என்ன விலை அழகே..!?
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 4,063

உலகமே வர்த்தக மயமாகிவிட்டது. எல்லாவற்றினுக்கும் விலை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டது இன்றைய உலகம்!!.
கவியரசு கண்னதாசன் தன் ‘மாங்கனி’ நூலில் நாயகி நடனமாதின் நடன அழகைக் கவிதையில் சொல்லும் போது இப்படிச் சொன்னார்:
“காற்றுக்கு முருங்கை மரம் ஆடல்போலும்,
கடலுக்குள் இளங்காற்று நடித்தல் போலும்,
நாற்றுக்குள் இயற்கைமடி விரிதல் போலும்
மாங்க்கனி ஆடினாள் என்பார். அழகை
ரசிக்க ஒரு தனி மனம் வேண்டும்.
எப்படி ரசித்திருந்தால்… ‘என்ன விலை அழகே..? சொன்ன விலைக்குன்வாங்க வருவேன்னு!’ சொல்லியிருப்பார் வாலி?!.
அழகைப் படைத்த பிரம்மனைவிட, ஆயிரம் மடங்கு உயர்ந்துவிடுகிறார் கவிஞர் வாலி இந்தப் பாட்டில்:
இந்தப் பீடிகை எதற்கு என்று நீங்கள் யோசிக்கலாம்.
பொண்ணு கிளி மாதிரி இருக்காள்னு சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறோம். அழகில் ‘கிளி’ அலாதியானதுதான். அந்த அழகுக் கிளியை நம் தேசியப் பறவையாக்கி இருக்கலாமே?! Peacock stands for beauty தானே?!
நாம்-
மயிலுக்குப் பதிலாக
கிளியை
தேசியப் பறவையாக்கி இருக்கலாம்.,
அழகில் ஆரஞ்சு நிறம்,
மேனியில் பச்சை,
கண்கள் கருநீல
அசோக சக்கரம்.,
பின் ஏன் விட்டுவிட்டார்கள்?
ஓருவேளை-
தேசிய ரகசியத்தைப்
பாதுகாக்கத் தெரியாது
உளறிவிடுமென்று
ஒதுக்கிவிட்டார்களோ?!
கிளி ஆழகுதான் அதைவிட அழகுதான் மயில்.
அன்று அந்தக் கிளி ஜோசியக்காரன்தான் சோமனூர் அய்யங்கோயில் வாசலில் வைத்துச் சொன்னான்.
‘இதபாரு, வெள்ளிக் கிழமை முருகனை நினைச்சுக் கும்பிடு! சமீபத்தில் இறந்த ஒருத்தர். உனக்குக் குருவா இருந்து ஆசி வழங்குவார்னு.
நெனைச்சது நடக்கும்னு! அன்னைக்கு நம்பலை…! ஆனால், கிளியோசியம் உண்மைனு திடீர்னு ஒருநாள் ஞானம் வந்தது.
போர்டிகோவில் நிறுத்தியிருந்த கார்மேல் மயில் ஜம்முனு நின்னது! அன்னைக்கு வெள்ளிக்கிழமை வேறு!
‘என்னடா இது அதிசயமா இருக்கு? ஜோசியம் உண்மையா? காண்பது உண்மையா?
‘மனமே நீ முருகனின் மயில் வாகனம்னு’ பாடலாம். உன்னைத்தேடி என் மனசு வரலாம்., முருகா, என்னைத் தேடி உன் மயில் வரலாமா? ஏன்?? ஏன்??
ஆனால், முருகனின் வாகனம் மயில் எதுக்கு என் வாகனத்து மேல் வந்து குந்தணும்?!
சமீபத்தில் இறந்து போனவர்னு ஜோசியக்காரர் சொன்னதும், சொன்ன சமயத்தில் இறந்ததும் என் ஆசிரியர் இளமுருகு என்பவர். அவரை நான் மறந்தே போயிட்டேன்.
எல்லாப் பாவத்துக்கும் கழுவாய் உண்டு! குரு நிந்தனைக்கு கழுவாயே இல்லை!’ அல்லவா?
குரு பார்க்க கோடி புண்ணியம்., குருவை நாம் பார்க்கவும், கோடி புண்ணியம்தானே?! கோடி புண்ணியத்துக்காக யார் யாரைப் பார்த்தால் என்ன?
கோடிகளில் கொடி கட்டிப் பறப்பது வர்த்தகம்தானே? என்னை என் குரு ஆசீர்வதிப்பாரா?
கோடி வராவிட்டாலும் அவரை என் மனம் தேடி அலையும் செய்தி அவருக்குத் தெரிந்தால் போதும்
மயிலைப் பார்த்து நான் பாடினேன்…
‘என்ன விலை அழகே…?’ என்று.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
