கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 221 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் -7

இருவரும் அறைக்கு வந்தார்கள். மாலா வழக்கம் போல் படித்துக் கொண்டிருந்தாள். மீனா, நிரஜா இருந்தார்கள்.

“எப்போடி வந்தீங்க?” ஆர்த்தி அவர்களை விசாரித்தாள்.

“இப்போதான்.” மீனா பதில் சொன்னாள்.

“எங்கே போனீங்க?”

“ஷாப்பிங்.”

“என்ன வாங்குனீங்க?”

“டொட்டொய்ங்…!” மீனா தன் கைப் பையிலிருந்து ஒரு புது பிராவை எடுத்தாள்.

பார்த்த ஆர்த்திக்குச் சொரக்கென்றது.

அடுத்து வினாடி, “வா பேகம் வெளியில போவோம்.” அழைத்தாள்.

“அவளை எதுக்கு அழைக்கிறே? நீ வேணம்ன்னா வெளியில போ. நீ இருடி நீ என் செல்லம்!” விபரம் புரியாத மீனா பேகத்தின் தாடையைத் தொட்டு கொஞ்சி….தன் மோலாடையைக் கழற்றினாள்.

ஆர்த்தி அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. ரத்தம் கொதித்தது.

“வாடி!” சடக்கென்று பேகத்தை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

“எதுக்கு இழுத்து வர்றே?” அவன் புரியாமல் கேட்டான்.

“அவளுக்கு விவஸ்தையே கெடையாது. அங்கே அநியாயம் நடக்கும்.” முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. கீழே கொண்டு வந்தாள்.

“என்ன அநியாயம்?”

“ம்ம்… உடனே தன் உடம்புல உள்ளதை உரிச்சுப் போட்டு உனக்குப் போட்டுக் காட்டுவாள்!” கடுப்படித்தாள்.

“ஒரு நல்ல சீன் பார்க்காம அடிச்சட்டே!” விக்னு குறைபட்டு சிரித்தான்.

“செருப்பாலடிப்பேன்..!” சீறினாள்.

“அடிச்சுட்டுப் போ. நான் அறைக்குப் போறேன்!” அவன் விளையாட்டாய் திரும்ப…ஆர்த்தி அவனை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தினாள்.

“இங்கே….இன்னும் என்னென்ன வேடிக்கைகள் நடக்கும் ஆர்த்தி.” கேட்டான்.

“என்னென்னவோ நடக்கும்.”

“ஒன்னு ரெண்டு சொல்லேன்?“

“அறைக்கு அறை கட்டிப்பிடிச்சுக்கிட்டு கிடப்பாளுங்க.”

“ஓரினச் சேர்க்கையா ?”

“ச்சீய்….!” முகம் சுளித்த ஆர்த்தி “அதெல்லாம் கெடையாது. சும்மா ஜாலியா கட்டிப்பிடிச்சுக்கிட்டு கிடப்பாளுங்க. பலான புத்தகங்கள் படிப்பாளுங்க. அறையில அறை குறையாய் நிக்கிறது, நிர்வாணக்குளியல், திறந்து பார்த்தல் எல்லாம் சகஜம்.”

“சண்டை சச்சரவு?”

“அப்படி ஒன்னு இதுவரைக்கும் இல்லே. சமயத்துல ஒருத்தருக்கொருத்தர் பிடிக்காமல் போனா பேச்சை நிறுத்திக்குவாங்க.”

“அப்படி பேச்சை நிறுத்தினவங்க யார்?”

“நிரந்தரமா பேச்சை நிறுத்தினவங்க யாரும் கெடையாது. கொஞ்ச நாள்ல மறந்து சீக்கிரம் பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஒருத்திக்கு ஒன்னுன்னா எல்லாரும் ஒன்னு கூடிடுவாளுங்க. அந்த கூடல்ல வருத்தம் மறைஞ்சுடும்.”

“நாங்க மச்சி மாப்ளேன்னு கூப்பிடுறாப்போல உங்க ஜாலி பேச்சு எப்படி ஆர்த்தி?”

“ஆம்பளை போல இருப்பவளை மாப்ளேன்னு அழைப்போம். அடங்கிப் போறவளைப் பொண்டாட்டின்னு கூப்பிடுவோம். அப்படி ஒரு புருசன் பொண்டாட்டி அம்பதாவது எண் அறையில இருக்காங்க. அந்த அறையில நாலு பேர் கெடையாது. இரண்டு பேர்தான். அன்னைக்கு நாம எல்லா அறைகளுக்கும் போன போது அவுங்க இருந்தாங்க. அதுல ஒருத்தி சரியான ஆம்பளை. பேர் விக்டோரியா. நல்ல உசரமா வாட்ட சாட்டமா ஆளை அடிக்கிறாப்போல இருப்பாள். லேசா மீசை கூட முளைச்சிருக்கும். அவ புடவை, சுடிதாரெல்லாம் உடுத்த மாட்டாள். ஆம்பளைப் போல முரட்டு ஜுன்ஸ் பேண்ட, சட்டை, டி ஷர்ட். கூந்தலும் இருக்காது. ஆம்பளைப் போல முடி வெட்டி இருப்பாள். குரலும் கொஞ்சம் முரட்டுத்தனம். அடுத்தவள் இவளுக்கு நேர் எதிர் பேர் கோமதி. புருசன் சொல்லுக்கு அடங்கின பொண்டாட்டிப் போல விக்டோரியா அதட்டினால் இவள் பயப்படுவாள். சொன்ன வேலையைத் தட்டாமல் செய்வாள். அறையில ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டி குடும்பம் நடத்தறது போலதான் இருக்கும். விக்டோரியா உட்கார்ந்து கோமதியை அதட்டி வேலை வாங்குவாள். இவள் எடுத்து வரச் சொன்னதை அவள் எடுத்து வருவாள். ரெண்டு பேருக்கும் நல்ல புரிதல். ஒருத்தரை ஒருத்தர் பிரியமாட்டாங்க. எங்கே போனாலும் ஒன்னா போவாங்க, திரும்புவாங்க. விக்டோரியாவுக்கு உடம்பு சரி இல்லேன்னா கோமதி பக்கத்துல உட்கார்ந்து புருசனுக்கு உடம்பு சரி இல்லாதது போல அழுவாள். அவுங்களால யாருக்கும் தொந்தரவு கெடையாது. அவுங்க உலகம் வேற. கடைசி வருசம் எப்படி பிரியப்போறாங்கன்னு தெரியலை. ஒருவேளை திருமணம் செய்துகிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே. நாங்க அப்படித்தான் அவுங்களை வெறி ஏத்துவோம். அவுங்களும் அதுதான் செய்யப் போறோம்ன்னு சொல்வாங்க.” முடித்தாள்.

பேகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒரு அரிய ஜோடி எங்கேயோ திருமணம் செய்து கொண்டதாய் எப்போதோ பத்திரிக்கையில் படித்த செய்தி மனசுக்குள் விரிந்தது.

“வேற விசேசம்?” பேகத்திற்கு இன்னும் தகவல் அறிய ஆவல்.

“வேற ஒன்னுமில்லே. வாங்க நேரமாச்சு. அறைக்குப் போகலாம்.” நடந்தாள்.

பேகம் அப்படியே அன்னாந்து… மொட்டை மாடியை நோட்டமிட… யாருமில்லை.


அறைக்கு வந்த இவர்களுக்குச் சின்ன திடுக்கிடல்.

நிரஜா முதுகில் மீனா குப்புற கவிழ்ந்து இருவரும் ஒரே புத்தகத்தை ரொம்ப உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தார்கள். பார்த்த ஆர்த்திக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.

நிரஜா நிமிர்ந்து, “பேகம்! பலான புத்தகம் படிப்பீயா?” கேட்டு கண்ணடித்தாள்.

விக்னுவிற்குத் தலை சுற்றியது.

ஆர்த்திக்கு ஆத்திரம். பாய்ந்து…அந்த புத்தகத்தைப் பிடுங்கி அறை மூலையில் எறிந்தாள்.

“வாடி சாப்பிட போவோம்!” பேகத்தை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.

இரவு எல்லோரும் கண்ணயர்ந்து விட்டார்கள்.

‘பலான புத்தகத்தைப் படித்த தாக்கம் இந்த முண்டைங்க பேகத்தைத் தொட்டு கலாட்டா செய்யப் போகுதுங்களோ?!’ என்கிற கலக்கம். ஆர்த்தி புரண்டு புரண்டு படுத்தாள்.

பாதி ராத்திரியில் கண்விழித்த அவள் முதலில் பேகம் படுக்கையைத்தான் பார்த்தாள். மெல்லிய வெளிச்சத்தில் அது காலியாக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.

பதறி நிரஜா கட்டிலைப் பார்த்தாள். அதுவும் அதுவும் காலியாக இருந்தது. அடி வயிறு கலக்க மீனா கட்டிலைப் பார்த்தாள். அதில் நிரஜாவும், அவளும் சேர்ந்து படுத்திருந்தார்கள். அப்படியானால் பேகம்?

மாலா படுக்கையையும் பார்த்தாள். அவள் மட்டும் எந்தவித கவலையும் இன்றி துாங்கிக் கொண்டிருந்தாள். இவளுக்கு மட்டும் எப்படி எந்தவித கவலையுமின்றி தூங்க முடிகிறது? நினைத்தவளுக்கு…

‘ஆள் எங்கே… பேய் பிடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டதா? வெளியே போய் பார்க்கலாமா?’ யோசனை வந்தது.

அன்றைய பேய் சம்பவத்திலிருந்தே இவளுக்குக் கண் விழித்தால் பேய் பயம். அறைக்கதவைத் திறந்து வெளியே போக இன்னும் அரட்டி.

‘எங்கே போனான்?’ அறைக்கதவை உற்றுப் பார்த்தாள். அது மெல்ல திறந்து ஒரு உருவம் உள்ளே வந்தது.

“ஆ…!” அலற எத்தனித்தவள் அப்படியே வாயை மூடினாள்.

அத்தியாயம் -8

இன்றைக்கும் ஆர்த்திக்கு மனதில் பாடம் பதியவில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டு அடையாறு ஓட்டலுக்கே சென்றாள்.

அறைக்குள் நுழைந்த அடுத்த வினாடி, “ராத்திரி எங்கே போனீங்க?” சீறினாள்.

“எங்கே போனேன்னா?” விக்னு புரியாமல் பார்த்தான்.

“எவளைப் பார்த்தீங்க?”

“ஓ… உனக்கு அந்த சந்தேகமா?” சிரித்தான்.

“சிரிக்காதீங்க. உண்மையைச் சொல்லுங்க?”

“பேயைக் கண்டுபிடிக்க போனேன்.”

“எந்தப் பேய்?“

“என்னைப் பிடிச்சு அமுக்கின பேய்.”

பேய் பேச்சை எடுத்ததுமே ஆர்த்திக்கு இருந்த கோபம் மறைந்து முகத்தில் திகில் வந்தது.

“கண்டு பிடிச்சீங்களா ?!…”

“நீ என்கிட்ட நிறைய விசயங்கள் மறைச்சுட்டே ஆர்த்தி!”

“என்ன?“ துணுக்குற்றுப் பார்த்தாள்.

“உங்க விடுதியில மாணவிகள் நீலப்படம் பார்க்குறாங்க. ராத்திரி 24 ஆம் அறையில அது நடந்துது, அடுத்து ஒரு அறையில கஞ்சா அடிச்சாங்க. இன்னொரு அறையில தண்ணி அடிச்சு ஒரே உளறல்.”

“ராத்திரி போய் எல்லா அறையையும் வேவு பார்த்தீங்களா?”

“ஆமாம்.“

“இதுக்குத்தான் வந்தீங்களா?”

“இல்லே ஆர்த்தி. ராத்திரி எல்லாரும் துாங்கிட்டீங்க. நடு சாமம். எங்கோ ஒரு மணிக்கூண்டுல மணி பன்னிரண்டு அடிச்சுது. என் கடிகாரத்தையும் பார்த்தேன். சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒன்னோடு ஒன்னா இருந்துது, அதே சமயம் பெண் கழுத்தைப் பிடிச்சு நெரிக்கிற குரல் ‘பே..பே..’ கதறல். மாடி மேலேயோ கீழே மைதானத்திலேயோ எங்கேயோ கேட்டுச்சு. ஆனா எனக்கு எந்த இடம்ன்னு சரியாய் விளங்கலை. எனக்குப் பேய் பயம் கண்டு போச்சு. இதே போல சத்தம்… நான் படிக்கும் போது கேட்டிருக்கேன்.”

“அப்போ நான் பதினொன்னாம் வகுப்பு. எங்க கிராமத்துக்கு மின்சாரம் கிடையாது. அதனால வீட்டுல மின் விளக்கு கிடையாது. அதிக மதிப்பெண்கள் எடுக்கனும்ங்குறதுக்காக தலைமை ஆசிரியர் அனுமதியில இறுதித் தேர்வுக்காக பத்துப் பதினைந்து மாணவர்கள் ராத்திரி நேரம் பள்ளியிலேயே தங்கி படிச்சோம். ஒரு நாள் ராத்திரி. காலையில சீக்கிரம் எழுந்து படிக்கலாம்ன்னு அப்போதான் எல்லாரும் வகுப்புல புகுந்து கதவைச் சாத்திக்கிட்டு படுத்தோம். பக்கத்து மாதா கோயில்ல மணி பன்னிரண்டு அடிச்சுது. இதே போல கழுத்து நெரிபடுற குரல் ஆத்தங்கரை பக்கமிருந்து கேட்டுது. அதை அடுத்து சில அதை அடுத்து சில வினாடிகள்ல நாங்க படுத்திருக்கிற சிமெண்ட் வராந்தாவுல யாரோ கால்களைத் தேய்ச்சு ஓடுற சத்தம். பேய் பிசாசு நினைவுக்கு வர எல்லாருக்கும் ஈரக்குலை நடுங்கிப் போச்சு. ஒருத்தனுக்குச் சுரமே கண்டு நடுக்கிச்சு. காலையில எழுந்து வாட்ச்மேன்கிட்ட விபரத்தைச் சொல்லி என்ன அதுன்னு கேட்டோம்.”

அவர் எந்தவித விளக்கமும் சொல்லாம, “ராத்திரி பன்னிரண்டு மணின்னா அது அப்படித்தான் தம்பின்னார்.”

“அது அப்படித்தான்னா?” நான் விடாமல் கேட்டேன்.

“சொன்னா பயப்படுவே. வேணாம்!” தயங்கினார்.

“பயப்பட மாட்டேன்!” நானும் துணிச்சலா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு சொன்னேன்.

“அப்படின்னா சொல்றேன். நாலு வருசத்துக்கு முன்னால அந்த ஆத்தங்கரை நாவல் மரத்துல ஒரு ராத்திரி ஒருத்தன் துாக்கு மாட்டி தொங்கிட்டான். முழி ரெண்டும் பிதுங்கி நாக்கு வெளியே தள்ளி ஒரே கோரம். அவன் ஆவி இப்படி தினம் கத்தி அநியாயம். ரொம்ப பேர் பயந்து… அப்புறம் பூசாரிகிட்ட பேய் பிசாசு ஓட்டி பொழைச்சாங்க. இனி ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல படிக்காதீங்க. பத்து மணிக்கெல்லாம் படுத்து துாங்கி விடியக் காலை மூணு மணிக்கெல்லாம் எழுந்து படிங்க. விடிய காலை படிப்பு மனசுலேயும் நல்லா பதியும். உங்களுக்கும் பயம், பாதிப்பு ஆபத்தில்லே. சொன்னார். கேட்ட எல்லாரும் நடு நடுங்கிப் போனாங்க. எனக்கும் கொஞ்சம் உதறல். இன்னொரு பையனுக்கும் இந்த நடுக்கம் இருந்தாலும் பேய் எப்படி இருக்கும்ன்னு ஆசை. பார்க்கலாமா? கேட்டேன். அறைபட்டு ரத்தம் கக்கி செத்துடாதீங்க. மிரட்டினார். இருந்தாலும் எனக்குள் சின்ன குறுகுறுப்பு. காதால கேட்ட பேயைக் கண்ணால பார்க்கனும்ன்னு ஆசை. பார்க்கலாமான்னு என்னைப் போல துணிச்சலா இருந்தவன்கிட்ட கேட்டேன். அவனும் சரின்னு தலையாட்டினான். மறு நாள் ராத்திரி நான் மத்த மாணவர்கள்கிட்ட பேயைப் பார்க்கலாமா…? கேட்டேன். நீங்க பேய் அடிச்சு சாவுங்க. நாங்க காலையில வந்து பொணத்தைப் பார்க்கிறோம்ன்னு சொல்லி…பத்து மணிக்கெல்லாம் துண்டால காது கண்ணெல்லாம் இறுக்கிக் கட்டி படுத்து இழுத்து நல்லா மூடி துாங்கிட்டானுங்க. நானும் அவனும் மட்டும் முழிச்சிருந்தோம். பன்னிரண்டு மணிக்கு அதே சத்தம் கேட்டுச்சு. அந்த அலறல் காலடிச் சத்தம் முடிஞ்ச பிறகு மெல்ல எழுந்து அறையைவிட்டு வெளியே வந்து ஆத்தோரமா இருக்கிற நாவல் மரம் கிணத்தடியை இருட்டுல கண்ணை நல்லா விலக்கிக்கிட்டுப் பார்த்தோம். ஒன்னும் தெரியலை. நூறு மீட்டர் துாரத்துல உள்ள கீத்துப் பள்ளிக்கூடத்து வகுப்புல ஒரு வெள்ளை உருவம். ஒவ்வொரு வகுப்புக்குள்ளேயும் புகுந்து புகுந்து புறப்பட்டுப் போனது, கால் இல்லே. எங்களுக்குப் பேயைப் பார்த்து அதிர்ச்சி. வேர்த்துப் போச்சு. மனசை தைரியப்படுத்திக்கிட்டு போய் படுத்துட்டோம். மறுநாள் மத்தவங்கள்கிட்ட சொல்ல நடுங்கிப் போய்ட்டானுங்க. அப்புறம் பேய் நிசமான்னு நாலு பேர்கிட்ட சொல்லி விசாரிச்சா விசயம் வேற.”

“என்ன?“

“வாட்ச் மேனுக்குப் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துல ஒரு சின்னவீடு. அவ.. சின்ன வயசு விதவை. தெரு மக்கள் மனசுல பேய் பிசாசு பயத்தை விதைச்சி கிளப்பி.. ராத்தியில இவுங்க ஒன்னா சேர்றதுக்கு செத்துப்போனவனை வைச்சு ஒரு சின்ன நாடகம். வாட்ச்மேனுக்கு எப்போதும் ராத்திரி பள்ளிக்கூடத்துலதான் படுக்கை. துாக்கு மாட்டி கழுத்து நெரிபடும்போது மனுசாள் எப்படி கஷ்டப்படுவாங்களோ அப்படி அவன் தினம் ராத்திரி பன்னிரண்டு மணிக்கு அலறல் விடுவான். பேய் பயத்துல எல்லாரும் குப்புற படுத்திருக்க இவள் மட்டும் நைசா எழுந்து புறப்பட்டு பள்ளிக்கூடத்துக்கு வருவாள். அன்னைக்கு அவள் எந்த அறையில இருக்காள்ன்னு வாட்ச்மேனுக்குத் தெரிய பனிக்குளிர்ல இடுப்பு வேட்டியை அவிழ்த்து போர்த்திக்கிட்டு அறை அறையாய் தேடி இருக்கான். இருட்டுல கால் எப்படி தெரியும் ? எங்களுக்குப் பேய் பயம். பயந்துட்டோம்.” முடித்தான்

“இது நெசமா பொய்யா?” ஆர்த்தி சந்தேகமாக கேட்டாள்.

“நிசம். அதே கூத்துதான் இங்கேயும் நடக்னும என்கிற சந்தேகத்துல எழுந்து போய் மொட்டை மொட்டை மாடியில மைதானத்தை நோட்டமிட்டேன். யாரையும் காணோம்.”

“இந்த நீலப்பட சமாச்சாரம்?“

“திரும்பும் போது சம்பந்தப்பட்ட அறை கதவு இடுக்குல வெளிச்சம் வந்துது. ஒத்தக் கண்ணால பார்த்தேன். உள்ளே செல்லுல எல்லாரும் ஆ…ன்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அடுத்த அறையில குழறல் சத்தம் உத்துக்கேட்டுப் பார்த்தேன். அநியாயம்.”

“ஒரு வேளை இவுங்கதான் தன் தவறுகளை மறைக்க இப்படி ஒரு பேய் நாடகம் ஆடுறாங்களா?” இவள் தனக்குள் எழுந்த சந்தேகத்தை எழுப்பினாள்.

“இல்லே ஆர்த்தி. இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லே. இன்னொரு விசயம். நேத்து நாம தோட்டத்துல பேசிக்கிட்டிருக்கும் போது நம்பளை மொட்டை மாடியிலேர்ந்து ஒரு உருவம் கவனிச்சுது.”

“அப்படியா?!“ வாயைப் பிளந்தாள்.

“ஆமாம். பேய் அவ்வளவு முன்னேரத்துல வர வாய்ப்பில்லே.”

“அப்படின்னா நம்பளைக் கவனிச்சது யார்?”

“தெரியலை.”

“பேய்ன்னா மலையாள மந்திரவாதியை அழைச்சு பரிகாரம் பண்ணி ஓட்டிடலாமா?” ஆர்த்தி கேட்டாள்.

“செய்யலாம். ஆனா மாணவிகள் ஜாலியா இருக்கிறதுதான் எனக்கு வருத்தம்.” முகம் தொங்கினான்.

“ஆண்கள் விடுதியில என்ன நடக்குதோ அதுதான் இங்கேயும் நடக்குது.” ஆர்த்திக்கு இது தவறாக தெரியவில்லை. சொன்னாள்.

“ஆண்கள் வேற பெண்கள் வேற ஆர்த்தி.”

“உடல் அளவுலதான் வேற. மனசளவுல எல்லாரும் ஒன்னு.”

“பெண்ணுக்குப் பாதிப்பு வரும். ஆணுக்கு வராது.”

“இப்போ விஞ்ஞான வளர்ச்சி எல்லாத்தையும் தடுத்துடுச்சு.”

