புதை குழி நரகமும் புரையோடும் உண்மைகளும்

சபேசன் ஒரு தனி மனிதன் பெயர் எனப்பட்டாலும், அவள் உயிரில் மட்டுமல்ல மனம் முழுதும் சூடு வைத்து அலற விட்ட அவன் கதையை கேட்டால், புண்ணிய விதி விமோசனம், பெறவே அவன் இங்கு வேதமே சொல்லும் நல்லாசானகி, மாறவும் கூடும் இந்த மாறுதலே சொர்க்கத்தின் படிகளாய் அமைந்து விடவும் கூடும் என்பதற்காகவே சூரியகுமாரியின் அடி மனசில் ஒரு கருத்தோன்றலாய் வளர்ச்சி பெற்று, இன்று அதன் விசுவரூப தரிசனத்தில் உலகமே மாறப்போவதாய் அவள் கற்பனையில் ஊறித் திளைத்தாள். ஆம் அப்பேர்ப்பட்ட பெருந்தகை ஞானியல்ல. அவன் உயிரை உழுது பண்படுத்தவே பிறந்த அவனை, எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் மனதின் தீராத வடுவாய் உறுத்துகின்ற அவனின் விபரீத புத்திக்கு விளக்கேற்றி பார்க்கும் அற்ப ஆசையில் விளைவாகவே, குரு மந்திரமாக அவள் சொல்லத் தொடங்கும், இக் கதையும் கூட கருக் கட்டி எழுவதாய் அவள் உணர்ந்தாள்.
அவள் கரகம்பிட்டியில் ஒரு சிறு வீட்டில் வாழ்ந்த நேரம். துல்லியமான ஒரு இளம் காலை பொழுது திடீரென்று கதவில் இடி விழுந்த மாதிரி ஒரு சப்தம் கேட்டது. அந்த, சப்த அதிர்வுகளில் சங்கடப்பட்ட மனசோடு கதவைத் திறந்து பார்க்கையில் ஒரு வாழ்க்கை முகம் அசாதாரணகளையோடு, அவள் கண்களை ஈர்த்தது.
அதுவும் ஒரு கிழவன். எனினும் வாழ்வின் சுவடு விட்டுப் போகாமல், உற்சாக கதியில் அவர் வந்திருப்பது போல் பட்டது. கையில் பை வேறு. அந்த ஆராய்ச்சிக்கு முன் அவரை வரவேற்கும் உந்துதலுடன் அவள் கூறினாள்.
வாங்கோ!
அவர் உள்ளே வந்து அமர்ந்தவாறே, சொல்லத் தொடங்கினார். அதை அவள் காது கொடுத்துக்கேட்டுக் கொண்டிருந்தாள், கனவில் கேட்பது போல் அவர் குரல் ஒலித்தது.
ஜெர்மனியில் இருக்கிற என் மகனின் சாதகம் உங்கடை மகளின் சாதகத்தோடை நல்லாய் பொருந்தி வந்திருக்கு. எண்பது வீதம் பொருத்தம். படமும் பிடிச்சிருக்கு. அதுதான் நேரிலை பாத்து பேசிப் போகத்தான் இப்ப நான் வந்தது.
அதைக் கேட்டு ஒன்றுமே பேச வராமல், அவள் பேசாமடந்தையாய் உறைந்து போய் அமர்ந்திருந்தாள், வாழ்க்கை பற்றிய அறிதல், புரிதல் எதுவுமின்றி, ஜடம் மரத்துப் போய் மனம் கெட்டு, மூளையே செயலிழந்து விட்ட நிலையில், அவளை முன்னிறுத்தி, இந்தக் கல்யாணாமென்ற காட்சி திருவிழா பற்றிய நடப்பு விவகாரம் எப்படிக் கண் திறந்து கொண்டது. இது உண்மையில்லை என்று அவள் மனம் அலறியது. இதை அவள் செய்திருக்கவே மாட்டாள். அக்கா கல்யானம் முடிந்த கையோடு, தனக்கும் செய்து வை என்று அடம் பிடித்த மனநலம் பாதிக்கப்பட்ட என் மகளுக்காகவே, இந்த விபரீத நாடகம் அரங்கேற இருந்தது உண்மை. இப் பெரியவருக்கு, தெரியாவரைக்கும் தான் அவள் பேசாமடந்தையாகி விட்ட இந்த நிழற் கோலம் உண்மையை அறிந்தால் இவர் அவளை அடித்தே கொன்று போடுவார். மகளிடம் அன்றாடம் இப்படி செத்துப் பிழைப்பதை விட, இது மேல். நடப்பது நடக்கட்டும். அதுவும் போட்டோ பார்த்ததோடு நிற்காமல், மகளை நேரிலும் பார்க்க வேண்டுமென்கிறாரே. வேறு வழியில்லை.
இதோ! அவர் கண் முன்னால், நிர்ச்சலன தேவதையாக அவள். கீர்த்தி, மனநலம் கெட்டு நீண்ட காலமாகியும் முகத்திலே ஓர் அசாதாரண களை அதீத அழகு அவற்றினுள் உண்மை மறைபொருளாகவே போனது. ஆகா! இனியென்ன கல்யாண விழா தான் காட்சி நாடகம் தான். வேறு வழியில்லை. அவளை ஏற்கவும் ஓர் உத்தம புருஷன் இது நடக்குமா? பெண் பார்க்கும் படலம் முடிந்தாலும் அடுத்த கட்ட நகர்வில் நுழையப் பயந்து அவள் கேட்டாள்.
ஐயா! எல்லாம் பிடிச்ச மாதிரித்தான் ஐந்து லட்சம் சீதனமும் பேரம் பேசியாச்சு. இனியென்ன, கல்யாணம் வைக்க நாள் பாருங்கோ! என்றாள்.
பொறுங்கோ! அதுக்கு முன் இன்னொன்றும் இருக்கு. உங்களைப் பற்றி கொஞ்சம் விசாரிக்க வேணும்.
இதைக் கேட்டு அவள் திடுக்கிட்டாள், ஊரிலே போய் இதை விசாரிக்கக் கிளம்பினால், கடவுளில்லை மகளை உயரோடு விழுங்கி சாகடிக்க பூதம் தான் வரப் போகுது. ஐயோ! நான் என் செய்வேன். ஊர் விலாசம் வாங்கிக் கொண்டு அவர் போன பின் நடந்த கூத்து. ஒரு கரி நாடகம். ஊர் வாயே, பெரும் சத்தியக் கடவுள் மாதிரி அங்கே குளிர் காயத்தான் மனிதர்கள். சகதி குளித்து எழுபவர்களிடம் போய் நீதி கேட்டு நியாயத்துக்காகப் போராடி, கடவுளே வந்தாலும் முடியாது. அவருக்குக்குப் பதிலாக பூதம் தான் வந்தது.
சபேசனுக்குகே, அந்த ஒப்பற்ற மணிமகுடம். ஏறி மிதிக்க ஒருகால் போதாது, அதுவும் சிம்மாவதாரம் அதுவும் பெரிய வேலையுலையிலுமில்லை, அவன். ஒரு மிகச் சாதாரண கிராமசேவகன் வேலை நாட்கள் தவிர்ந்த மிகுதி நாட்கள் பெரும்பாலும் அவன் பொழுது, லட்சுமி கடை வாசலிலேயே நண்பர்களோடு சந்தோஷமாகக் கழியும் , இதற்கு மாறாக அன்று மாலையே இருள் விழுங்கிய பூதமாய் அவன் சடுதியில் மாற நேர்ந்தது.
மாலை பொழுது வந்து விட்டால் லட்சுமி கடை களை கட்டி விடும் ஊர்க் கதை பேசி, உல்லாசமாகப் பொழுது கழிக்க ஊரேகூடி விடும் சபேசன் தான் அதில் முதல் ஆளாய் வந்து நிற்பான், அன்று குறித்த அப் பெரியவர் கீர்த்தியியின் கதை கேட்கவும் நிஜத்தை அறியவும் , அங்கு பிரசன்னமாகியிருந்தார், கீர்த்தியின் படம் காட்டி சபேசனிடமே, அவர் கேட்டார்.
தம்பி! இந்தபடத்தில் இருக்கிற பிள்ளையை உமக்குத் தெரியுமே? சிவப்பு நிற சேலை கட்டிக் கொண்டு, ஓர் ஆதர்ஸ தேவதை போல அவள் பிம்பம் கண்ணை ஊடுருவி, உள்ளம் தொட்ட போது அவன் நினைத்தான். பின்னர் கேட்டான், இவ ஆர்?
என்ன தம்பி? இப்படிக் கேக்கிறீர் எல்லாம் உங்கடை ஊரிலை இருக்கிற ஆட்கள் தாம் இவளைத் தெரியாதே?
தெரியும். தெரியும் என்றவன் சுயாதீனமாக படத்தை வாங்கிப் பார்த்து விட்டு, மேலும் தொடர்ந்தான் ஓ! நல்லாய் தெரியுமே. இந்தப் பெட்டைக்கு விசர் பிடிச்சிருக்கு என்று அதுவும் தெரியும்.
பிறகு அவன் கதையையைக் கேட்க விரும்பாமலே, அவர் போன கணங்கள் நீடித்த பாலை வெளியாகவே, அங்கு நிலைத்தது. இதொன்றும் அறியாமலே சூரிய தனிமையில் வெறித்து அப்பெரியவரைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில் தான், அவள் மாமன் மகள் சுவேதாவின் வருகை வெறும் நிழல் சஞ்சாரமாய் அங்கு நிகழ்நயும் குணம் கொண்ட அவளுக்கு ஊர்ப் புதினங்களெகளெல்லாம் அத்துபடி. அதிலொன்றைக் கட்டவிழ்க்க மூர்க்கமான அவளின் இந்த வருகை. மற்றபடி சூர்யாவை குசலம் விசாரித்துப் போகவல்ல அவளின் இந்த வருகை. அவளின் வீழ்த்த துடிக்கும் கரங்களின் முன் மாசுபடாத, உண்மைகளின் பக்கம் இருந்து கொண்டு சூர்யா கேட்டாள.
என்ன மச்சாள் முகமெல்லாம் சந்தோஷக் களை வடியுது? மறுபடியும் தேர் ஏறப் போறியா!
இனியெல்லாம் லண்டன் குளிரிலைலை போய் சாக என்னாலை முடியாது. இப்ப நான் அதுக்கு வரேலை.
அப்ப எதுக்கு?
ஊரிலை உன்னைப் பற்றித் தான் இப்ப பேச்சு அடிபடுகுது தெரியுமோ உனக்கு?
ஓ! நல்லாய் தெரியுமே.
எனக்கு அதைப்பற்றி ஒரு மொட்டைக் கடிதமே வந்தது. இனி புதிசாய் கேட்க என்ன இருக்கு? இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் எங்கடை உண்மையைச் சொல்ல கடவுள் வரேலை. பூதம் தான் புறப்பட்டு வந்தது.
இப்ப நான் கேக்கிறன் சொல்லு சுவேதா. இது உண்மையாகவே இருந்திட்டு போகட்டும். ஆனால் இதைச் சொல்லுற தகுதியில்லாமல் அவன் வாய் திறந்தது பாவமில்வமில்லையா. அப்ப என்னதான் சொல்ல வாறாய்?
இதைச் சொல்ல சபசன் ஆர்? எங்களை முன் பின் அறியாமலே இதைச் சொல்ல நேர்ந்ததற்காக நாக்கு அழுகிச்சாக வேண்டாமோ அவன்.
பாவம் அவனைவிட்டிடு இப்ப அவன் நிலைமை அப்படித் தான் நாக்கு என்ன உடம்ப அழுகிக் கொண்டிருக்கு.
அதைக் கேட்டு விட்டு பெருமூச்செறிந்து அவள் சொன்னாள். மனிதம் வாழாவிட்டால் பூதம் தோண்டுகிற புதைகுழியில் தான் அவர்களும் விழுந்து சாக நேரிடும் என்றாள்.
வேதமே படித்த அவளூக்கு இந்த சாக்காட்டு தத்துவம் கூடஒரு சாந்தி வரமேயன்றி, சாபமல்ல. அவன் பாவம்.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 222
