புலனி
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 191
(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடல் மட்டத்திலிருந்து 12,580 அடிகள் உயரத்திலிருந்த மலை நகரமான மனோராவுக்குப் போவதற்காக நான் பயணித்துக் கொண்டிருந்தேன். கறுத்த காதுள்ள குதிரை எனப்படும் இந்த மலைத்தொடரின் உயரங்களில் சிறு சிறு நகரங்கள் இருந்தன. இந்த மலை நகரங்களில் மிகக் குறைவான மனிதர்களே இருந்தனர். அதிலும் மனோராவில் போர்த்துக்கீசியர்களின் ஓய்விடமும், தேவாலயம் ஒன்றும், சர் பிரான்சிஸ் வில்லான் என்ற லிஸ்பன் நகரச் சீமான் பெயரில் கட்டப்பட்ட முதியவர் களின் ஓய்விடமும் மட்டுமேயிருந்தன. நான் கல்விக் கூடங்களில் விற்பனை செய்வதற்கான பதனமிடப்பட்ட சிறிய பாம்புகள், தேச, உலக வரைபடங்கள், பரிசோதனைச் சாலைக்கான வேதிப் பொருள்கள் விற்பதற்காக வந்திருந்த இடத்தில் இவைகளின் மீது விருப்பம் உள்ளவர்கள் மனோராவிலும் இருக்கக் கூடுமெனச் சொன்னதால் மேலே செல்லக் காத்திருந்தேன்.
எப்போதோ வரும் சிறிய வாகனத்தைத் தவிர வேறு கிடைக்காது என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பழைய கறுப்பு வேனில் பயணிக்கும்போது காட்சிகளின் சுழற்சியில் மரங்களும், பாறைகளும், தனியே மேயும் குதிரைகளும் தென்பட்டன. மேலே பயணித்துச் செல்லச் செல்வ இரவு கூடியது. விளக்குகள் அதிகம் தென்படவில்லை. நகரம் மயக்க மான ஒரு மஞ்சள் ஒளியில் சோளக்கதிர் போலத் தென்பட்டது. நான் மனோராவில் இறங்கியபோது வீதிகள் வெறிச்சோடி யிருந்தன. கோடைக் காலத்தில்தான் இங்கு நடமாட்டம் அதிக மிருக்கக் கூடும் போல. நான் போய் இறங்கிய சதுக்கத்திலிருந்து நான்கு பக்கமும் சாலைகள் சென்றன. விடுதிகளில் மென் ஒளி பரவிக்கொண்டது. தேவாலய ஓசையும் வெதுமையும் பரவிய தெருக்களில் நடந்தபோது ஏதோ ஒரு விதமான நெகிழ்வுற்றது போலத் தென்பட்டது. நான் முன்னும் பின்னும் பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன்.
பசியாக இருந்ததால் ஏதாவது உணவு விடுதிக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அறை தேடித் தங்கிக்கொள்ளலாம் என நினைவு கொண்டபடியே நடந்துகொண்டிருந்தேன். என் கையில் இருந்த பெட்டியின் எடையோ இதுவரை தூக்கி வவித்த வேதனையோ இங்கு வந்திறங்கியதும் புலப்படவில்லை. பெரிய இரும்புச் சங்கிலிகள் தொங்கும் பழைய சுற்றுச்சுவர் அருகே நடந்து கொண்டிருந்தேன். தெரு மிக நீளமாகத் தெரிந்தது. சிறிது நேரத்துக்குள் அசதியும் களைப்புமாக உணவு விடுதியைத் தேடிப் பார்த்தேன். எதிரே ஒரு உணவு விடுதியிருந்தது. பையை அந்த இடத்தில் வைத்தவனாகத் திரும்பியபோது அந்த விடுதி நான் இறங்கிய இடத்தின் எதிரேதானிருந்தது. எப்படி இவ்வளவு நேரம் நடந்தோம் எனப் புரியவே இல்லை. சோர்வாகத் தானிருக்கக் கூடுமென மனசமாதானம் செய்தபடி உணவகத் தினுள் நடந்தேன். அங்கே எவருமிருக்கவில்லை. உணவு விடுதி விசித்திரமாக இருந்தது. தரையோடு மேஜைகள் பொருத்தப் பட்டிருந்தன. மேஜையின் மீது தட்டு பொருத்தப்பட்டிருந்தது. தண்ணீர் குடிக்கும் டம்ளர் கூட ஒரு வளையமிட்டுக் குவளை யோடு பொருத்தப்பட்டிருந்தது. சுவர்களில் இருந்த மலர்க் கொத்துகள், காலண்டர்கள் யாவும் சுவரோடு உலோக வளையங் களால் பிணைக்கப்பட்டிருந்தன. விசித்திரமான செம்மை படிந்த ஒளி படர்ந்த உணவு விடுதியில் எனது குரல் கேட்டு வந்த பெண் வயதானவளாக இருந்தான்.
சாப்பிடக் கேட்ட எதுவுமே இருக்கவில்லை. ரொட்டித் துண்டுகள், ஒரு பழத்தினையும் கொண்டுவரச் சென்ற பெண் மிக மிக மெதுவாகவே என் அருகாமைக்கு வந்துகொண்டிருந்தாள். நான் உணவின் அவசரத்தில் எதையும் கவனிக்கவில்லை. அவன் என் மேஜையில் குளித்து வைப்பதற்கே சிவ நிமிஷங்கள் ஆனது. நான் அவசரமாக ஒரு பழத் துண்டை எடுத்து வாயில் போட்டேன். அது ஏனோ விசித்திரப் பொருள் போல இருந்தது. தண்ணீரை ருசிப்பது போலவே இருந்தது. ரொட்டித் துண்டும் கூட நாவில் படுவதை உணர முடியவில்லை. நறுக்கப்பட்ட பழத் துண்டிலிருந்து ஒரு பகுதி என் நாவினின்று நழுவி மேஜையில் விழப்போனது. தான் அவசரமாகக் கையைக் கீழே நீட்டினேன்.
பழம் இன்னமும் மேஜைக்குக் கீழே வரவில்லை. அது இப்போதுதான் மிக மெதுவாகத் தரை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. காற்றில் அசைந்தாடும் பழத் துண்டை ருசிக்க ஆவலுற்றேன். அது போன்றதொரு காட்சி அப்போது வியப்பாக இருந்தது. முதியவள் என் அருகாமைக்கு வந்து தண்ணீர்க் குவளையைக் கையில் எடுத்து அருந்த வேண்டாம், உறிஞ்சும் குழலால் குடிக்கச் சொன்னாள். நான் அவள் சொன்னபடியின்றி, தண்ணீர்க் குவளையை வளையத்திலிருந்து தூக்கி அண்ணாந்து வாயில் ஊற்றினேன். காத்துக்கொண்டே இருந்தேன். அது என் தாவுக்கு வரவேயில்லை. முதியவன் பரிகாசம் கலந்த முகத்துடன்,
‘நாளைக் காலை வரை வாயைத் திறந்துகொண்டு காத்திரு… அப்போதுதான் உன் நாவுக்கு இந்தத் தண்ணீர் வந்து சேரும்’ என்றபடி எதுவும் தடக்காதது போலப் பார்த்து நின்றாள். தண்ணீர் என் நாவை நோக்கி அந்தரத்திலிருந்து மிக மிக மெதுவாக இறங்கிக்கொண்டிருந்தது. ஏனெனப் புரியவேயில்லை. சாப்பிட்டது போலவே இல்லை எனக் கவலையாகச் சொன் னேன். அவள் இயல்பாகத் தலையாட்டியவளாகச் சொன்னாள், இந்த நகரில் தொடர்ந்து எல்லாப் பொருள்களும் தன் எடையை இழந்துகொண்டே வருகின்றன. நெகிழ்வும், எடை இழப்பும் மனிதர்களை விடவும் மற்ற பொருள்களுக்கு அதிகமாகி விட்டது. இந்த இயக்கம் மிக மிக விசித்திரமானது. இங்கு எதோடும் இணைவு கொள்வது மிகச் சிரமமானது.’ திகைப்போடு கேட்டேன்,
பொருள்கள் யாவும் எடையிழந்து விட்டனவா?
‘தெரியவில்லை. பல பொருள்கள் எடையிழந்து வருகின்றன. இந்த முழு நகரமே மெல்லத் தன் எடையை இழந்துகொண்டு வருகிறது. பின்னொரு நாள் இது மிதந்து அருகாமையில் ஏதாவது ஒரு சரிவில் போய் அமர்ந்துகொள்ளக் கூடும்.’
