மனத்தின் வேகம்
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,275
ஒரு தையற்காரர், கட்டிலில் உட்கார்ந்து தைத்துக்கொண்டிருக்கிறார்… அவர் மனம் விரைகிறது….
ஊரிலே திருவிழா வந்து விட்டது… அதனைச் சென்று காண வேண்டும். அவர் மனக்கண் முன் திருவிழாக் கூட்டம் நின்றது.
மனைவியோ , தன் தாய் வீட்டில் குழந்தை பெற்றிருக்கிறாள். அவளையும் பார்த்தாக வேண்டும்!
குழந்தை வீறிட்டு அழும் குரல் அவர் காதுகளில் கேட்டது.
தையற்காரர் உள்ளம் விம்மி யெழுந்தது. அப்புறம் என்ன ?
இரு கைகளும் நூலைக் கோத்து வாங்குகின்றன. வலது கையிலுள்ள ஊசி ஏறி இறங்குவதைப் பார்க்க முடிய வில்லை …. அவ்வளவு வேகம்!
சோழன் நற்கிள்ளியை வென்று வாகை கொள்ள வந்தான் ஒரு மல்லன்.
மற்போர் மன்றத்தில் போர் தொடங்கி விட்டது! மற்போர் ! மற்போர்!
நற்கிள்ளியின் கைகள், தையற்காரனின் ஊசிபோல் விரைகின்றன…
அப்புறம்?- மல்லன் மண்ணைக் கவ்வினான்!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
மின்மினிப்பூச்சிகள்!
வளர்கவி
May 4, 2026
படகு பயணம்!
பே.செல்வ கணேஷ்
May 1, 2026
கல்யாணமாம் கல்யாணம்..!
வளர்கவி
April 28, 2026