“பெண் கெட்டுப் போறது சரின்றீயா?”

“ஆண்கள் காலங்காலமா கெட்டுக்கிடக்காங்க. கெட்டுப்போறாங்க இப்போ பெண்கள் அனுபவிக்கிறாங்க. இதுல என்ன தப்பு?”

“இது வீண் விதண்டா வாதம். மாணவப் பருவம் படிச்சு முடிச்சு நல்ல விதமா திரும்பனும்.”

“…..”

“சரி அதை விடு ஆர்த்தி. இங்கே மாணவிகள் கஞ்சா அடிக்கிறாங்க. அது எப்படி இங்கே கிடைக்குது….? இன்னும் கொக்கோகையன், அபின்…எல்லாம் கூட உபயோகப்படுத்தலாம்.”

“விடுதியில நடக்குற ஒட்டு மொத்த விசயத்தையும் நீங்க கண்டு பிடிச்சிட்டீங்களா?” ஆர்த்தி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“நீங்க துாங்கின பிறகு தினம் எனக்கு இதுதான் வேலை.”

“எழுந்து போய் எந்தெந்த அறையில என்னென்ன நடக்குதுன்னு பார்த்திட்டு வர்றீங்களா?”

“மூணு நாள்லேயே இங்கே நடக்குற அத்தனை விசயத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா இந்த ஆவி விசயம்தான் என்னைக் குழப்புது. எப்படி, என்னன்னு தெரியலை.”

“அதுக்குத்தான் வழி இருக்கே. மலையாள மந்திரவாதியை வைச்சு முடிச்சுடலாம்ங்குறது”

“எனக்கு இந்த மாய மந்திரம் பேர்ல எல்லாம் நம்பிக்கை இல்லே. உன் வாயை அடைக்கிறதுக்காக சம்மதிச்சேன்.”

“ஆவி பேர்ல எனக்கு இப்போ நம்பிக்கை இருக்கு. அதுக்கு ஆதாரமா ஒரு சேதி ஜூனியர் விகடன்ல்ல படிச்சேன்.”

“என்ன?”

“இறந்தவன் ஆவி ஒன்னு ஒருத்தி உடல்ல புகுந்து என்னை இன்னார் கொலை செய்து இன்ன இடத்துல புதைச்சிருக்கான். போய் பாருங்கன்னு தகவல் கொடுத்திருக்கு. ஊர் மக்கள் அதை டேப் ரிக்கார்டர்ல பதிவு செய்து எடுத்துப் போய் போலீஸ்ல கொடுத்து தகவல் சொல்லி இருக்காங்க. பேயாவது பிசாசாவதுன்னு அவுங்க இதை நம்பலை. அப்புறம் ஊர் மக்கள் தொந்தரவு பேர்ல இதெல்லாம் பொய்ன்னு நிரூபிக்கும் எண்ணத்துல தாசில்தார், ஆர்.டி.ஓ முன்னிலையில ஆவி சொன்ன இடத்தைத் தோண்டிப் பார்த்திருக்காங்க. ஆச்சரியம்! கொலை செய்யப்பட்டவன் எலும்புக்கூடு! அடுத்து உடனே கொலையாளியைத் தேடி போயிருக்காங்க. சம்பந்தப்பட்டவங்க தலைமறைவாகிருக்காங்க. ஒருத்தன் பிடிபட்டிருக்கான்.” சொன்னாள்.

“பிரஸ் லைன்ல இருக்கிற எனக்கும் இந்த சேதி ஆச்சரியம்தான்! நானும் படிச்சேன்.” ஒப்புக்கொண்டான்.

“ஆக… ஆவி இருக்கு. அதோட பேசுறவங்களைப் புடிச்சு..இறந்த சுபாஷிணி ஆவியை வர வழைச்சு உன்னை யார் எப்படி கொன்னான்னு கேட்டு விசாரிக்கலாம்.” சொன்னாள்.

விக்னு மௌனமாக இருந்தான்.

“என்ன யோசனை யோசனை ? உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னா சின்ன முயற்சி செய்து பார்க்கலாம். பழமா இருந்தா நமக்கு லாபம்தானே! இந்த பேயை விரட்டிட்டு நாங்க நிம்மதியாய் இருக்கலாம்.” அவன் முகத்தைப் பார்த்தாள்.

“சரி செய்யலாம்.” தலையாட்டினான்.

“இங்கே அப்படிப்பட்ட ஆள் யார் இருக்கா?” கேட்டான்.

“தெரியலை. விசாரிக்கனும்.”

“அப்புறம் இந்த கஞ்சா, போதை மருந்துகள் எப்படி இங்கே வருதுங்குற விசயத்தையும் நாம துப்புத் துலக்கி ஆகனும்.”

“இது பெரிய கஷ்டமான காரியம் இல்லே. பெண்கள் ஷாப்பிங் போகும் போது வாங்கி வருவாங்க.”

“இல்லே ஆர்த்தி போய் நேரடியாய் வாங்கி வந்து குடிக்கிற அளவுக்குப் பெண்களுக்குத் தைரியம் கிடையாது. பக்கத்துல இங்கே எங்கேயோ அவுங்களுக்குச் சுலபமா கெடைக்குது.”

“அதையும் கண்டுபிடிக்கலாம். மாணவிகள் ஷாப்பிங் போகும் போது கவனிச்சா உண்மை தெரியும். இப்போ முதல் வேலை. நாம ஆவிகிட்ட பேசுற ஆளைக் கண்டு பிடிக்கனும்.” எழுந்தாள்.

விக்னுவும் எழுந்தான்.

இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

‘முதலில் எப்படி யாரைக் கண்டு பிடிப்பது?’ என்று யோசனை. மௌனமாக நடந்தார்கள்.

அப்போது அவர்களை உரசிக் கொண்டு ஒரு ஆட்டோ வந்து நின்றது. இவர்கள் திடுக்கிட்டு நிற்க….

“ஏய் ஆர்த்தி! எங்கே போறே?” நந்தினி குதித்தாள் அவளைத் தொடர்ந்து இன்னும் மூன்று விடுதி மாணவிகள் இறங்கினார்கள். விக்னுவை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.

நந்தினி ஆர்த்தியைக் தனியே தள்ளிக் கொண்டு போய்…

“அது யார் உன் பாய் பிரண்டா?” கிசுகிசுத்தாள்.

“ஆமாம்.”

“படிப்பா வேலையா?”

“வேலை.”

“எங்கே?”

“எங்க ஊர். இப்போதான் வந்தார்.” சமாளித்த ஆர்த்திக்கு விக்னுவை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாததில் அவளுக்கும் மகிழ்ச்சி.

“நீங்க எங்கே போறீங்க?” கேட்டாள்.

“சுபாஷிணி ஆவியோட பேசப்போறோம்!”

ஆர்த்தி ஆடிப் போய் அவர்களைப் பார்த்தாள்.

“ஆமாம்டி. அவ ஆவியால விடுதியே நடுங்கிக் கிடக்கு. இதுக்கு என்ன வழின்னு யோசிச்சு. நாங்க நாலு பேரும் ஒரு முடிவுக்கு வந்து போறோம். ஆவியோட பேசுற ஆளைக் கண்டு பிடிச்சாச்சு. ஒரு சின்ன உதவி…” தயக்கமாய் ஆர்த்தியைப் பார்த்தாள்.

“என்ன…?” இவள் அவர்களை ஏறிட்டாள்.

“நாங்க அத்தனை பேரும் பொம்பளையாய்ப் போறோம்.. ஒரு ஆம்பளைத் துணை வேணும்ன்னு வேண்டிக்கிட்டே வந்தோம். அதிர்ஷ்டவசமா நீங்க கண்ணுல பட்டீங்க. அவரையும் அழைச்சிக்கிட்டு எங்களோட வர்றீயா ?” கேட்டாள்.

பழம் நழுவி பாலில் விழுந்த கதை.

“அதுக்கென்ன தாராளமா கூட்டிப் போகலாம்!” ஆர்த்தியும் சம்மதித்தாள்.

அத்தியாயம் -9

விக்னு வேலை முடிந்ததும் அங்கேயே கழன்று கொண்டான். பெண்கள் ஐவரும் விடுதிக்குத் திரும்பம் போது முதல் மாடி வராண்டாவில் அத்தனை மாணவிகளும் ஓரிடத்தில் சூழ்ந்து நின்றார்கள்.

‘யாருக்கு என்ன?’ – இவர்களுக்குப் பதற்றம் பற்றியது பதைபதைத்து ஏற… விசயம் புரிந்தது,

நடுவில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் பால்கனியில் நாற்காலி போட்டு அமர்ந்து விசாரணையில் ஈடுபட்டிருந்தார்!

இவர்கள் கூட்டத்தோடு கலந்தார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் எல்லார் முகத்தையும் ஒரு முறை பார்த்து விட்டு…

“உங்கள்ல யாருக்குக் கணேசைப் பத்தி தெரியும்!” கேட்டார்.

மாணவிகள் குழம்பி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

”யார் சார் கணேஷ்?” நித்தியலட்சுமி என்கிற நித்தி தைரியமாக கேட்டே விட்டாள்.

“சுபாஷிணி நோட்டுல கணேஷ்ன்னு இந்த பேர் எழுதி இருக்கு. அது யார்ன்னு இப்போ எனக்குத் தெரியனும்.”

அனைவரும் மௌனமாக நின்றார்கள்.

“அவள் யாரோ சம்பந்தப்படாதவன் பேரை எழுதி வைச்சிருக்காள்ன்னு நீங்க நெனைக்கிறது தப்பு. சாதாரணமா யாரும் சம்பந்தமில்லாதவங்க பேரை கிறுக்க முடியாது. அந்த பேருக்குடையவங்க சம்பந்தப்பட்டவங்க மனசுல ஆழப் பதிஞ்சாதான் அப்படி எழுத முடியும். கணேஷ் யார்? அவன் சுபாஷிணிக்கு பாய் பிரண்டா, காதலனா..? அவங்களுக்குள்ளே சண்டை, மோதல் ஏன்…அவன் கொலைக்காரனாய்க் கூட இருக்கலாம்!“ குண்டைப் போட்டார்.

நின்று கொண்டிருந்த அத்தனை மாணவிகள் முகத்திலும் இருள்.

“இங்கே பாருங்கம்மா. நான் உங்க அத்தனை பேரையும் ஸ்டேசன்ல வைச்சு விசாரிக்க முடியும். நான் ஏன் அதை செய்யலைன்னா உங்க வார்டனுக்கு நல்ல மனசு. அது உங்க எதிர்காலத்தைப் பாதிக்கும்ன்னு இப்படி விசாரிக்கச் சொன்னாங்க. இதனாலதான் நானே இங்கே வந்து அடிக்கடி விசாரிக்கிறேன். இப்போ சொல்லுங்க. உங்கள்ல யாருக்குக் கணேசைத் தெரியும்?” ஏறிட்டார்.

இப்போதும் மாணவிகள் மௌனமாய் இருந்தார்கள்.

“மன்மததேவி, வள்ளி, வனஜா இப்படி முன்னால வாங்க” சுபாஷிணியுடன் தங்கி இருந்த அறைத் தோழிகளை அழைத்தார்.

