நானாக நானில்லை தாயே…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 212 
 
 

ஃபோன் பண்ணி, ‘நான் அழகுதாசன் பேசறேன். எனக்கு மெடிக்கல் செக்கப் பண்ணணும் ஃபிளட் சுகர் அப்டமல் ஸ்கேன் எல்லாம் பண்ணணும் வாட்ஸாப்பில் டாக்டர் எழுதிக் கொடுத்த ஸ்லிப்பை அனுப்பி வைக்கிறேன். எப்ப வரலாம்?! எவ்வளவு சர்ஜாகும்னு சொன்னாத் தேவலை!’ என்றான் அழகுதாசன்.

அந்தப் பக்கம் குயிலினும் இனிய குரலில், ‘உங்களுக்கு என்ன வயசாகுது?! என்றது.

ஏன் அப்படிக் கேட்டதுன்னு தெரியவில்லை!

‘பளிச்சின்னு ஒரு மின்னல் வெட்டு!’ எல்லாரையும் குயில் இப்படிக் கேட்குமா? இல்லைத் தன்னைத்தான் கேட்குதா?!’ ஒரு நப்பாசை! ஆக்சுவல் வயசைச் சொல்ல மனசு வரலை!

‘சொல்லுங்க சார்! என்ற குயிலின் குரல் உசுப்ப, சிலிர்த்தது காமப் பிசாசு!.

‘வயசெல்லாம் எதுக்கு?!’ ரேட்டைச் சொல்லுங்க?! அவன் காரியத்தில் குறியாய் இருப்பதைக் குயில் உணர்ந்திருக்க வேண்டும் .

‘ஒரு ஐயாயிரமாகும்!’ என்றதும் அழகுதாசன் அம்பேலானான். ஐயாயிரத்தைக் குறைக்கும் அஸ்திரம் ஆயுசுதானே?!

‘நான் ஒரு சீனியர் சிட்டிசன் ரிடையர்டு பெர்ஷனர். சார்ஜஸ் ஜாஸ்தியா இருக்கே?’

குயில் தொடர்ந்தது. ‘எல்லாருக்கும் ஒரே சார்ஜஸ்தான். எப்ப வர்றீங்க? ‘பிள்ட் டெஸ்ட்’ பாஸ்டிங்க்கில் என்றால், ஏழுமணிக்கே வந்துடுங்க! லேப் ஆறரைக்கெல்லாம் திறந்திடும். பர்ஸ்ட் ஆளா எடுத்துக்கலாம். பேரை ரெஜிஸ்டர் பண்ணிக்கவா?!’ அதே குயில்.

வேற வழி…?!

‘நாளைக்குக் காலைல வர்றேன். நோட் பண்ணிக்குங்க! உங்க பேர்?’ என்றதும், நித்யா என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

இவன் எதுக்கு அவள் பெயரைக் கேட்கணும்?!

வைத்ததும் ‘அவ வயசைக் கேட்கலையே?!’ மனசு அல்லாடியது. இந்த ஒரு விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே ‘நானாக நானில்லை தாயே…!’

அடுத்த நாள் டெஸ்ட்டுக்குப் போக, நித்யா இல்லை! அந்த இடத்தில் வேறு ஒருத்தி வித்யான்னு வச்சுக்கவுமே!

கோழி குருடா இருந்தா என்ன?! கொழம்பு ருசியா இருந்தாச் சரிதானே?!

டெஸ்ட்டுக்குக் குடுத்து பில் பே பண்ணுகையில் சார்ஜஸ் எட்டாயிரம் பில்லிடப்பட்டது! கோழி குருடு என்பதாலோ?

தூக்கி வாரிப்போட்டது அழகுதாசனுக்கு!

‘ஐயாயிரத்துக்குள்ள வரும்னாங்களே?’

‘யார் சொன்னது?

‘நித்யான்னு சொன்னாங்க.’

‘இப்ப அவங்க இங்க வேலைல இல்லை! அவங்க, உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?’

‘இல்லை.. சும்மா பழக்கம்தான்’.

‘அவங்களை நிறுத்தீட்டாங்க!’

‘யார்?’

‘மேடம் சுப்பீரியர்!’

‘ஏன்?’

‘அவங்க சரியில்லைனுதான்!!’

‘ஓஹோ!’ ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொள்ள நெஞ்சு சொன்னது…!

யார்தான் இந்த உலகத்தில் சுப்பீரியர்? யாரும் உலகில் சுப்பீரியர் இல்லை! வயதைத் தேவையின்றிக் கேட்டது நித்யா தப்பு என்றால், உண்மை வயதை ஒளித்த அழகுதாசன் மட்டும் யோக்கியமா? அவள் பெயரை இவன் கேட்டதுதான் நியாயமா?! ஆக உலகில் சுப்பீரியருமில்லை! இன்பீரியருமில்லை!. அவரவர்கள்… அவரவர்களாகவே அவனியில் உலா வருகிறார்கள்.

அகப்படாத வரை எல்லாரும் நல்லவரே…!

அவரவர்கள் அவரவர்களாக இருப்பதே நிதர்சனம்! நிஜம்!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *