கோசின்ரா

கோசின்ரா
 

கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது.

“என் கடவுளும் என்னைப் போல கருப்பு” என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.

“சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம் என்னுடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன” என்கிறார்.

இவருடைய இரண்டாம் தொகுப்பு “பூனையின் கடவுள்” புது எழுத்து வெளியீடு.