அவர்கள் தர்மசங்கடமாய் தோழிகள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவர் முன் வந்தார்கள்.

“சுபாஷிணி மத்த எல்லாரையும்விட உங்ககிட்ட நெருங்கிப் பழகி இருப்பாள். பழகி இருக்கனும். காரணம் அவள் உங்க அறைத் தோழி. கணேஷ் யாருன்னு கண்டிப்பாய் உங்க மூணு பேருக்கும் தெரியும். யார் அவன்?”

“தெ..தெரியாது சார். ஒருத்தி.” அடுத்தவர்களைப் பார்த்தார்.

அவர்களும், “தெரியாது!” சொல்லி தலையசைத்தார்கள்.

“ஓ.கே. நான் கண்டு பிடிக்கிறேன்!” சொல்லி விசாரணையை முடித்துவிட்டதற்கடையாளமாய் எழுந்தார்.

கீழே சென்று வார்டன் அறையில் நுழைந்து அவளிடம் சில கேள்விகள் கேட்டு விடை பெற்றுக் கொண்டு வெளியேறினார். அதன் பிறகுதான் மாணவிகள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து நிம்மதி மூச்சு விட்டார்கள்.

“நீங்க போன விசயம் என்னாச்சு?” அப்படியே அந்த கூட்டம் திரும்பி நந்தினியைப் பார்த்துக் கேட்டது.

“இவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள்!‘ ஆர்த்திக்குப் புரிந்தது,

“சுபாஷிணி ஆவி யாரோடேயும் பேச விரும்பலைன்னு ஒரே அழுகையாம்!“ஆவி பேச்சாளன் சொன்னதைச் சொன்னாள்.

“அதெல்லாம் பொய். அந்த ஆளு ஆவியோட பேசறேன்னு தெரியாத அறியாத மக்களை ஏமாத்திக்கிட்டு வர்றான். படிச்ச நம்மகிட்ட சொல்லி அது பொய்யானால் மதிக்கமாட்டாங்கங்குற பயத்துல இப்படி பொய் சொல்லி அனுப்பி இருக்கான்.” விக்னு சொன்னதை ஒருத்தி சொன்னாள்.

“எங்களுக்கும் அப்படித்தான் தோணிச்சு வந்துட்டோம்!” நந்தினியும் அதை ஒப்புக் கொண்டவள் போல் தலையசைத்தாள்.

“இப்போ இந்த ஆவிப் பிரச்சனைக்கு வழி ?”

“அது பாட்டுக்க கத்திக்கிட்டு கெடக்கட்டும்!” விக்டோரியா அலட்சியமாய் சொல்லி விட்டு கலைந்து சென்றாள்.

அவளைத் தொடர்ந்து கோமதியும் சென்றாள்.

“தடிமாடு…! எவ்வளவு திமிராப் போறாள் பார். மொதல்ல அந்த ஆவி அவளை அடிச்சு கொல்லனும்!” வள்ளி ஆத்திரப்பட்டு வெடித்தாள். கேட்ட கோமதிக்குக் கோபம் வந்தது.

“அத ஏன் அடிச்சுக் கொல்லனும். உன்னை அடிச்சு நீதான் சாகனும்” அவள் இவளுக்குச் சாபம் விட்டுச் சென்றாள்.

“பொண்டாட்டி புருசனுக்கு வக்காலத்து வாங்கிட்டா. போங்க. போய் சாவுங்க.” இவள் சத்தமிட அனைவரும் அவரவர் அறைகளுக்குத் திரும்பினார்கள்.

மாலை ஆறு மணிக்கெல்லாம் ரீட்டா தலைமையில் ஒரு கூட்டம் படு சீரியசாக ஆர்த்தி அறைக்குள் நுழைந்தது.

“மீனா! போகலாமா?” ரீட்டா அவளைப் பார்த்து கேட்டாள்.

ஆர்த்தி பேகம் விழித்தார்கள்.

“போகலாம்!” சொன்ன மீனா விடுவிடுவென்று உடுத்தி இருந்ததை உருவினாள். ஜட்டி பிராவுடன் சுடிதாரின் பேண்ட் எடுத்துப் போட்டாள்.

பேகத்திற்கு தர்மசங்கடமாக இருந்தது, ஆர்த்திக்கு அதைவிட சங்கடம். பத்துப் பதினைந்து பேர்கள் அறையை அடைத்து இருந்ததால் விக்னுவை வெளியே இழுத்துப்போகவும் வழி இல்லை. மீனா பேண்ட் போட்டு நாடாவை இழுத்துக் கட்டி முடிச்சுப் போடும்போது ரீட்டா மேலும் வேறொரு சங்கடத்தை உண்டாக்கினாள்.

“ஏய்…! நில்லு நில்லு” அவளை நிறுத்தினாள்.

“என்ன?” அவள் முடிச்சுப்போட்டு நிறுத்தி இவளைப் பார்த்தாள்.

“இங்கே வா ரீட்டா” அவளை அழைத்தாள்.

“எதுக்கு?” அவள் ஆர்த்தி, பேகம் உட்கார்ந்த கட்டிலுக்கும் ரீட்டாவிற்கும் இடையில் பிராவுடன் வந்தாள்.

மார்பகங்கள் பிதுங்கிக் கொண்டிருந்தது.

பேகத்திற்கு உடலின் ஒவ்வொரு அணுவும் உயிர்பெற்று வெப்பத்திற்கு வந்தது.

“ரெண்டு கையையும் மேலே துாக்கு!” ரீட்டா… பேகத்திற்குச் சோதனை கொடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டவள் போல் மீனாவிற்கு உத்தரவிட்டாள்.

