என் உலகம் எது
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 198
(கிறிஸ்துமஸ் கவிதை)

வெளியே வீசிய குளிர், சாளரம் வழியாக உள்ளே புகுந்து குளிட வைத்தது. சில்வியாவின் கைகளில் சலைன் நிறைந்த குளுக்கோஸ் இறங்கிக் கொண்டிருந்தது. மருத்துவமனைக்கு வெளியே தெரிந்த வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் கண்சிமிட்ட ஆரம்பித்தது.
வயிற்றில் பசி மெதுவாக கிள்ள ஆரம்பித்தது. “நாளை இரவு கிஜீஸ்துமஸ் திருப்பலிக்குச் செல்ல வேண்டும். இந்த வேளையில் மருத்துவமனையில் மோட்டு வளையத்தைப் பார்த்துக் கொண்டு எப்போதடா இந்தக் குளுக்கோஸ் பாட்டில் தீரும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
நாளை மதியம் விக்டர் வேறு குவைத்திலிரந்து வருகிறார். அவருடைய போனும் இரண்டு நாளாக வரவில்லை. நானும் முயற்சி செய்து தொடர்பு கிடைக்கவில்லை.
திருமணமாகி ஒரு ஒரு வருடம் கழித்து கழித்து ஊருக்கு வருகிறவருக்கு நான் மருத்துவமனையில் இருப்பது தெரிந்தால் எப்படி இருக்கும்? சேஸ எனக்கு ஏன் திடீரென்று ஒரு தலைபக்கம் மட்டும் தலைவலி. அதுவும் தாங்க முடியாமல்….. டாக்டர் ஒரே மன உளைச்சல் என்கிறார். திருமணத்திற்கு முன்னால் காதலித்தீர்களா? என்று டாக்டர் கேட்டார். ஆம் என்பதையும் என் கணவர் விக்டரிடம் எல்லாம் மனந்திறந்து சொல்லி விட்டேன் என்பதையும் குறிப்பிட்டு விட்டேன்.
மதியம் திரும்ப வந்து ஸ்பெஷலிஸ்ட் விமலா டாக்டர் கொஞ்சம் மனம் விட்டு யாரிடமாவது பேசியிருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். எதைப் பற்றி என்றால் ஜானைப் பற்றி என்கிறார். இவர்கள், நான் ஜானை மறந்தாலும் என்னை மறக்க விடமாட்டார்கள் போலிருக்கிறதே…. என் நகைகளோடு ஓடிப் போனவன் எங்கிருக்கிறான் என்று கூடத் தெரியாது. என் கணவர் திருமணத்திற்கு முன்னால் நடந்ததெல்லாம் நீ தெளிவாகச் சொல்லி விட்டாயல்லவா? குழப்பமில்லாமல் இரு. நாம் காதலிப்போம் என்று அடிக்கடி தொலைப் பேசியில் ஆரதரவாகத் தானிருக்கிறார்.
ஆனால் இந்த டாக்டரும் விமலா டாக்டர் ஸ்பெஷலிஸ்டும் தான் என் தலைவலிக்குக் காரணம். இன்னும் திருமணத்திற்கு முன்னால் உள்ள வாழ்க்கை தான் என்கிறார்கள்.
தோழி உஷசாரிடம் எல்லாம் மனம் திறந்து பேசியிருக்கிறேன். விக்டரிடம் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அப்படியே சொல்லியிருக்கிறேன். இருந்தும் எனக்கு எப்படி மன உளைச்சல். இயேசுவே! நான் பாவி தான். ஆனால் நீர் பாவிகளை இரட்சிக்கவே உலகிற்கு வந்தீரே! என்னை ஏறெடுத்துப் பாருமய்யா.
நான் உமது பிள்ளையாகவும் என் கணவருக்கு பிரமாணிக்கமாகவும் இருக்க உதவி செய்யும். ஓராண்டு கழித்து உம்முடைய பிறந்த நாளை நாங்கள் இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாட விரும்பும் இந்தநாளில் எமக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் நீர் கொடுக்க வேண்டாமா?
இப்படி ஒரு மாதமாக தலைவலியால் அவதிப் படுகிறேனே! என் தவறுகளை மன்னித்து எனக்கு விடுதலை கொடுமய்யா” என்று சிலுவையில் தொங்கிய இயேசுவை மனக் கண் முன் கொண்டு வந்து செபிக்க ஆரம்பித்தபோது
“சில்வியா…. குளுக்கோஸ் தீர்ந்து விட்டது. கொஞ்சம் எழும்பி இருந்தீர்கள். எனில் எல்லாவற்றையும் எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்றார் நர்ஸ் ரோசம்மா.
எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் இநந்த ரோசம்மாவிடம் எப்படி முடிகிறது என்று கேட்க வேண்டும்.
உள்ளே வந்த சில்சியாவின் அம்மா “எப்படி இருக்கிறது சில்வியா, மாப்பிள்ளை குவைத்திலிரந்து போன் பண்ணினார். நாளைக்கு காலையிலே கிளம்புகிறாராம். காபி குடிக்கிறாயா”? என்றவாறு பிளாஸ்கை திறந்தாள்.
“நான் ஆஸ்பத்திரியிலே இருக்கிறதை சொன்னியளாம்மா” சில்வியா கேட்டாள். “இல்லடி. எப்படிச் சொல்றது. நீ தோழி வீட்டிற்கு போயிருப்பதாகச் சொன்னேன். உன் மொபைலில் டவர் கிடைக்கவில்லை என்று சொல்லி வைத்திருக்கிறேன்” டீயைக் கொடுத்தாள் அம்மா. “சே! எவ்வளவு ஆசையாக ஊருக்கு வருகிறார். நான் இப்படி மருத்துவமனையில் ஆண்டவர் ஏன் இப்படி பண்ணுகிறார்?” என்று சலித்துக் கொண்டே டீயைக் குடித்தாள்.
மறுநாள் காலை சில்வியாவின் அம்மா முற்றம் தூத்துக் கொண்டிருந்த போது ஆட்டோவிலிருந்து இறங்கினாள் சில்வியா.
ஆச்சரியமாக “இப்போ எப்படிம்மா இருக்கு. தலை வலி போயிடுச்சா. நீ படுக்கையை விட்டு அசையக் கூடாதென்று டாக்டர் சொன்னாரே. நீ…. இப்படி…. ஒரு போன் போட்டிருந்தால் தம்பி ராபர்ட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருப்பேனே… என்றாள் அம்மா.
“நான் இரவு முழுவதும் பிறக்கப் போகும் இயேசு பிரானை வேண்டினேன. கர்த்தர் என் செபம் கேட்டார். நான் போய் வீட்டிலே கர்த்தர் குடில் கட்ட வேண்டும் அவர் குவைத்திலிருந்தே குடிலுக்கான எல்லா சொரூபமும் வாங்கி வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
“காருக்குச் சொல்லி விடுங்கள். மத்தியானம் ஏர்போட்டுக்குப் போக வேண்டும்” என்று அவசரமாகச் சொல்லி விட்டு நடந்த சில்வியாவைப் பார்த்து மிகழ்ச்சியடைந்தவாறு இறைவனுக்கு நன்றி சொன்ன அம்மா கிஜீஸ்மஸ் தயாரிப்புகளில் இறங்கினாள்.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
