கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 2,969 
 
 

கிராமத்து திருவிழா முடிந்து, சிறுமி பார்வதி, வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். அப்போது, ஊரில் எல்லாரும் மதிக்கும் பெரியவர், தெரு முனையில் நின்று கொண்டிருந்தார்.

பார்வதியைக் கண்டதும், அவர் அருகில் வந்து, “அம்மா வரலையா?” எனக் கேட்டபடி, அவளைக் தடுத்து, அவள் தோளைப் பிடித்து கீழ்நோக்கி தடவினார். பின்னர், அவள் கழுத்தில் கை வைத்து, தன் முகத்தை அவள் முகத்திற்கு அருகில் கொண்டு வந்தார்.

பார்வதிக்கு உள்ளுக்குள் ஏதோ உறைந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், அவரிடமிருந்து விலகி, வீட்டிற்கு ஓடினாள். ​அன்றிரவு, தூக்கமின்றித் தவித்தாள். இதை யாரிடம் சொல்ல முடியும்? ‘யாரும் நம்ப மாட்டார்கள்’.

சில வருடங்கள் கழிந்தன. பார்வதி இப்போது கல்லூரி மாணவி. அவளுடைய தோழி ஒரு நாள் மிகவும் சோகமாக இருந்தாள். காரணம் கேட்டபோது , கீதா கண்ணீருடன், “நம்ம ஊர் பெரியவர்… என்னை தனியா கூப்பிட்டு , நாளை என் வீட்டுக்கு வா என்கிறார். அவர் பார்வையே சரியில்லை” என்று விம்மினாள்.

சில வருடங்களுக்கு முன், தான் உணர்ந்த அதே பயம், அதே சங்கடம்! கீதாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, “கீதா, எனக்கும் இதுபோல் நடந்ததை நான் உன்கிட்ட சொல்லவே இல்லை. மீ டூ!”

கண்களில் இருந்த பயம், இப்போது துணிச்சலாக மாறியது. இருவரும், காவல் நிலையம் நோக்கி நடந்தனர்.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *