பாரதி இன்றிருந்தால்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 18 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமான மாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று பாரதி பாடி வைத்தாலும் வைத்தார். அதனால் இந்த ஆண் வர்க் கத்திற்கும் உலகத்திற்கும் ஏற்பட்ட ஆபத்துக்கள் சொல்லி முடியாது. 

முன்னெல்லாம், கடைகளுக்கு (கூப்பன் கடை களையும் பலசரக்குக் கடைகளையும் நான் இங்கு குறிப் பிடவில்லை) ஆண்கள்தான் போவார்கள். ஆனால் இந்தப் பாரதி”ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று பாடிய பின் பெண்களெல்லாம் அடிக்கடி “ஷொப்பிங் ஷொப் பிங்” என்று ஆண்களுக்குச் சரிநிகராக அல்ல, ஆண் களோடு சரி இரண்டு மடங்கினராக கடைகளை முற்று கையிட்டு வருகிறார்கள். 

முன்னெல்லாம் பஸ் வண்டிகளில் பெண்களுக் காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில்கூட இரண்டொரு பெண்கள்தான் பிரயாணம் செய்வார்கள். ஆனால் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்று பாரதி பாடியபின் இப்பொழுதெல்லாம் பஸ்சின் அரைவாசிக்கு மேற்பட்ட ஆசனங்களே பெண்களுக்குத்தான் தேவைப்படு கிறது. புகைவண்டியிலும் இதே கதைதான். 

முன்னெல்லாம், ‘உத்தியோகம் புருஷ லட் சணம்’ என்றுசொல்லி ஆண்களே உத்தியோக நாற் காலிகளில் அமர்ந்திருப்பார்கள். ஆனால் “ ஆண்க ளோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று பாரதி பாடியபின் ஆண்க ளது உத்தியோகங்களுக்குப் பெண்களும் போட்டி போட வந்துவிட்டார்கள். 

இத்துடன் நின்றுவிடவில்லை இந்தப் பாரதியால் வந்த கொடுமை. இந்தப்பாட்டு எமது ‘இலங்கைப் போக்குவரத்துச் சபை’யின் காதுகளிலும் விழுந்து இனிமேல் பெண்களும் பஸ் கொண்டக்டர்களாக நிய மிக்கப்பட இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 

இப்படி எங்கு பார்த்தாலும் – அதாவது சைக் கிள் ஓடுவது, கார் ஓட்டுவது, சேட் போடுவது, சினிமா பார்ப்பது (அடல்ற்ஸ் ஒன்லி உட்பட) எல்லா வற்றிலுமே ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்கிறார்கள் இந்த நாட்டிலே. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் வழக்கம் இன்று இல்லை. அவளை வீட்டுக்குள் மட்டுமல்ல சமைய லறை விறாந்தைகளிலும்கூட இன்று காணக் கிடைப்ப தில்லை. அவள் தான் பஸ்சிலும் ஆபீசிலும் ‘ஷொப்பிங்’ கிலுமாகத் திரிகிறாளே! 

இனி இந்த ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வதால் ஏற்படும் தொல்லைகளைப்பற்றி சிறிது ஆராய்வோம். 

பெண்கள் கடைகளை முற்றுகையிடுவதால் இந்த ஆண்களைக் கடைக்காரர்கள் யாரும் கவனிப்ப தில்லை. அவர்கள் சினிமா நடிகைகளின் கணவர்கள் போல் (நடிகக் கணவர்களல்ல) ஓரிடத்தில் ஒதுங்கி நிற்கவேண்டியிருக்கிறது. இந்தக் கடைக்காரர்களா வது தங்களது வர்க்கமென்று பார்க்காவிட்டாலும் ‘பெண்களைவிட ஆண்கள் கெதியில் வாங்குவதை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். பெண்களைப் போலில்லாது ஆண்கள் ஏதோ கட்டாயம் வாங்கத் தான் வருபவர்கள், பெண்களைப்போலல்லாது ஆண் கள் கூட்டத்துடனின்றித் தனித்தனியாக வருவார்கள்’ என்பனவைகளையாவது புரிந்துகொண்டு ஆண்களுக் குக் கருணை காட்டக் கூடாதா? 

பஸ் வண்டிகளையும் புகைவண்டிகளையும் பெண்கள் தமது  உடமைகளாக்கியபின் இந்த அப்பாவி ஆண்களெல்லாம் நின்று பிரயாணம் செய்யவேண்டிய நிலையிலும், வண்டி கிடைக்காத நிலையிலுமாகக் கிடந்து தவிக்கிறார்கள். 

பெண்கள் உத்தியோகம் பார்க்கக் கிளம்பியதும் பெண்களோடு ஆண்களும் உத்தியோகங்களுக்கு மனுப் போட்டாலும் இந்த முதலாளிமார்கள் பெண் களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம் கேட்டால் பெண்கள் இருந்தால் பொதுமக்களைக் கூடுதலாகக் கவரமுடியும் என்றும், அலுவலகத்துக்கும் ஓர் அழகாய் இருக்குமென்றும் சொல்லுகிறார்கள். 

பஸ்களில் பெண் கொண்டக்டர்களை நியமிக்கும் திட்டத்துக்கு வருவோம். இதனால் ஏதோ சில பெண் கள்தான் பயனடையப்போகிறார்கள், ஆண்களுக்கு அப்படி ஒன்றும் பாரதூரமான வேலையில்லாத் திண் டாட்டம் ஏற்படாது என்று ஒருவேளை நீங்கள் நினைக் கலாம், அதுதவறு. 

பெண்கள் கொண்டக்டர்களாக அமர்த்தப்பட் டதும் பஸ் டிரைவர்கள் பஸ்சுக்குப் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிப்பதற்காக தமக்குமுன் வைக் கப்பட்டுள்ள கண்ணாடியைச் சிறிது திசை திருப்பி விட்டு, அதையே பார்த்துக்கொண்டு பாதையைப் பார்க்காமல் வண்டியைச் செலுத்துவார்கள். இதனால் பல விபத்துக்கள் ஏற்பட, பெண் கொண்டக்டர்கள் உள்ள பஸ்களில் ஆண் டிறைவர்கள் இருக்கக்கூடா தென்றும் அப்படி இருந்தால் டிறைவர்கள் கொண்டக் டர்களையே பார்த்துக்கொண்டு விபத்துகளில் சிக்கி விடுவார்கள் என்றும் இ. போ. ச. முடிவுக்கு வரும். அதன்பிறகு பெண் கொண்டக்டர்கள் உள்ள பஸ்க ளில் பெண் டிறைவர்களும் நியமிக்கப்படுவார்கள். 

இத்துடன் தொல்லைகள் தீர்ந்தன என்று நினைத்துவிடாதீர்கள். பெண் டிறைவர் கொண்டக்டர் கள் நியமிக்கப்பட்ட பஸ்களிலே ஏராளமானவர்கள் முக்கியமாக வாலிபர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறுவார்கள். சைக்கிள், கார்களில் பிரயாணம் செய்தவர்கள்கூட அந்த பஸ்களிலேதான் பிரயாணம் செய்வார்கள்… 

நல்லதாயிற்றே. அப்படியே ஆண்கள் பணி புரியும் பஸ்களில் பெண்களும் பிரயாணம் செய்தால் தொல்லைகள் தொலைந்தன என்கிறீர்களா? அதுதான் நடக்காது. ‘டிறைவர் என்ன புடைவை கட்டியிருக்கி றாள். கொண்டக்டர் என்னமாதிரி ‘ஜாக்கட்’ அணிந் திருக்கிறாள். டிறைவரின் புடைவையும் ‘ஜாக்கட்’டும் ‘மாச்’ ஆகிறதா? கொண்டக்டர் கொண்டை கட்டியிருக்கிறாளா அல்லது பின்னல் விட்டிருக்கிறாளா?’ என்ப வைகளையெல்லாம் அறிந்துகொள்ளும் எண்ணம் பாவம், அவர்களுக்கு இருக்குமல்லவா? 

இதனால் ஆண்கள் பணிபுரியும் பஸ்களெல் லாம் வெறும் பஸ்சாக ஓடித்திரியும். உடனே பெண் ஊழியர்களால் இ.போ.ச. இலாபம் காட்டுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா பஸ்களிலுமே பெண் டிறைவர்களும் கொண்டக்டர்களும் நியமிக்கப்படுவார்கள். அதன் பிறகு …… 

வேண்டாம், அதை நான் சொல்ல விரும்ப வில்லை. சொன்னால் ஆண்களெல்லாம்- அதிலும் முக் கியமாக இ.போ.ச. ஊழியர்களெல்லாம் மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள். 

சுருக்கமாக, பாரதி “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று பாடியதால் ஆண்களை குடும்பக்கலையும் குழந்தை வளர்ப்புக் கலையும் கற்கும்படி வைத்துவிட்டார். அப்படியான நிலை இதுவரை வராத ஆண்களுக்கு அந்த நிலை வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதைச் சொல்லி வைக்கிறேன். 

எனவே, பாரதி இன்றிருந்தால் இந்த ஆண்க ளெல்லாம் அகப்பையும் அடுப்படியுமாக இருந்து அனுபவிக்கும் அல்லல்களையும், குழந்தைகளோடு அனுபவிக்கும் கும்மாளங்களையும் கண்டு இரத்தக் கண்ணீர் வடிப்பார். “நுண்ணறிவுடையராகி நூலொடு பழகி னாலும் பெண்ணறிவென்பது பெரும் பேதமைத்து’ “பெண் என்னும் மாயப் பைசாசம்” என்றெல்லாம் தமக்கு முன் வந்தோர் தீர்க்கதரிசனமாகவும் அனுபவ பூர்வமாகவும் கூறியதை எல்லாம் புறக்கணித்ததை எண்ணி எண்ணித் தனது அறியாமையையிட்டு வருந்துவார். 

அதன்பின், “பெண்களோடு ஆண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்றும் “வீட்டுக்குள்ளே ஆணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்” என்றும் ஆண்கள் விடுதலைபற்றிப் பாடுவார்.

– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.

பொ.சண்முகநாதன் எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *