கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 6,906 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வங்கியில் பணம் போட புறப்பட்டுக் கொண்டிருந்த பரமுவை அம்மா எச்சரித்தாள். “டேய் பரமு, ஜாக்கிரதைடா… வங்கியில் பேந்த பேந்த முழிச்சுட்டு நிக்காதே! யார் கிட்டயும் அனாவசியமா பேச்சுக் கொடுக்காதே! அக்கம்பக்கம் எச்சரிக்கையா இரு. யாராவது சார்… நானும் பணம் போடணும், குடுங்கன்னு கேட்பாங்க. பயித்தியமாட்டம் கொடுத்துட்டு ஏமாந்துடாதே… ஜாக்கிரதை! வங்கியில் இது மாதிரி நிறைய வாங்கிட்டு ஏமாத்திடறாங்களாம்!” என்றாள்.

“சரிம்மா… எத்தனை தடவைதான் சொல்லுவே? மானம் போகுது. நானென்ன முட்டாளா? அதெல்லாம் ஜாக்கிரதையா இருப்பேன்!” என்றான்.

“மானம் போனாப் பரவாயில்லை… இது அப்படி இல்லைடா…!” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுத்தவளைத் தடுத்துச் சொன்னான்.

“அம்மா…எத்தனை தடவைதான் சொல்லுவே? செலான் எழுதி ஃபில்லப் பண்ணி பணம் போட்டதும், பத்திரமா பேனாவை யாருக்கும் கொடுக்காம கொண்டு வந்துடறேன்… போதுமா…?” என்று கேட்டுவிட்டு நகர, நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள் அம்மா!

– குமுதம் சிறுகதை ஸ்பெஷல்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *