார்”நாம் அடிக்கடி பெரியவருக்கு….முதுகை தேய்த்து குளிப்பாட்ட விட வேண்டி இருக்கிறது”என்றார்.”ஈராக் போருக்கு போகவே முடியாது”என்றார். பிறகு வந்தவர்…நாட்டை போருக்கு கொண்டு போய் விட்டார். இவருடைய தந்தையைப் போல சிமார்ட்டானவர்களை இனி காண மாட்டோமா ?….என்றிருக்கிறது. அன்று”நாம் கூட்டு நாடு தவிர, கொத்தடிமை நாடில்லை”என்கிற இவர்களின் முழக்கங்கள் உலகில் அமைதி அலைகளை அடிக்க வைத்திருந்தன. என் நண்பன் ஒருத்தன் கூறினான். போடிங் ( ரெசிடென்ரல் ) ஸ்கூல் விவகாரத்தில் சிறு குழந்தைகளைக் கூட…புதைத்திருக்கிறார்களாம். சீனாவைப் போல நம்நாடும் மனித உரிமைப்பிரச்சனையில் மாட்டுப்பட்டிருக்கிறது. அதை திசை திருப்பவே, அந்த பைலை மூடி விடவே, அமுத்தி விடவே போர்ப்பிரகடனங்கள். உக்ரேன் நாட்டுத் தலைவர் இவரை விட‌ இன்னும் சின்னப்பையனாக‌ இருக்கிறான்”என்கிறான்.

நம்நாட்டில் நிலவுகிற தற்போதைய‌ எரிபொருள் விலை ஏற்றத்திற்கு முழுக்க, முழுக்க நம்மவரே காரணம்.

இந்திராகாந்தி போல ராஜீவ்க்கு அறிவும் தைரியமும் இல்லை. அதே கதை தான் இங்கும். ஐயாவின்,”உலகம் கொதிக்கிறது, காபன் வரி”களுக்கு அர்த்தமில்லாமல் போய் விட்டது.”இந்தப் போரை நிறுத்தி பேசுங்கள் என்று ஒரு சொல்”இவர் வாய்யிலிருந்து வரவில்லை. இவரா இயற்கையை எதிர் கொள்ளப் போற நாளைய‌ விஞ்ஞானி.”ஆயுதங்கள்….?”வியாபாரம் சூடு பிடிக்கிதில்லை. மற்றவர் வாய்யிலிருந்து…”அகதிகளை ஏற்பேன்”என்ற ஒரு வார்த்தையைக் காணவே இல்லை. மற்றொரு மலையாள நண்பர் ஒருத்தர் கூறினார்.”இது நேட்டோ கூட்டமைப்பில்லை. கொத்த‌டிமை அமைப்பு. இந்த தலைவர்களால் தான் வாகன எரிபொருள் விலை விண்ணைத் தொடுகிறது”என்கிறார். உண்மை போலில்லையா ?. இவர் தந்தையைப் போல ஒரு கூட்டமைப்புத் தலைவராக‌ இல்லாமல் போய் விட்டாரே ? என்று ஏக்கமாக இருக்கிறது. இவரின் அர‌ங்கேற்றத்தின் போது சிறு நம்பிக்கை இருந்தது. இங்குள்ள சுதேச மக்களின் இனப்படுகொலைகள் வெளிவரவே…..அதை அமுக்கி விடவே, அதற்கு முற்றுப் புள்ளி வைக்கவே மற்றவர் பேச்சைக் கேட்டு…. சிறு பிள்ளையாக‌ மாறி விட்டார் என்றும் கூறுகிறார்கள்.’ஒரு ஹீரோவாக எழ வேண்டியவர் புஸ்வாணமாகப் போய் விட்டார். எந்த வரைகோடும் ஏறி வீழ்ந்து தான் போகும்’போல… இருக்கிறது.இவருக்கும் காலம் இருக்கிறது. மாறுவாரா எனப் பார்ப்போம்.

கொரொனா அலைகளில்…சற்று ஓய்வாக இருக்கிற நிலையில் உலகத்திற்கு கட்டாயம் அமைதி தான் வேண்டி இருந்தது. போரில்லை. கொரொனா, இறப்பில் சம்பியன் அடித்த அமெரிக்காவின் கஜானா காலி. எனவேத் தான் பெலரூஸில் ஒரு சதி முயற்சியில் இறங்கி கிளறி விட்டிருக்கிறது. வியாபாரம் அந்த மாதிரி எகிறும் அல்லவா. பத்து பிலியனுக்கு மேலே…கடனுக்கு விற்று விட்டிருக்கிறது. மற்ற உதவிகள் கொசிறுகள். தென்னமெரிக்க நாடுகள்”கடன்பொறிகள்”என்கின்றன. ஒரு வியாபாரி கடனை வசசூலிக்காது விட மாட்டான். உக்ரேனியருக்கும் ரஸ்சியருக்குமல்ல போர் நடைபெறுகிறது. ர‌ஸ்சியருக்கும் ரஸ்சியருக்கும் தான் நடைபெறுகிறது. அடிபட்டு சாகட்டும் என்பது தான் உலகின் விருப்பம். இப்படித்தான் சொல்லப்படுவது ஸ்டைலாயிச்சே !. வளைகுடாவில்…அடிக்க நாடுகள் இல்லை. எனவே, புயல் இங்கே மையம் கொண்டு விட்டிருக்கிறது.

அதிலே, நம்மவர் ஏன் போய் தலையை மாட்டிக் கொண்டு நிற்கிறார்?. இந்த நாட்டைப் பொறுத்தவரையில் கிழட்டு நரிகள் தான் சிமார்ட்டானவை. இளையவரில்லை.

இந்திராகாந்தியின், ராஜீவ்காந்தியின் முடிவும் இப்படியான ஒரு நீண்ட நகர்வுத்திட்டம் தான் என்று அன்று அரசல் புரசலாகக் கதைக்கப்பட்டது.”சின்னப்பையலே, சின்னப்பையலே ஒரு சேதி தெரியுமா ? இங்கே ஊடகச் சுதந்திரத்திலேயும் கை வைக்கப் பட்டிருக்கிறது அதுவும் தெரியுமா ?. இங்கே இருந்த ஒரே ஒரு வெளியாரின் செய்திச் சேவை ஆர். டி தொலைக்காட்சி தான். அதையும் நிறுத்தி விட்டார்கள். ஏதோ பிழையாக விளையாடப் போறார்கள் என அப்பவே தெரிந்து விட்டது.

ஒலிம்பிக்கிலே அரசியல், லிபியா, சிரியாப் போரைத் தொடக்கிய, ரொன் தாக்குதல்கள் பலவற்றைச் செய்த‌ ஒபாமாவிற்கும் சமாதானப்பரிசு, நோபல்பரிசிலும் அரசியல் புகுந்து விட்டது. உலகம் எங்கே தான் போகிறது !. எந்த நாடுமே”சார்ட்டட் ரைட்ஸ்”உள்ள நாடு என்றால் உண்மையில் போலி. அதுவும் இலங்கை அரசியலைப் போன்றது தான். பேப்பரில் அந்த ரைட்ஸ் தூங்கும் தவிர‌ செயலில் கிடக்காது. சிலவேளை இருப்பதாக தோன்றும். அது வெறும் மாயை மட்டுமே.

நம்மவர், பிராந்திய சுதந்திரத்தைப் பற்றி அழுத்திப் பேசுகிறார். இறைமை என்ற சொல்லும் வந்து விழுகிறது. அச்சொல்,”யேசுநாதர்”போன்ற புனிதச் சொல் போல‌ உச்சரிக்கிறார். இங்குள்ள‌ சுதேசிகளுக்கு சுயாட்சியுள்ள ஒரு மாகாணம் எதிர்காலத்திலும் கூட கிடைக்கப் போறதில்லை எனத் தெரிகிறது.”உலகவிதிகளை மீற முடியாது இல்லையா”என்கிறார். இங்கேயும் ரஸ்யா தான் இரண்டாவது புரட்சியை நடத்தப் போகிறதோ ?. எந்தப் புள்ளியிலிருந்து ஒரு பிராந்திய நாடு பார்க்கப்படுகிறது ? என்றதும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். ஈழத்து நிலங்களுக்குள் சிங்களம் புகுகிறது. பாலாஸ்தீனர் நிலங்களுக்குள் இஸ்ரேல் புகுகிறது. அமெரிக்கா ஏற்கனவே மெக்ஸிற்கோவின் மாநிலங்களையே தன்னுடையவையாக்கி விட்டிருக்கிறது. இங்கே கலிபோர்னியா மாநிலம் பாதி, பாதியாகக் கிடப்பது போல பஞ்சாப் மாநிலமும் இந்தியாவில் பாதியாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, அதை முழுமைப்படுத்தி தன்னுடன் சேர்த்துக் கொண்டாலும் கூட பிராந்திய நாடாகவே இருக்கும். இயங்கும் நடைமுறையில் முடியும். சர்வதேச விதிகள் அதைத் தான் கூறிகின்றனய்யா. இங்கேயுள்ள‌ அனைத்துப் பகுதிகளிலும் இருக்கிற சுதேசிகளின் நிலங்களை இணைத்து ஒரு மிதக்கும் மாகாணத்தையும் ஏற்படுத்த முடியும். அவர்களுக்கென சுய‌பொலிஸ், நில…விசேச உரிமைகள் கொண்டிராத வரையில் அவர்கள் வேட்டையாடப்படுவார்கள். இனப்படுகொலையுறுவார்கள். இங்கே, இவர்களுக்காக நடத்திய போர்டிங் பள்ளிக்கூடங்களில் சிறுவர்கள் பலர் கொலையுண்டு போய் இருக்கிறார்கள். சிறு குழந்தைகள் கூட கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி இருக்கிறது. எப்படி கொலைகள் நிகழ்ந்திருக்கும் ? என்ற கேள்வி கண்டறியப் பட வேண்டும். மோசமான பதில்கள் வரும் என்பதை முன்னமே அறிந்து….இனப்படுகொலை தான் நிகழ்ந்திருக்கிறது என்பதை நாடு ஒப்புக் கொண்டிருக்கிறது. மீட்சிக்கு வழி கிடைக்க வேண்டும். முன்னொரு காலத்தில் பிரித்தானியா லூசியானா பெரும் மாநிலமாக இருந்த போது இவர்களுக்கு…என‌ ஒர் ஸ்டேட்ஸை அங்கே ஏற்படுத்த நினைத்ததாம். அது எல்லாவற்றையும் தொடக்கி வைக்கிறது. சில முயற்சி புஸ்வாணமாக போய் விடுகிறது. பிறகு, கீறுற வரைகோடுகளிலும் இரத்தையும் கொப்பளிக்க வைத்து விடுகிறது. அதுதான் வருத்தமளிக்கிறது. இலங்கையில், ஈழத்தமிழர் படுகொலை போனதிற்கு இவர்களது கவலையீனம் தான் பெரிதும் காரணம்.

அவனுக்கு தமிழ்த் தேசியத்தை அறிமுகப்படுத்திய அப்பாத்துரை அமிர்தலிங்கத்தின் நினைப்பு வருகிறது.அவர் மீதுள்ள மரியாதை இன்றும் மனதிலே இருக்கிறது. அவன் வசித்த கிராமத்திற்கு அருகில் இருந்த மூளாய் ஊரில் இருந்தவர். மூத்த பட்ஜைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் துரோணர் போல அவனை அரசியல் நீரோட்டத்திற்குள் இழுத்து விட்டவர். ஏன் அவரைப் போல எல்லாம் என்னால் பயணிக்க‌ முடியவில்லை ? என்று யோசிக்கிறான். சுய தைரியம், சமூகத் தைரியம் எல்லாம் போதியளவில் இல்லாது….கிடப்பதால் தானா ?. அடிமை வாழ்வு வாழ இன்னும் நினைக்கலாமா ?. எனக்கும் தைரியம் பத்தவில்லையா ! பனிக்கண்டமும் மனதை… இருட்டாக்கி விட்டிருப்பதும் உண்மை தான். வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான். காயத்திரி, இன்றைய திகதியில் தான் ஒரு மாதத்தில் இறந்து போயிருந்தாள். ஒவ்வொரு மாதத்திலும் இந்த திகதியில் அவனை தேடி”அப்பா”என வருவதை உள்ளுணர்வால் அறிந்து கொள்கிறான். ஒவ்வொரு மாத்தத்திலும்…..இப்படி கோவிலுக்கு பயணிக்கிறான். அர்ச்சனையை அவள் பேரில் மட்டுமே தொடங்கி இருந்தான். அடுத்த மாசம் பகீரதியின் பேரையும் அதே அர்ச்சனைச் சீட்டில் சேர்த்தான். அப்ப தான் பகீயின் நட்சத்திரத்தையும் அறிந்தான். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு… தன் பேரையும் இப்ப‌ சேர்த்து விட்டிருக்கிறான்.

உலகில் யார் தான் முழுமையானவர்கள்.

நம்நாட்டுத் தலைவர் இல்லையா?, நாம் எந்த மூலை, என்ன!. கண்ணன் பாரதத்தில்”நாம் (உடல்) சட்டையை மாற்றிக் கொள்கிறோம். ஆன்மாவை அல்ல.”என்கிறான். நம்புங்கள். முற்பிறப்புகளிலே சந்தித்துத் தொடர்கிற பயணம் தான் நம் உறவுகள். கண்ணில் துளிர்த்ததை விரலால் தட்டி விட்டு வீதியைப் பார்க்கிறான். எங்கே இருந்தாலும் அடிமை வாழ்வு மாறிப்போய் விடுவதில்லை. இந்த ஒரு நாளிலாவது சுதந்திரத்தை அனுபவிப்போம்.

வாகனத்தை செலுத்துகிறான்.

அந்த பிரமாண்டமான கோவில் சிறிது மன நிம்மதி அளிக்கிறது.அர்ச்சனையை செய்து விட்டு உள்ளே உள்ள விக்கிரங்களை பார்த்து வலம் வருகிறான். இந்தநேரம் ஏனோ… நினைப்புகள் மூளை அடுக்குகளிலிருந்து வெளி வருகின்றன. துர்க்கா சிலையைப் பார்த்ததாலா ?.”பரமார்ந்தக் குருக்களும், சிஸ்யர்களும்”என்ற முட்டாள்களின் கதை ஞாபகம் வருகிறது. ஏன் இப்படியும் எழுதுகிறார்கள் ? என்று நினைத்துப் பார்த்தான். காலையில் அமெரிக்க அதிபர்,”ரஸ்யா இரசாயன ஆயுதங்களையும்…கொடிய ஆயுதங்களையும் பாவிக்கப் போகிறது”என வர்ணித்திருந்தார். ரஸ்யா,”இவற்றை இவர்கள்…இங்கே வழங்கி விடயிருக்கிறார்கள். என உடனேயே விமர்சித்திருக்கின்றது. என்ன சொல்றது என்றால் வாய்யைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்றது இது தான். இலங்கையோ,”நாம் கொத்துக்குண்டுகளையே பாவிக்கவில்லை”என்று ஒரேயடியாய் சாதித்து வருகிறது. விக்கிலீக்ஸ்,”கொத்தை பாவியுங்களன்”என கூறிய அமெரிக்காவின் மெமொ…. பேப்பர்களை அம்பலப்படுத்தி இருந்தது. கடந்த வாரம் தான் பசில் ராஜபாக்ஸாவும் இலங்கையில்”நாம் வடகொரியாவிடமிருந்து… சில ஆயுதங்களைப் பெற்றோம்”என்கிறார். அதாவது கொத்துக்குண்டுகளை…இவர்களிடமிருந்தே பெற்றது போன்ற‌ தகவல். ஏன் இப்ப பேசுகிறார் ?.”’ யாராவது அமெரிக்காவை சுட்டிக் காட்டி விடுவார்களோ ?’என்ற‌ இடிப்பும் சமாளிப்புமா. போரின் ஒவ்வொரு நாளும் கொத்துக்குண்டுகளால் ஈழத்தில், எப்படி நாம் அச்சத்துடன் உயிரைக் கையில் வைத்துக் கொண்டு செல்கிற போது சிதைந்து சின்னாபின்னமாகிப் போனோம்.

இங்கே இடம் பெயரும் மக்கள் அனைவரும் சிதையாமல்…முழுமையாக‌ செல்கிறார்கள். இவர்கள் ரஸ்யாவை கோவிலில் வைத்து தான் கும்பிட வேண்டும்.

அச்ச உணர்வு. பெண்கள் சிறுவர்கள் பதறுவது…உண்மையில் வலியான நிகழ்வுகள் தான். ஆனால், கண் எதிரே அவலச்சாவுகளையும் காண்பது இதை விட‌ மிகக் கொடூரமானது. இன்று புறநாட்டுத் தலைவர் உட்பட, ஐரோப்பிய நாடுகள், தடைகள் போடுற கூப்பாடு எதுவுமே இலங்கைக் எதிராக அன்று ஏன்….. நடைபெறவில்லை. தடுத்து நிறுத்தவே இல்லையே. நிகழ்ந்தேறும் வரையில் வேடிக்கை தானே பார்த்தார்கள். அன்று விண்ணிலே இவர்கள் அனுப்பி இருந்த சட்டலைட்டுகள் ஸ்ரைக் பண்ணி இருந்தனவா !. பிறகு, ஐ.நா.சபை…பகிரங்கமாக மன்னிப்பைக் கோறியது. நைந்து போன இழையாக நமக்கு இன்னமும் அச்சபையில் நம்பிக்கை இருப்பதுக்கு அந்த நாகரீகப் பண்பு ஒன்று தானே காரணம். ஆனால், இன்று கூட காணாமல் போனோர் விபரங்கள் தெரியாது…உறவுகள் தவித்துக் கொண்டிருக்கிறார்களே. அணுகுண்டைப் போட்டதுக்கு அமெரிக்கா, இன்று வரையில் உலகிடமோ, யப்பானிடமோ ஒரு பகிரங்க மன்னிப்பு கோறியிருக்கிறதா?……கேட்டிருக்கிறதா ?. கோரினால்”நிவாராணம்”கொடுக்க வேண்டும். அநாகரீகப் பண்பைத் தானே காட்டி நிற்கிறது.”நேட்டோ நாடுகளில்…கை வைத்தால் அணுகுண்டை போடவும் தயங்க மாட்டோம்”என்று அப்படையை உசார் நிலையிலே வைத்துக் கொண்டு…,அப்படியான‌.. பயமுறுத்தலில் தான் தோற்ற நாடுகளும் சேர்ந்திருக்குமோ, அதிலே போய் சேரவே நாடுகளும் போட்டி இடுகின்றன.

இந்த ரஸ்யப் போரிலே எனக்கு இரண்டு விசயங்கள் பிடித்திருக்கின்றன. ஒன்று எம்புறநாட்டுத் தலைவர் இங்கே வொட்கா விற்பனையை தடுத்து நிறுத்தி இருப்பது. இப்படி உலகில் பிடிக்காத நிகழ்வுகள் நடைபெறுகிற போது ஒவ்வொரு கிராமத்திற்கும், மாகாணங்களிற்கும் கூட இருந்தால் எவ்வளவு நல்லாய் இருக்கும்.”நாம் இந்த நாட்டின் தயாரிப்புகளை வாங்க மாட்டோம். இங்கே விற்கப்படுவதையும் தடை செய்யுகிறோம்”என்ற உரிமை எம் மக்களுக்கு இருக்க வேண்டும். அப்ப தான் எம் நாடு ஒரு ஜனநாயக நாடு. அதற்கும் இறைமையும் இருக்கிறது. இல்லையோ…?, அதுவும் உக்ரேனைப் போல ஜனநாயகநாடே கிடையாது. இல்லை.

மற்றது ரஸ்யா, கூறியது. 2014 ம் ஆண்டு, உக்ரேனன், லூன்ஸ்,… என இரண்டு மாகாணங்களிலும் இலங்கையைப் போல செல்களை மழையாக அடித்து 14000 மக்களை கொன்றது ஒரு இனப்படுகொலை. அதே மாதிரி இம்முறையும் ஒரு படுகொலையை செய்ய தயாராகி இருக்கிறது”என்றது. அச்சமயம், இரண்டு படகுகளிலும் காலை வைக்க முடியாததால் அதனால் தடுத்து முடியாமல் போய் விட்டது. எம்பகுதியிலும் இதே மாதிரியான ஒரு இனப்படுகொலை தானே நிகழ்ந்தேறியது. உலகம், காந்தியின் குரங்குப் பொம்மை போன்றது தான். அது ஒரு நேரம் வாயை, காதை, கண்ணை மூடிக் கொள்ளுகிறது. ஒரு நேரம் திறந்து பார்க்கிறது.

இந்தப் போர் உக்ரேனால் தொடங்கப்படவில்லை என்பது உண்மை தான். அதன் அயல் நாட்டான பெலரூஸில் ஒரு ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில்….வழக்கம்போல சி.ஐ.எ இறங்கியதை ரஸ்யா கண்ட போதே விழித்துக் கொண்டது. அந்த செய்தி இப்ப நீறு பூத்து போய்க் கிடக்கிறது. படை பிரசன்னம். சுப்பர் போல் வர்ணனையாளர் போல….பைடன்!, எஸ்.பி ஐப் போல மூச்சு விடாமல் பாடுகிற‌, தடை விதிக்கிற‌வராக‌ நம்மவர்….போதுமே கலகலப்பை ஏற்படுத்த !. அனைத்து நாடுகளுமே”ஆயுதம் வழங்குவோம்”என்ற பரணியே பாடுகின்றன. உக்ரேன் ஆயுதங்களை வைத்து சன்விச் செய்து சாப்பிடவா போகிறது? அல்லது விவசாய நிலங்களில் விதைக்கவா போகிறது. ஒரு முட்டாள் தலைவரை, ஒரு நடிகரை தலைவராக்கிய பலனை நாடு எதிர் கொள்கிறது. அவரின் அதிக பிரசங்கித்தனமான நாடக சீன்கள், கொக்டெயில் குண்டுகள், எ.கே 47 களையே வினியோகித்தல்கள். ரஸ்ய தயாரிப்புகளால், சுய தயாரிப்புகளாலே ஒருத்தரை ஒருத்தர் அடித்து சாகட்டும் என்ற நக்கலா ?,”‘விமானங்களில் கூட ரஸ்யத் தயாரிப்புகளே கொடுக்க யோசனை நடக்கிறது’கடைசித் துளி இருக்கும் வரையில் போரை நடத்துவேன்”..கட்டப்பொம்மன் வசனங்கள், நாற்று நட்டாயா…,மற்றய வசனங்களையும் யாராச்சும் அத்தலைவருக்கு தெரியப்படுத்துங்கள். நாடகம் இன்னும் களைகட்டும்.

இப்பவும், உக்ரேன் தானே முதலில் லூன்ஸ் பகுதியில் செல்லை அடித்து போரை தொடக்கி வைக்கிறது.

உடனேயே அவ்விருமாநிலங்களின் சுயாட்சியை ரஸ்யா அறிவித்தது. உலகம் ஏற்கிறது, மறுக்கிறது, கிடக்கிறது….தேவையில்லை. அவ்விடத்து மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள். அது தான் முக்கியம். ஈழத்தமிழர் போல பெருமளவில் வீணே இறந்து போக விடப்படவில்லை. அதோட அமெரிக்க சார்ப்பு நாடுகள் அனைத்துமே”ரஸ்யாவின் செய்திச் சேவையை”தடை செய்து விட்டது. இங்கே இருந்த ஒரே ஒரு மாற்றுச்சேவையும் நிறுத்தப்பட்டு விட்டது. ஊடகச் சுதந்திரத்தில் அரசியல் கை வைத்த உடனே பிழையானவர்கள் யார் என தெரிந்து விடுகிறது. பிபிசி, நாம் ஈழத்தில் இருக்கிற போதே மதிப்பிழந்து போய் விட்டிருக்கிறது. அன்று நாம் காது கொடுத்துக் கேட்டது எல்லாம் பிபிசியை அல்ல, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து ஒலிப்பரப்பாகிய வெரித்தாஸ் செய்திகளைத் தான். இன்று…இங்குள்ள எல்லாமே சிஎன் என் செய்தியின் தரவுகளை வைத்து தான் குதறப்படுகின்றன‌. ஒலிப்பரப்பாக்கின்றன.”எந்தப் போரிலும் முதலில் கை வைக்கப்படுவது ஊடகச் சுதந்திரத்தில் தான் என்பது உண்மை போலவே இருக்கிறது.”இந்த உண்மைகளின் கழுத்து நெறிப்புக்கு ஒரு குரல்….ம் இன்று வரையில் எங்கும் எழுப்பப்படவில்லை ; எழவில்லையே. முதலாளித்துவ நாடுகளில்…உள்ளவை அனைத்துமே அரசியல் சார்ப்பான‌வை. இந்நாட்டுத் தலைவர்,”பிராந்திய நாடு…, பிராந்திய நாடு…”என அடிக்கடி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப‌ முழங்குகிறார். அது, என்னவோ என் காதில்”இலங்கை.., இலங்கை…”எனவே விழுகிறது.”இலங்கையின் இறைமை”யை அடித்துப் பேசுகிறதாகப் படுகிறது. அதில் இருந்து தான் ரஸ்யாவின் பக்கம் நியாயம் இருப்பதாக எனக்கு படுகிறது. இலங்கைக்கு ரஸ்ய ஆதரவாகவே நிற்கிறது. அது இந்திய ஆதரவு நிலைக் காரணமாக இருக்கலாம். ஆனால், ரஸ்யாவும் என்றோ ஒரு நாள் எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரலாற்றில் அதிகமாக தர்மக்குரல் எழுப்பிய நாடு அது. எழுப்பி வருகிற நாடு அது. அது நடாத்திய புரட்சியாலே தான்….நாம் பலதை அனுபவிக்கிறோம். அது இரண்டாம் புரட்சியையும் நடத்தும்.

இலங்கையும் அமெரிக்காவின் வரைபட ஒழுங்கில் தான் இயங்கிறது. இலங்கைத் தலைவரும், மற்றவரும்…அமெரிக்க பிரஜைகள் தாம். சொன்னாலும் உலக மண்டையில் ஏறப்போவதில்லை. முட்டாள்களின் கதைகள் உலகிற்கு ஏன் அவசியமானவை…என உரத்தே… தெரிகிறது. கோகுலனின் மனம் இப்படியே அசை போடுகிறது.

திரும்பி வருகிற போது,

வானொலியில் ஒலிப்பரப்பாளர் லலிதா”இன்று பெண்களின் நாள்”என்று கூறுகிறார்.”இந்த ரஸ்யர்களால் தான் இந்த நாள் உலகத்திற்கு அறிமுகமாகிறது”என்று விட்டு, வழக்கம் போல ஒரு குட்டிக்கதையையும் கூறத் தொடங்கிறார்.”எல்லாள வேந்தனிற்கும் சத்தியஸிரி மன்னனுக்குமிடையில் போர் நடைபெறுகிறது. ரஸ்ய, உக்ரேன் போர் போல தான். அரசர்களும் போரை விரும்புறார்கள் போல இருக்கிறது. தொடங்கி விட்டார்கள். அடிபடுறார்கள். நல்ல காலம்! அன்று, போரை முடிவிற்கு கொண்டு வராமல் இழுத்தடிப்பதற்கு நேட்டோ அமைப்பு இருக்கவில்லை.

போரிலே, சத்தியர் தோற்று விடுகிறார். தண்டனைத்தீவு என்கிற மன்னார் தீவிலே, எல்லாளன் முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சத்தியரும், அவர் பையன் (இளவரசன்) இந்திரபானுவும் நிற்கிறார்கள்.”இருவர் கட்டுகளையும் அவிழ்த்து விடுங்கள்”என…உத்தரவு இடுகிறான். எல்லாளனுக்கு பானுவின் முகத்தைப் பார்த்த போது தன் புத்திரனின் நினைப்பும் கூட எழுகிறது. பால் வடியும் அந்த முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறான். அனுதாபம் பிறக்கிறது. சத்தியரையும் பார்க்கிறான். கிழவர் என்ன மாதிரி வாளைச் சுழற்றுகிறார். பார் வெற்றி பெற்ற என் தேகத்தில், தோளில் காயம். உன்னில் காயமே இல்லை. சுற்றுக்கள் கணக்கிட்டால் நீ தான் வெற்றி பெற்றவன் ஆவாய். பொல்லாத வீரனின் காயம் வலிக்கச் செய்யுதடா”என்று சிரிக்கிறான்.”சத்தியம், உனக்கு ஆயுள் தண்டனையே விதிக்க வேண்டும். நீ வீரன் என்பதால் இந்த மன்னாரில் திறந்த சிறைவாசம் அனுபவிக்கலாம். உனக்கு மாதாந்தம் பொற்கழஞ்சியமும் வழங்கப்படும்.”. அது, தலை மன்னாராகத் தான் இருக்க வேண்டும். அன்று, இது மன்னாருடன் தொடர்பற்றதாக கடலால் பிரிக்கப்பட்ட தீவாகவே இருந்தது. நீச்சல் வீரராக இருந்து நீந்தி தப்பி வந்தாலும் கட்டுக்காவல் பலமானது. திரும்பவும் கொண்டு போய் விட்டு விடுவார்கள். நீ இங்கே இருக்கும் மக்களின் வாழ்வை உயர்த்தி ஒரு தலைவனாக வாழலாம். தீவை விட்டு வெளியேற முடியாது. இதோ நிற்கும் உன் பையன், எனக்கு திறை செலுத்திக் கொண்டு உன் நாட்டை ஆள்வான். அதற்கான ஏற்பாடுகள் முடிந்த பிறகு அவனைக் கூட்டிச் செல்வார்கள். நீ இங்கே உள்ள சத்திரத்திலே தங்கலாம். உங்களுக்கு இரண்டு சோடி உடைகள் அங்கே தரப்படும். தனிய என்றால் சத்திரத்திலே தான் தங்க வேண்டும். உன் மனைவி பிள்ளைகள் (மகள்கள்) தங்கப் போறார்கள் என்றால் உனக்கு வீடு ஒதுக்கித் தரப்படும். அவர்கள் எத்தனை நாள் என்றாலும் உன்னுடன் தங்கலாம்.”என்றான்.

‘இப்ப போனாலும் பட்டத்து ராணி, மகிழ்ச்சியுடன் வரவேற்க மாட்டாள்’என்ற நினைப்பு வருகிறது.’ராணியின் உள்ளத்தில் என்ன தான் அப்படிக் கிடக்கிறது?…அறிய முடியாமல் தவிக்கிறார். அமைச்சர்களிடம் கேட்டாலும், அவர்கள் வீட்டிலே கேட்கிற போது,”என்ன ராஜா, பெண்கள் பற்றியும் ஆராய்ச்சியில் இறங்கி விட்டாரா? பல ராணிகளை வைத்திருப்பவர் அவர்களிடம்…கேட்பது தானே ?” என திருப்பித் தாக்குறார்கள். அதை இவர்களிடம் கேட்டால் என்ன? என்று தோன்றுகிறது.

“சத்தியன், உனக்கு சந்தர்ப்பம் தருகிறேன். என் கேள்விக்கான சரியான பதிலை கண்டு பிடித்துக் கூறி விட்டால்….உனக்கு சிறைவாசம் கிடையாது. உன் மகனும் திறை கட்ட வேண்டியதில்லை. உன் நாடு எனது நட்பு நாடு”என்கிறார்.”கூறுங்கள்”என்கிறான் பானு. அவன் முகத்தில் முறுவல் படர்கிறது. பார்த்தீர்களா ! உலகில் எந்தப் பிரச்சனைக்குமே தீர்வு இருக்கிறது. ஜனநாயகத்தில், வட்ட மேசை ஒன்றுக்குச் செல்வதைத் தவிர வேற வழியே கிடையாது. ஆனால், சமாதானப்பேச்சுக்குப் போறேன் என்று விட்டு, வெளியாரிடம்”ஆயுதம் தா”என்ற பல்லவியை பாட முடியாது. இந்த‌ நிபந்தனை முக்கியமானது. இந்த இலக்கு இல்லை என்றால்…எதைப் பேசப் போறீர்கள். பேச்சுக்களை கை விட்ட பிற‌கு தோல்வி அடைந்த பிறகு தாராளமாக அடிபடுங்கள். அப்ப போய்க் கேளுங்கள். போற‌ போது,”பத்து பில்லியனுக்கு தருகிறேன், மில்லியனுக்கு தருகிறேன்…என்று துரத்துரவர்களை நோக்கி…கொஞ்சகாலம் எட்ட நிற்கிறீர்களா !”பகிரங்கமாக கூறி அதிக பிரசங்கித் தனத்தை நிறுத்தவே வேண்டும். நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த இடைவெளியிலே,”மக்களைக் காப்பாற்றப் போறேன் ; நகரங்களைக் காப்பாற்றப் போறேன் ; நாட்டைக் காப்பாற்றப் போறேன்..”என்று கூறுவதில் அர்த்தம் இருக்கின்றன‌. அந்த கோட்டிக்கு வெளியில் நின்று கதைக்க முடியாது.”குழந்தை முதல்…அழகி வரையில் போராடி நாட்டைக் காப்பாற்றப் போறோம்”என்று சொல்வதற்கு முதல் அம்மாமாரிடம் முதலில் போய் கேளுங்கள். அப்பாமார்களை தொலைகாட்சியில் பேச வைக்காதீர்கள்.”கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரையில் போராடுவேன்”என்ற சினிமா வசனங்களை கேட்டு, கேட்டு காது புளித்து விட்டது. பேசி ஒரு நடிகர் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. கனடாப் பையனும், இங்கிலாந்து அப்பாவும் எப்பவும் விளையாட்டுப் பிள்ளைகள். அவர்களை புறக்கணித்து விடுங்கள்.

உக்ரேனியத்தலைவரின் பல்வேறு நாடுகளின் பாராளமன்றங்களில் வேற்சுவலாக பேசுகிற கன்னிப் பேச்சுகளில்…..”ஆயுதங்களைத் தாருங்கள் !, நாம் புல்லைக் கொண்டும் போராடப் போகிறோம், வான் வெளியை நோக்கி ஏவுகணைகளை நிறுத்துங்கள்…என்று ரஸ்யப் பிரவேசத்தை தடுத்து நிறுத்தும் கெஞ்சல்கள் இடம் பெறுகின்றன. ஒருபுறம்”நிறுத்ததிற்கு…அனுப்புவது, மறுபுறம் ஆயித்தப்படுத்துவது….முரணாகவில்லையா!. இதில், உண்மையான நோக்கம் என்ன?…என்று தெளிவு படுத்தப் படவே வேண்டும்.

இவர்கள் மறை கழன்றவர்கள். சிங்களவர்கள், தமிழர் நிலங்களை எல்லாம் விழுங்கிற முதலைகளாக இருக்கிறார்கள். ரஸ்யா, உக்ரேனில் உள்ள இராணுவ நிலைகளை அடிக்கிற மாதிரி வடபகுதியில் உள்ள பலாலி, காரைநகர் முகாம்களை இந்தியா அடித்து நொறுக்க மாட்டாதா? என்றிருக்கிறது. வடக்கு, கிழக்கிலுள்ள அத்தனை இராணுவநிலைகளையும் நொறுக்கித் தள்ளி விடாதா ?. இந்தியா ஒரு வல்லரசாகி வார போது….உலகம் போடும் பொருளாதார கூச்சல்களுக்கும், மிரட்டுதலுக்கும் பயப்படாமல் என்றோ ஒரு நாள் எமக்காக…செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ரஸ்யா, ஒரு இனப்படுகொலை நிகழ்வைத் தடுப்பதற்காகவே உள்ளே புகுகிறேன்”என்கிறது. நாம் படுகொலையாகி நிற்பவர்கள். உக்ரேன், எவ்வளவு தான் கத்தினாலும் அது ஒரு ஜனநாயக நாடு இல்லை. ஜனநாயகம் என்றால் என்ன என்று நினைக்கிறார்கள். ஒவ்வொரு அலகிலும் ஜனநாயகம் மிளிர்ற வேண்டும் ; இருக்க வேண்டும். மேலே இருப்பவர் நினைத்தபடி ஆடுற ஆட்டமில்லை, போடுற ஆட்டமில்லை… !. உக்ரேன் தலைவரை புறநாட்டுத் தலைவர்”ஜனநாயகத்தில் சம்பியன் அடித்தவர்”என கூறுறதைக் கேட்கிற‌ போது,’அரசனை நம்பி கொண்டவனைக் கை விட்ட பழமொழி’தான் ஞாபகம் வருகிறது.

அரபு நடுகளில், நேட்டோ போட்ட செல்லுகளால்… எத்தனை உயிர்கள் சிதைந்து போனார்கள். எத்தனைப் பேர்கள் குடும்பம், குடும்பமாக…கடலிலே தாழ்ந்து இறந்தார்கள். இன்றைக்கு இவர்களின் பேச்சுக்களை கேட்கிற போது, இலங்கைக்கு பின்னாலும் இவர்கள் தான் நின்றிருக்கிறார்கள் போல இருக்கிறது. ஏன் கனடாவிற்கு ஆரம்பத்தில் வந்த ஈழத்தமிழர்களை நியூபவுண்ட் லாந் மீனவர் காப்பாற்றாது விட்டிருந்தால்…இறந்து தானே போய் இருப்பார்கள். இலங்கைப் போரில் ரெட்குரோஸஸைச் சேர்ந்தவர்கள் பொறுத்த கட்டத்தில் நாட்டை விட்டு வெளியேற, அடையாளமிடப்பட்ட மருத்துவ நிலைகள் மீது தானே வகைதொகையற்று இலங்கைப்படைகள்…அடித்தன. போர்க்குற்ற விசாரணை…இன்று வரை பேசி இருக்கிறார்களா?. 17 பேர்கள் இறந்ததிற்கு…உக்ரேனில் பேசப்படுகிறது. கெட்ட உலகமப்பா!.

இங்கிலாந்து, புறநாட்டு பிரபுகளிற்கு அங்கேயெல்லாம் கண்கள் மூடிக் கொண்டு விடும். இங்கே தான் திறக்கும். வாய் முத்துக்களையும் உதிர்ப்பார்கள். அடப் போய்யா ! காகங்கள் கரைகின்றன‌.

இந்தப் போர் உலகப் போராக ஒருபோதும் வடிவம் எடுக்காது. இரண்டாம் பனிப்போராகவே மாறும். இந்தியா வல்லரசாகாத வரையில் ஈழப்பிரச்சனையை தீர்க்க முடியாது. ரஸ்யாவிற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு போடுற பொருளாதாரத் தடைகளையும், பிளஸ்( + )ரொன்களை தாங்கும் சக்தி இந்தியாவிற்கு தற்போது இல்லை. அது விரும்பா விட்டாலும் அணுகுண்டுகளை ஆயிரக்கணக்கில் தயாரிக்க வேண்டிய சூழ்நிலையிலே இருக்கிறது. அல்லது ஜேர்மனியில் அமெரிக்கா இராணுவ முகாம் அமைத்து இருப்பதைப் போல,ரஸ்ய… முகாம் ஒன்றும் இந்தியாவில் இருந்தால், ரஸ்யாவிடமிருந்து அணுகுண்டுகளைப் பெறுவதாக இருந்தால்…இதற்கு அந்த நாசகாரிகளைத் தயாரிக்க வேண்டிய வீண் செலவு இல்லை. விவசாயத்திற்கு திசை திருப்பி விடலாம். உக்ரேன் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையில் பங்கு பற்றிய ஒரு நாடு. அதன் மிக் 29 போர் விமானங்களும், கிபீர்களுமே (வாடகைக்கு ஓட்டிகளையும் பெற்றே ) குண்டுகளை வீசின‌. அந்த பாவம் தான் இன்று அங்கு தெய்வத்தால் (அ)ஒறுக்கப்படுகின்றது.

***

எல்லாளனுக்கு போரின் பின்னும் பிரச்சனை”நான் தான் மகத்தான வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். ஆனால், அது, ராணியின் முகத்தில்… மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. எதைச் சொன்னால் அவளை சிரிக்க வைக்க முடியும். அவள் முகம் மலரும்?” என்று கேட்டான். அமைச்சர்கள் மன்னனுக்கு கிறுக்கு பிடித்து விட்டதோ ?…எனப் பார்க்கிறார்கள். சத்தியர் சிரிக்கிறார்.”சிரிக்காதே! என் பாரத்தை…உன் தலையில் இறக்கி வைத்து விட்டேன். உனக்கு ஏழு நாள்கள் தருகிறேன். அடுத்த ஞாயிறு வருவேன் பதிலுடன் தயாராக இரு”என்று விசாரணையை முடித்து விட்டு படகில் ஏறி விடுகிறார். சத்திரத்தில் இருக்கவே இந்திரபானுவுக்கு பிடிக்கவில்லை. சாதாரண உடையில் கடற்கரையில் அலைகிறான்.”அப்பா, நீங்கள் தூங்குங்கள். நான் தூங்காச் (இரவு ) சந்தையைப் பார்த்து விட்டு வருகிறேன்”என்று திரும்பவும் வெளியேறுகிறான். அது குற்றவாளிகள் தீவாக இருந்தாலும். சிறுவர்களுக்காக பள்ளிக்கூடங்களை ஓரிரு மதப்பெரியார்கள் நடத்துகிறார்கள். ஆடல் பாடல் கலைகளும் அங்கே உண்டு. அப்படிப்பட்ட தண்டனைத் தீவுகளிலே வெளி வணிகர்களும் அனுமதிக்கப் படுகிறார்கள். வணிகமும் அங்கேயே நடை பெறுகின்றன.

அங்கு சங்கு குளிப்பு பிரசித்தி பெற்றது. முத்துக்கள், சங்குகள் உள்ள கடையில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடைக்கார அம்மா அவனைக் கவர்கிறார். என்ன பார்க்கிறாய், உனக்கு என்ன வேண்டும்”என்று கேட்கிறார்.”இவர்கள் முத்து வாங்கவா போறார்கள் ?”என்று ஆச்சரியமாக கேட்கிறான்.”நீ பணத்தைக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறார்கள். நீ…கொடுக்க மாட்டாயா?”என்று சிரித்துக் கொண்டு கேட்கிறார். “அம்மா, நான் ஒரு கைதி”என்கிறான். ஐயோ ! பாவம் எனப் பார்க்கிறார். அவன் தன் வரலாற்றை சுருக்கமாகக் கூறி”உங்களுக்கு என்னிடம் இருக்கிற ஒரு கேள்விக்கு விடை தெரியுமா?” என்று கேட்கிறான். “கேள்வியை முதலில் சொல்”என்கிறார்.”ஏன் நீங்கள் வீட்டிலே மகிழ்ச்சியற்றிருக்கிறீர்கள். எதைச் செய்தால், எதைச் சொன்னால் மகிழ்ச்சியாக இருப்பீர் ?”என்று கேட்கிறான். அவர் சிரிக்கிறார். “யார் சொன்னது…மகிழ்ச்சியாக இல்லை”என்று, ஏய் ! வசந்தி, இவனைக் கட்டிக்கிட்டால் சந்தோசமாக இருப்பாயா ?”என்று பேத்தியைக் கேட்கிறார். பெண்கள் எல்லோரும்’கொல்’எனச் சிரிக்கிறார்கள்.”போ பாட்டி உனக்கு வேற வேலை இல்லை”வெட்கப்படுறாள். ஒரக் கண்ணால் பானுவையும் பார்க்கிறாள்.”அம்மா, என்னை சிறைக் கம்பிகளையும் எண்ன வைத்து விடுவீர்கள் போல இருக்கிறது”என்று நகர வெளிக்கிடுறான்.”தம்பி, எனக்கு விடை தெரியல்லையப்பா. ஒரு பரீட்சை வைத்தேன். அவள் முகத்திலே குழப்பம் தான் கிடக்கிறது. இதற்கு பதில் தெரிந்தவள். சூனியம்,மந்திரத்திலே கை தேர்ந்த திலகவதி ஒருத்தியாகத் தான் இருப்பாள். இப்படியே போ. சற்று தொலைவில் இருக்கிற தென்னங்காணியில் இருக்கிறாள். கையைக் காட்டுகிறாள்.”நன்றி ! அம்மா, எனக்கு விடுதலை கிடைத்தால் இந்த கடைக்கு வர மறக்க மாட்டேன். வந்து இவர்கள் முத்துகள் வாங்க பணம் தருவேன்”என்று விட்டு போகிறான்.

இருள் பரவிக் கிடக்கிறது. ஏழு, எட்டு மணிக்குள் இருக்கலாம். எனக்கு இந்த தீவில் ஒரு நண்பன் இல்லாமல் போய் விட்டானே. யோசிப்பதில் பிரயோசனமில்லை. எனக்கு விடை காண வேண்டும். தனியன் என்றாலும் வெல்லத் தான் வேண்டும்.”ஹர, ஹர மகாதேவா”என்று முணுமுணுத்துக் கொண்டு போகிறான். அங்கேயும் அவனுக்கு சோதனை காத்திருக்கிறது.”யாராது ?”என்று கேட்டுக் கொண்டு ஓரிளம் பெண் வருகிறாள். அழகு எங்கே இருந்தாலும் ஆராதிக்கக் கூடியது தான். இப்படியான இருளிலும் கண்ணுக்கு ஒளி வந்து விடுகிறது. தன்னைத் திட்டிக் கொண்டு…மறந்து போய் நிற்கிறான். அரசர்கள் ஏன் அரண்மனையை நிரப்பினார்கள் என்பது புரிகிறது. அவன் பட்டத்து ராணியின் மகன். மற்றவர்களின்…ஒட்டுதல் இல்லாத சகோதரர்களும் ஞாபகத்தில் வருகிறார்கள். எல்லோரும் தான் பிடிபட்டிருப்பார்கள். எல்லாளன் மன்னன் நீதிமான் என்பதால் அரசனையும், இளவரசனையும் இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறான். ஒரு வல்லரசு நாட்டில், குட்டி நாட்டில், அரச குடியில் பிறப்பதெல்லாம் நம் கையில் இல்லை. அதைப்பற்றிய நினைப்பை நிறுத்தி விட்டு”திலகவதி அம்மாவை பார்க்க வந்திருக்கிறேன்”என்கிறான்.”அம்மா ! யாரோ உன்னைத் தேடி வந்திருக்கிறார்கள்”என குரல் கொடுக்க தாயார் வெளியில் வருகிறார்.
“என்ன தம்பி, உன்னை பார்த்தே இல்லையே”கேட்கிறார். மகள் இருப்பதைப் பார்த்து விட்டு”உங்களோட தான் பேச வேண்டுமம்மா”என்கிறான்.”பிரச்சனையா ?”என்றவர், வீட்டிற்கு முன்னால் இருந்த அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கிற சிறு கோவில் போன்ற கொட்டிலுக்கு கூட்டிச் செல்கிறாள்.

கோகுலன் கூட இப்படி சில வீடுகளில் முன்புறம் சிறு கொட்டில்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறான். மழை நேரங்களில் பெடியள் செட் அதிலே, இருந்து வில்லுப்பாட்டு இசைப்பார்கள் ; அடிப்பார்கள். பெடி, பெட்டைகள் தாயக்கட்டைகளை உருட்டி விளையாடுவார்கள். டியூசன் வகுப்புகள் நடைபெறும். அரங்கிற்கு வர முதல் இயக்கப்பெடியள் சந்திக்கிற இடமாகவும் இருந்தது. சாதி வரலாறை எழுதுறவர்கள் அதிலுள்ள கட்டடக்கலை நேர்த்தியை விட்டு விட்டு, அதிலேயும் ஒரு நொட்டையைக் கண்டு பிடித்து எழுதுகிறார்கள். சிறுவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிற‌ இடம் அது. ஓவியர் மார்க் கூட அதில் தான் வகுப்புகளை நடத்தி இருக்கிறார். தற்போதைய வீட்டுப்பிளான்களில் பெடியள் கும்மாளம் அடிப்பதற்கு என்று ஒரு அறையே கிடையாது ; நூலகம் போல படிப்பறை என்று ஒன்று இல்லை. உள்ளே உள்ள விளக்குகள் அழுகுக்காக பொறுத்துகிறார்களோ… என்று சந்தேகப்பட வேண்டி இருக்கிறது. மந்தைக் கூட்டம். பிரிட்சீஸ் என்ன கடை பிடித்ததோ அவற்றை எல்லாம்…இப்பவும் கண்னை மூடிக் கொண்டு கடைப்பிடிக்கிற, படிப்பிக்கிற நாகரீகள் அல்லவா இவர்கள்.

தான் யார் என்பதையும், த‌ன் சிக்கலான கேள்வியையும் கூறி விடுகிறான். ஒரு நிமிசம் யோசித்தவர்,”எனக்கு பதில் தெரியுமப்பா, ஆனால், இரவல் பதிலாக இருக்குமே, இரவலாக பெறுகிற ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருக்கிறதேயப்பா, எனக்கு என்ன நீ தருவாய்?” என்று கேட்கிறார். “அம்மா, நீங்கள் பெரியவர். என் சக்திக்குள் உள்ளதாக எதைக் கேட்டாலும் தருவேன்”என்கிறான். அந்தப் பதில் பிடித்து விட”நீ மண‌மானவனா?” கேட்கிறாள். “இல்லை” என்கிறான். “இங்கே பார். நான் கூறுகிறது சரியாகி விட்டால் தான் பிரச்சனை. இல்லாவிட்டால் கிடையாது” என்கிறார். “சொல்லுங்கள்” என்கிறான். “கமலி என் ஒரே மகள். இந்த மந்திரத்தை கற்றுக் கொடுத்ததில் அவள் வேடிக்கையாக தன் உருவத்தை மாற்றி… விளையாடுகிறாள். நாம் சாதாரண ஆட்கள். அதனால் அவளுக்கு கல்யாணத்தை நடத்தி வைக்க முடியாமல் திண்டாடுகிறேன். அவள்,’ராமனைப் போல ஒருத்தனுக்கு மட்டும் தான் கழுத்தை நீட்டுவேன்’என்று வேறு கூறுகிறாள் அது எந்தப் பெண்ணும் விரும்புற ஒன்று தான். வெற்றி பெற்றால் அவளை கட்ட முடியுமா?” என்று நேரிடையாகவே கேட்டு விடுகிறாள்.”என்னைப் பொறுத்த வரையில் முழுச் சம்மதம் அம்மா. அப்பா சத்திரத்தில் இருக்கிறார். அவரிடமும் சம்மதம் கேட்க வேண்டும்”என்கிறான். எலியாக மாறி மண்டபத்தின் வாசற்படியில் நிற்கிற கமலிக்கு அவனை பிடித்து விடுகிறது. சிலந்திக் கயிற்றிலே எல்லாம் தொங்குறதை வாயைப் பிளந்து பார்க்கிற நீங்கள் இந்த உரு மாற்றத்தையும் ஏற்றுத் தான் ஆக வேண்டும். கணனிக்கு ஒரு நீதி மந்திரத்திற்கு ஒரு நீதி கிடையாது. எங்கும் சமம் தான்.

பதிலைக் கூறுகிறார்.”எந்தப் பெண்ணும் எந்த விசயத்திலும் சுயமாகவே முடிவெடுக்கவே விரும்புகிறாள். குடும்பத்தளைக்குள் வீழ்ந்த பிறகு அவள் முடிவெடுக்க முடியாமல் குறுகிப் போய் விடுகிறாள்.’இந்த முடிவெடுத்தால் இந்த சமூகக்கட்டில் கஸ்டப்பட வேண்டும்’என நாட்டில் நிலவுகிற சட்டங்களின் பயமுறுத்தல்களும் இருக்கின்றன. சுய முடிவை அறிவிக்கவும், அதை நிறைவேற்ற சர்வதேச சட்டங்களையும் மாற்றியமைக்க முடியும் என்ற சூழலும் ஏற்படுத்தினால் திருப்திப்படுவாள்”என்கிறார்.”அம்மா, நீங்கள் சொல்லுறது சுதந்திரம்,சுயாட்சி அல்லவா. இதற்காகத் தானே நாமே அடிபடுகிறோம்”என்கிறான். கமலிக்கும் குழப்பமாக இருக்கிறது. இந்த பதில் வெல்லாது என நினைக்கிறாள்.”நீங்கள் உங்க வீட்டிலே உங்க அம்மா, சகோதரிகளிற்கு அதை மறுக்கிறீர்கள்”என்கிறார் உறுதியுடன்.”அம்மா, அப்பா சம்மதிக்கிற பட்சத்திலே, இந்தப் பதிலைக் கூறுகிறேன். தோல்வி அடைந்தாலும்…நிலமையை உங்களை தேடி வந்து தெரிவிக்கிறேன்”என்கிறான்.”சென்று வா மகனே”என்று வாழ்த்தி அனுப்புகிறார்.’வென்று வா’என்று ஏன் கூறவில்லை. கமலி யோசிக்கிறாள். அம்மா கூடு விட்டு கூடு பாய்ய விரும்பவில்லை. புரிகிறது. கனக்க கேள்விகளைக் கேட்காதீர்கள். அரசியல் எல்லாவற்றிலுமே ஊடுருவிக் கிடக்கின்றன.

சில நபர்கள் மட்டுமே சத்தியவான்களாக இருக்கிறார்கள்.

நம் இலக்கியத்திலும் ஒரே ஒரு அரிச்சந்திரன் தான் இருக்கிறான். ராமன் சத்தியனில்லை. ஏகபத்தினி விரதன் மட்டும் தான். எல்லா செயல்களிலுமே ஒருத்தன் மட்டும் தான். பிறகு வாரவர்கள் அவர்களைப் பின்பற்றுற கூட்டம். புத்தரும் சிஸ்ய கோடிகளும் இல்லையா !. கடவுள்களையும் அப்படித் தான் படைத்தார்கள். ஒரு சிவன், ஒரு கண்ணன். அப்படியே கூறி…குழப்பத்தில் போய் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதிலே சடிண்ட் பிரேக் அடிக்காது, நின்று விடாமல் எல்லாக் கடவுள்களையும் ஒரு மாதிரிப் படைத்து விட்டார்கள். ஒவ்வொன்றும் ஒரு பார்த்திரம்.”நம்பினால் நம்புங்கள். நம்புறவர்களுக்குத் தான் கடவுள்”என்றும்”நம்பா விட்டால் போங்கடா”என்ற சவுக்கடி பதிலும் கூறி கலகலப்பாக மாற்றி விட்டிருக்கிறார்களில்லையா !.

எல்லாளன், பட்டத்து ராணியிடம் பானுவின் பதிலைக் கூறுகிறான். அவரின் முகத்தில் சிரிப்பு படர்கிறது.’சிரிப்பைத் தான் வரவழைக்க வேண்டும்’என்று தான் கூறியது ஞாபகம் வருகிறது.”ராணி, இந்த பதில் உனக்கு பூரணத் திருப்தியைத் தருகிறதா ?”கேட்கிறார்.”இருக்காதா பின்னே, சுதந்திரமாக முடிவெடுப்பது, எல்லைக்குட்பட்டிருந்தாலும் அது நிறைவேறுவதை காண்பது பெரிதில்லையா””என்று அன்புடன் கூறுகிறார்.”நான் கூறியபடி இவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடவா”கேட்கிறார். மன்னர், தனக்குள் நினைக்கிறார். சுதந்திரம் என்பது தன்னைச் சுற்றிய வட்டம் தான். இன்னொரு வட்டத்தில் போய்ச் சேர்வதெல்லாம் சுதந்திரம் கிடையாது. அது, அயலில்லுள்லவர்களின் சம்மதத்துடன் நடைபெற வேண்டும். அதை மீறினால்… ஊசலாடுகிற சர்வதேச விதிகளால் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு தலைவன தன் மக்களையும் நகரங்களையும் அழிய விடாமலே காப்பவன். ஒரு நடிகனோ, யாரோ சொல்லிக் கொடுக்கிறதை…அப்படியே செய்பவன் !.

அதோட கதை முடியவில்லை. சிறுகதையை இழுப்பது போல…நீட்சி இருக்கிறது. மணமக்களை வாழ்த்துவதற்கு ஜனகணமங்கலத்திலிருந்து எல்லாள வேந்தனின் குடும்பமும் வருகிறது. தாலி கட்டுவதற்கு முதல் கமலி பானுவை இழுத்துக் கொண்டு தனி அறைக்குள் போகிறாள்.”என்ன ?”என்று கேட்கிறான்.”எனக்கு ஒரு சந்தேகம்”என்றவளைப் பார்க்கிறான். அவளின் முகம் அழகற்று மாறிப் போய்க் கிடக்கிறது. அவனுக்கு எல்லாளனின் பாரியாரின் நினைவே உடனடியாக வருகிறது.”என்னுடைய முகம் உண்மையிலே இப்படியானது தான். அம்மை நோய் வந்தது. அம்மாட மந்திர சக்தியால் குணப்படுத்த முடியவில்லை. தளும்புகளுடனே…இருக்கிறேன். ம‌ந்திர சக்தி சிலவேளை….கை விட்டு விடுகிறது. இந்த தோற்றம் தானாக தெரியத் தொடங்கி விடுகிறது. பார் தற்போது வந்து விட்டது. எனக்கும் சலிச்சு விட்டது. மந்திர சக்தியை முயன்று பார்க்காமலே விடப் போகிறேன். உனக்கு சம்மதமா ?”என்று கேட்கிறாள். பானு சிரிக்கிறான்.”தேவியாரே, இது என் பிரச்சனை இல்லை, உன் பிரச்சனை. முடிவெடுக்க வேண்டியவள் நீ. உன் எந்த முடிவும் எனக்கு சம்மதம் தான்”என்கிறான்.”வெளியிலே எல்லோரும் உன்னைத் தான் தூற்றுவார்கள்”என்கிறாள்.”பயப்படாதே, உன்னைக் காப்பாற்ற எல்லாள வேந்தனின் பாரியார் இருக்கிறார்”என்று துணிவு கூறுகிறான்.”மேலும், இது ஒன்றும் குற்றமில்லையே. நீ போட்ட அலங்காரப் பூச்சு கழன்று விட்டது. மேற் கொண்டு போட எரிச்சலைத் தருகிறது என்று சொல்லி விட்டால் போதுமே”என்கிறான். அவனின் முகத்தைக் கூர்ந்து பார்க்கிறாள். உள்ளம் ஒன்று நினைக்க வாய் ஒன்று பேசும்.’அப்படி இல்லை’என்று புரிய அவளில் நாணம் குடி கொள்கிறது. அப்பவும் அவளுக்கு இளவரசன் தன்னை முடிப்பது நம்ப முடியாமலே இருக்கிறது. மெல்ல”தோல்வியுறும் போது தான் மனிதக் குணங்களும் வெளிப்படுகின்றன, சமரசம் ஏற்படுகிறது”என்று முணுமுணுக்கிறாள் கமலி.”என்ன குரங்குகள் வெளிப்படுகின்றனவா”என்று கூறி பானு உரத்துச் சிரிக்கிறான்.

“சரி வா” என்று…வெளியில் வருகிறார்கள். அவனுக்கு அவளின் பயங்களை நினைக்க, நினைக்க…பாவமாவிருக்கிறது. அவன் அவளின் முகத்தைப் பார்த்து சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. மேடையில் அமர கெட்டிமேளத்துடன் தாலி கட்டுறான். அப்ப, தான் பார்க்கிறான். முகத்தில் எந்த…வடுக்களும் இல்லாமல் அழகாக இருக்கிறாள். பெண் மனம். புரிகிறது. வாழ்க்கையில் அவள் முகத்தில் அதற்குப் பிறகு அடையாளமே வரவில்லை. அவனும் ஆராய புக‌வில்லை. அவர்களுக்கு மந்திரக்குட்டிகளாக பிள்ளைகள் பிறக்கிறார்கள்…என்று கதை முடிகிறது. சத்தியரின் வம்சம் நட்புடனே வாழ்கிறது. அந்த நட்பு என்று முறிகிறது என்பதை வரலாறு சொல்ல மறந்து விட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *