ஊன்றுகோல்
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 131

வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பினார் கோபால். அவரது முகம் வாட்டமாயிருந்தது. மனைவி கமலாவைப் பார்த்தவுடன் சோகமாக “கமலா என்னோடு வேலை செய்த துணையாளன் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்ட்டாம்மா. இரண்டு நாளா வேலைக்கே வரல. அப்புறமா கணக்குப் புத்தகங்களைப் பார்க்கும்போதுதான் அவன் செய்த துரோகமும் பணமோசடியும்; தெரிய வந்தது. . அதைப் பார்த்ததும் மனசே ஆடிப்போனது. அவனை முழுசா நம்பி நான் மோசம் போய் விட்டேன்மா. இனிமேல் என்ன செய்யப் போகிறேன் என்பதே எனக்குப் பெரியக் கவலையாக இருக்கின்றது” என்றுச் சொல்லும்போதே அவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
அதைக் கேட்ட கமலா …சரி சரி…இருக்கட்டும். மொதல்ல உட்காருங்க. காபி போட்டுக் கொண்டு வருகிறேன் அப்புறம் பேசலாம் என்றுக் கூறிக் கொண்டே அடுப்படிக்குச் சென்று காபி போட்டு எடுத்து வந்துக் கொடுத்தாள். காபி குடிக்கும்போது கோபால் கமலாவைப் பார்த்தார். அவள் முகத்தில் எந்தவித கவலையும் தெரியவில்லை. ஆனால் கவலைக்குப் பதில் ஒரு தெளிவு தெரிந்தது.
கல்லூரிக்குச் சென்ற பிள்ளைகள் வீடு திரும்பி இரவு உணவிற்காக அனைவரும் ஒன்று கூடினர். உணவைப் பார்த்து எல்லோரும் மலைத்துப் போயினர். அவர்கள் கண்களை அவர்களால் நம்பவே முடியவில்லை. அருமையாக சமைத்த உணவை கமலா எல்லோருக்கும் பரிமாறினாள்.
கோபாலுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவர்; என்ன இதெல்லாம் என்று இணையிடம் ஆச்சரியமாகக் கேட்டார். இது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்லவா. இந்த இன்பமான நிகழ்வுக்காக எத்தனை நாட்கள் நான் காத்திருங்தேன்; தெரியுமா? என்றாள். உங்களுக்கென்ன. இயந்திரம்போல வேலை வேலைன்னு போயிட்டு வந்தீங்க. நீங்க வேலை போய் இரவு வருவதற்குள் பிள்ளைகள் தூங்கி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் சாப்பிடும் போதும் அப்பா இன்னும் வரலையாம்மா என்று ஏக்கத்தோடு கேட்டுச் சாப்பிடுவதும் பிறகு அப்பாவைப் பார்க்க முடியவில்லையே என்று வருத்தத்தோடு படுக்கச் செல்வதும் வாடிக்கையாக இருந்தது. அப்போதெல்லாம் நான் எவ்வளவு வேதனையடைந்தேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் என்றாள் கமலா.
ஒரு கதவு மூடினால் ஒரு கதவு திறக்கும் என்றுச் சொல்வது போல ஒரு இழப்பு வந்தால் அது நமக்குள் ஒரு மாற்றத்தைக் கட்டாயம் கொண்டுவரும் என்பதை நம்புகிறவள் நான். இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுபோல உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு நன்மைக்கே என்று நினைத்துப் பழக வேண்டும். என்ன நேர்ந்தாலும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு தெம்பாக இருப்போம் என்றாள் நிதானமாக.
அப்புறம் சொல்ல மறந்து விட்டேன். இன்று ஒரு வேலைக்காக நேர்முகத் தேர்வுக்காகப் போன என்னை வேலைக்குத் தேர்வு செய்துள்ளார்கள். நாளையிலிருந்து நான் வேலைக்குப் போகப் போகிறேன் வீட்டைப் பற்றியோ எப்படி மனைவி மக்களைக் காப்பாற்றப் போகிறேன் என்ற கவலையோ உங்களுக்கு இனி வேண்டாம். நீங்கள் கவலையின்றி அந்த நினைப்பிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருங்கள் என்று சொன்னதும் கோபாலின் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. வாழ நினைத்தால் வாழ்வாய். வதங்கிப் போனால் வீழ்வாய்; என்பது கோபாலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.
ஒவ்வொரு குடுப்பத்திலும் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் ஊன்றுகோல் தான். ஒருவருக்குத் துன்பம் வரும்போது துன்பத்திலேயே துவண்டு விடாமல் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்து வாழும் போது அதன் பலன் மிகுதியாக கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
| நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கருணைக் கொலை
சூசை எட்வேட்
July 11, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
July 11, 2026
புனிதமெனும் பொய்!
மா.சித்திவினாயகம்
July 11, 2026