எனக்கு எதுவும் பிடிபடவில்லை. தான் தங்குவதற்காக அறையைத் தேடிப் போனபோது அங்கும் இதுபோன்ற அமைப்புகளே இருந்தன. எல்லாப் பொருள்களும் வளையங்களால் செயற்கையாக இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. நான் தங்குவதற்காகச் சென்ற விடுதியில் ஒருவன் மட்டுமே இருந்தான். என்னைப்
பற்றிய விவரங்களை எழுதிக் கையெழுத்திடவா எனக் கேட்டபடியே அங்கிருந்த மைக்கூட்டோடு இணைக்கப்பட்ட பேனாவை எடுத்தேன். அவனிடமிருந்து பலத்த சிரிப்பு வந்தது.
‘நீ நகருக்குப் புதியவன், இங்கே காகிதத்தோடு பேனாவை இணைப்பது எளிதானதல்ல. முயன்று பார்.’
எனது முயற்சி வியர்த்தமாகிக்கொண்டேயிருந்தது. முடிவில் கையெழுத்திடாமல் ஒதுக்கப்பட்ட அறைக்குப் போனேன். தான் தங்கிய இரவில் என் படுக்கை, உடல் யாவும் எடையிழந்து தூவல் போலாகியிருந்தன. ஒரு காகிதத்தைப் போல எனக்கு எடையற்ற தன்மையிருந்தது. நான் உறங்கிவிட்டேன்.
அதிகாலையில் பேராலயத்தின் மணிச் சப்தம் கேட்டு விழித்துக் கொண்டபோது வெயில் படர்ந்திருந்தது. தெருவெங்கும் முதிய வர்கள் கடந்துகொண்டிருந்தார்கள். நான் ஜன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தேன். சிறுவர்களே தென்படவில்லை. மிக மெதுவான கதியில் முதியவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அவர்களோடு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிய ஒரு பெண்ணைக் கண்டேன். நடப்பவர்கள் திடீரெணத் தரையை விட்டு இரண்டு அடி உயரத்தில் மிதந்து நடப்பதும் பின்பு இயல்புநிலை கொள்வதும் சாதாரணமாக நடந்தேறின. அந்தப் பெண் மிக மிக மெதுவாக நடந்து சென்றாள். ஒரு திருப்பத்தில் அவளது காலணி ஒன்று கழண்டு விழுந்தது. அதைக் கவனிக்காமல் தடந்து போனாள்.உணர்ச்சி மீறிட இறங்கி அதைக் கையில் எடுத்தபடி அவனை நோக்கிச் சென்றபோது அவன் ஒரு மருத்துவமனைப் பகுதி பக்கம் சென்றதைக் கண்டேன். அவளைப் பின்தொடர்ந்து சென்ற பாதையில் வாகனங்களும் கூட தரையோடு வளையமிடப் பட்டு இணைக்கப்பட்டு இருப்பதைக் கண்டேன். அது ஒரு முதியவர்களுக்கான மருத்துவ விடுதியென்பது நுழைந்ததுமே தெரிந்தது. அந்தப் பெண் பிரார்த்தனைக்காக முதியவர்களை அழைத்துப்போய்க் கொண்டிருந்தாள். அவசரமாக அவளருகே வந்து கூச்சத்துடன் அவளது காலணியைத் தந்தேன். அவன் வேடிக்கையாக அதைக் கண்டாள். ‘தவறவிட்டு வந்தீர்கள்’ என மெல்லிய குரலில் சொன்னேன். அவள் நிதாளத்துடன் சொன்னாள்.
நீங்கள் நகருக்குப் புதியவரெனத் தெரிகிறது. இங்கே பொருள்கள் காணாமல் போவதற்குப் பல ஆண்டுகளாகும்.
ஒருவேளை தவறவிட்டாலும் அதை எப்போது வேண்டு மானாலும் போய்த் திரும்ப எடுத்துவிடலாம்.’
அவள் பேசுவதை நம்ப வேண்டும் போலவே இருந்தது. ‘ஏன் இப்படி வித்தையாக இருக்கிறது’ என்றேன்.
இந்த நகரில் முதியவர்களும் பெண்களும் மட்டுமே வாழ் கிறோம். இவர்களுக்குத்தான் உலகில் பொருள்களின் எடை எப்போதும் பிரச்னை தரக் கூடியதாக இருக்கிறது. இங்கே எதற்கும் எடையில்லை. யாவும் மிருதுவாக உள்ளன.”
நிகழ்ச்சிகளும் கூடவா’ எனக் கேட்டேன்.
நிஜம்தான். இங்கே கொந்தளிக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் கூடுவதில்லை. மனத் தடைகள் எதுவும் எவருக்கும் உருவாவது மில்லை.’
‘நான் நகரைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ‘
இந்த நகர் உங்களையும் அதன் வசமாக்கிவிடும்.
உன்னைப் பார்த்த உடனே மனத்தில் சில ரகசிய ஆசைகள் தோன்றுகின்றன. ஒளிக்க வேண்டிய அவசியமில்லையே. நான் உன்னைத் தனியே சந்திக்க விரும்புகிறேன்’ என்றேன்.
“இதோ இப்போதே நீங்களும் நகரின் சுபாவமேறிடத் தொடங்கி விட்டீர்கள். நான் உங்களை இந்த நகரின் தென்சதுக்கத்தில் மாலை சந்திக்கிறேன்” எனச் சிரிப்புடன் பிரார்த்தனைக்குரிய அறைக்குள் போய்விட்டாள்.
நான் எடையற்ற நகரின் தெருக்களில் அலைந்துகொண்டி ருந்தேன். பகல் நகரில் மிக மெதுவாக இறங்கிக்கொண்டிருந்தது. கல்லறைத் தோட்டமொன்றைக் கண்டேன். அது தரையை விட்டு சில அடி தூரம் மேலே எழும்பி மிதந்துகொண்டிருந்தது. மிகப் பெரிய சுமை போலத் தெரியக்கூடிய மூட்டையொன்றைச் சுமந்தபடி ஒரு முதியவள் சாவகாசமாக நடந்து போனாள். நகரில் ஒரு காகமோ நாயோ கூட காண முடியவில்லை. எவர் வீட்டிலிருந்தோ தூக்கி எறியப்பட்ட ஒரு ஆப்பிள் வீதியின் மேல் காற்றில் அவைந்தாடி வந்துகொண்டிருந்தது. சொற்பமான கடைகளேயிருந்தன. மாலை நான் அந்தச் சதுக்கத்தின் உள்ளே சென்றேன். அது மிகப் பெரிய பூங்காவைப் போல இருந்தது. அவள் நான் நின்றிருக்கும் இடத்தை நோக்கி வருவதைக் கண்டு நீண்ட பொழுதின் பின்பே அருகாமைக்கு வந்தாள். சிரிப்பு கூட எடையற்றதான ஒரு நீர்க்குமிழைப் போலச் சப்தமற்று உதிர்ந்தது. இருவரும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டோம். அப்போது மரத்துக்கும் எங்கள் தலைக்குமிடையில் ஆயிரக் கணக்கான இலைகள் உதிர்ந்து வட்டமிட்டபடியிருந்தன. மரமெங்கும் இலைகள் அடர்ந்துமிருந்தன. அவள் இயல்பாக ‘எப்போதோ உதிர்காலத்தில் உதிர்ந்த இலைகள் இன்னமும் தரைவந்து சேரவில்லை’ என்றாள்.
பட்டாம்பூச்சிகளைப் போல இலைகள் அவைத்துகொண்டிருந்த சுழல்வட்டத்தின் கீழே அமர்ந்திருந்தோம். எனக்கும் ஏனோ பேச்சு மிக சுருங்கியபடியிருந்தது. நாள் அவள் கைகளை என் மீது எடுத்துக்கொண்டேன். அந்தக் கையில் எடையே இல்லை. அது ஒரு சோப்பு நுரையின் கனமேயிருந்தது. நான் அவளைக் காதலிப்பதாகச் சொன்னேன். அவள் அதைப் பற்றிய கவன மின்றிச் சொன்னாள்,
‘அது இங்கே எவருக்கும் சாத்தியமாவதில்லை. காதல் பொருள் களை மிகுந்த களமுள்ளதாக்கிவிடக் கூடியதெனக் கேள்வி யுற்றிருக்கிறேன்.’
அவள் முகத்தை அருகாமை திருப்பி முத்தமிட எத்தனித்தேன். அந்த உதடுகள் மிக மிருதுவான ஒரு பனியைப் போல இருந்தது. முத்தமிடுவதற்காக உதட்டை அருகாமை கொள்வது சாத்திய மானதாகவேயில்லை. அவள் கேலியான குரலில் சொன்னாள்,
பெண்கள் எப்போதும் உலகை கனமற்றதாகவே கண்டு கொண்டிருக்கிறார்கள். அவளது பெயரைத் தெரிந்துகொள்ளும் ஆவல் மீறிடக் கேட்டேன்.
‘புலனி’ எனச் சொன்ன அவளை இழுத்து அணைத்தபோது தண்ணீரைப் போல விரல் எங்கும் ஊடுருவிக் கடந்தாள். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சிறிய கனியொன்று எங்கிருந்தோ உதிர்ந்து என்தலையில் விழுந்தது. அது ஓர் அத்திப் பழத்தைப் போல சிறியதாகவும் தேன் நிறத்திலுமிருந்தது.
அது இதே மரத்தில் ஏதோவொரு வருடத்தில் உதிர்ந்து வானில் தங்கிப்போன கனி. ருசியாக இருக்குமென்றான். நான் அதை எனது சட்டைப் பையில் போட்டுக் கொண்டவனாக அவளுடைய கைகளைப் பற்றியபடி நகரின் குறுக்குவீதிகளின் வழியே சென்றோம். முதியவர்கள் கூட்டமாக ஓர் இறங்கும் படிகள் கொண்ட சரிவில் அமர்ந்திருந்தனர். எவரும் பேசிக் கொள்ளவில்வை. பெரும் நிசப்தம் ஆழ்ந்திருந்தது. அவரவர் தங்களுக்கு விருப்பமான பொருளைச் சரிவின் உயரத்தில் இருந்த பீடத்திவேறி கீழே போட்டுவிட்டு அது தரைக்கு வரும் நாள் வரை அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாக்கெட் கடிகாரங்கள், சிகரெட் லைட்டர்கள், மணிபர்ஸ், அலங்கார மலர்க்குவளைகள், சிறிய வெண்கல மணி, விசிறிகள், கண்ணாடிக் கோப்பைகள் காற்றின் அடுக்குகளில் மிதந்து கொண்டிருந்தன.
அவள், நானும் ஏதேனும் ஒரு பொருளை அங்கே கீழே போட விருப்பமிருக்கிறதா எனக் கேட்டாள். நான் எதை விட்டு விடுவதெனத் தெரியாமல் திகைத்தவனாக எனது பையிலிருந்த நாணயமொன்றை எடுத்து வீசினேன். அது மிக மெதுவாகத் தரை நோக்கி வரும் தனது பயணத்தைத் தொடக்கியது. அவள் பலமாகச் சிரித்தான்.
‘நீ உனது மகனை வாலிபத்தில் அழைத்து வந்து காட்டும்வரை இது தரையிறங்காது.”
நான் ஆசை மீறிடத் திரும்பவும் சொன்னேன்,
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்.’
அவள் இப்போது எனது கண்களை ஆழமாக ஊடுருவியவளாகச் சொன்னாள்,
‘உன் காதலை நான் அறிவதற்கு இங்கே ஒரேயொரு வழி தானிருக்கிறது. அது நீ என்னைப் பிரிந்துபோவது மட்டும்தான். நான் புரியாதவனாகக் கேட்டேன்.
“பிரிந்தால் எப்படிக் காதலை அறிவாய்?”
இங்கே பிரிவு மட்டுமே கனமுள்ள ஒரு நிகழ்ச்சி. நீ பிரியும்போது நான் உன் காதலை முழுமையாக அறிந்துகொள்வேன்.’ அவளைக் காதலிப்பதற்காகப் பிரிந்துபோய்விடுவதாகச்
சொன்னேன். அவளிடம் எவ்விதமான சலனமுமில்லை. மாலை ஓர் அலையைப் போல மெதுவாக நகரின் மீது வீசிக் கொண்டிருந்தது. நகரை விட்டுப் புறப்படக் காத்திருந்தேன். கறுப்புநிற வாகனத்தில் பயணித்து மலையினின்று கீழே வர வர மனோரா தொலைவில் மயங்கித் தெரிந்துகொண்டிருந்தது. ஒரு வளைவில் நான் இறங்க வேண்டிய இடம் வந்தபோது மனம் ததும்பிக்கொண்டிருந்தது.
அவள் இப்போது எனது காதலை உணர்ந்திருப்பாள். தான் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன் என உரக்கச் சப்தமிட்டபடியே எனது கையிலிருந்த பையை எடுத்துக்கொண்டு நடந்தேன். திடீரென எனது சட்டை மிக கனமுள்ளதாகத் தோன்றியது. அப்போது நினைவுக்கு வந்த உதிர்த்த சிவப்புப் பழம் ஒன்றை சட்டைப் பையிலிருந்து கையில் எடுத்தேன். அதன் எடையை என் கைகளால் தாங்க முடியாததாக இருந்தது. கனம் தாளாமல் பழத்தை நழுவவிட்டேன். அது ஓர் எரிகல்லைப் போல மிகுந்த வேகத்துடன் பூமியைத் துளைத்துக்கொண்டு விழுந்து மறைந்தது.
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.