மீனா அவள் சொன்னபடி இருகைகளையும் உயரே துாக்கி நின்றாள். செதுக்கி வைத்த சிலை போல்….ரொம்ப கவர்ச்சியாக இருந்தது.

ரீட்டா அவள் முன் பக்கம் உற்றுப்பார்த்து, “இதென்ன கறுப்பு?“ கை அக்குள் ஒரம் தடவிப் பார்த்தாள்.

“மச்சம்.”

“அங்கே?” அடுத்த கை அக்குளைப் பார்த்தாள்.

“அதுவும் மச்சம்.”

“எப்படி?“

“அது எனக்கு சின்னபிள்ளையிலேர்ந்து இருக்கு. இதுதான் எனக்கு அடையாளம்.”

“அழகா இருக்கு. போ.” அனுப்பினாள்.

ஆர்த்திக்கு ரீட்டாவை இழுத்து வைத்து அறைய வேண்டும்போல் ஆத்திரம்.

மீனா… மேல் சட்டையை மாட்டிக்கொண்டே, “ஆர்த்தி, பேகம் நீங்களும் கிளம்புங்க” என்றாள்.

“எங்கே?”

“வார்டன்கிட்ட கம்பன் கலை அரங்கத்து ஒரு பட்டிமன்றம் போறதா பர்மிசன். நாம அங்கே போய் ஒப்புக்குத் தலைகாட்டிட்டு அப்படியே ஷாப்பிங். நம்ப கல்லுாரி சம்பந்தப்பட்டது துணை வேந்தர் கலந்துக்கிறார்ங்குறதுக்காக எல்லாருக்கும் பர்மிசன். ஏறக்குறைய விடுதி காலி.” அவள் தகவல் சொன்னாள்.

‘இப்படி ஒரு விழா நடப்பதாக நம் அறிவிற்குப் படவே இல்லை. அப்படியென்றால் எந்த அளவிற்கு கல்லுாரியை விட்டு விலகி இருக்கிறோம்! எல்லாம் விக்னு வந்த வேளை. அவனைக் கண்காணிக்கவும் பேய் பிசாச ஈடுபாட்டில் இருப்பதுவம்தான் காரணம்’. அவளுக்குப் புரிந்தது.

பேகம் இதுதான் சாக்கென்று, “போகலாம்.” வெளியே வந்தாள்.

மாலாவையும் அழைத்தார்கள்.

அவள் வரவில்லை என்று கூறிவிட்டாள்.

மாலாவைத் தவிர எல்லாரும் புறப்பட்டார்கள்.

விடுதி மொத்தத்துக்கும்… அங்கொரு பெண்ணும் இங்கொரு பெண்ணுமாக உலவிக் கொண்டிருந்தார்கள்.

பேகம் கீழே வந்து விடுதியைத் திரும்பிப் பார்த்தாள். விக்டோரியாவும் கோமதியும் மட்டுமே அவர்கள் அறை முன் வந்து நின்று இவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“அவுங்க வரமாட்டாங்களா?“ பேகம் ஆர்த்தியைக் கேட்டாள்.

“புருசன் பொண்டாட்டி அறையை விட்டு நகர்றதில்லே.”

ரீட்டா பதில் சொல்லிக் கொண்டே நடந்தாள்.

கம்பன் கலையரங்கில் மாணவிகள் ஒப்புக்குத்தான் நுழைந்தார்கள். உள்ளே சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்து சேர்ந்து கடைத் தெருவிற்கு வந்தார்கள். கடைகடையாய் ஏறி விதவிதமான ஸ்டிக்கர் பொட்டு வளையல் ரிப்பன் என்று கண்டமேனிக்கு வாங்கினார்கள்.

ஆர்த்தியும் அவர்களுடன் சேர்ந்து நுழைந்து வாங்கினாள்.

பேகம் மட்டும் அவர்களுடன் சேர்ந்து இருப்பது போல் பாவலா செய்து கொண்டு கூட்டத்தை விட்டு எவளாவது நழுவுகின்றாளா, எவள் எங்கே செல்கிறாள், எந்த சந்தில் நுழைந்து எந்த கடைக்காரனிடம் கஞ்சா வாங்குகிறாள் என்று கண்கொத்தி பாம்பாக கவனித்தாள்.

யாரும் அப்படி நகரவில்லை.

அப்படியே நகர்ந்தாலும் இரண்டு மூன்று பேர் நகர்ந்து நாலைந்து கடைகள் தள்ளி பெண்களுக்குத் தேவையான சாமான்கள் வாங்கினார்களேத் தவிர இவள் எதிர்பார்த்து வந்ததுபோல் கஞ்சா வாங்க வரவில்லை.

‘அன்றைக்கு ரீட்டாவும்தான் அந்த கூட்டத்தில் அடித்தாள். இன்றைக்கு வாங்க வில்லை. பின் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது?‘ பேகத்திற்குள் இதே சிந்தனையாக இருந்தது.

ஏறக்குறைய எல்லோரும் இரவு 10.00 மணிக்கு விடுதிக்குத் திரும்பினார்கள்.

அப்படியே …அவரவர் அறைகளுக்குச் சென்றார்கள்.

ஆர்த்தி கதவைத் தட்ட மாலா திறந்தாள்.

‘இந்த அறையில் பேய் பிசாசு பயம் இன்றி இவள் மட்டும் எப்படி தனியே இருந்தாள்?!‘ ஆர்த்தி அருகில் நின்ற பேகத்திற்கு நினைத்துப் பார்க்க கொஞ்சம் வியப்பாய் இருந்தது. கஞ்சா விசயம் வேறு மூளைக்குள் வண்டாக குடைந்து கொண்டே இருந்தது.

‘இன்றைக்குப் பேய் அமுக்குமா?’ பேகம் பயந்து கொண்டே படுத்தாள்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *