கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 10, 2026
பார்வையிட்டோர்: 28 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

சென்னை மாநகரின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் கூட்ட அறை .

மாலை நேரம் . முக்கியமான கூட்டம் . அந்த நிறுவனத்தின் சேர்மன் ராஜேஷ் அன்று வரவில்லை.

ஜிஎம் அட்மின் வாசுதேவன் பேசுகிறார் –

“நமது சேர்மன் ராஜேஷ் சார் வரவில்லை . அவருக்கு உடல்நிலை சரியில்லை . அவருடைய ட்வின் பரதர் ராகேஷ் உங்களிடையே பேசுவார் “

அமர்ந்திருக்கும் டைரக்ட்டர்களிடையே முணுமுணுப்புகள்

ராகேஷ் பேசினான் –

“இவனுக்கும் கம்பெனிக்கும் என்ன சம்பந்தம்ன்னு யோசிக்காதீங்க..கம்பெனி டாகுமென்ட்ஸ் நல்லா பாருங்க… ராஜேஷ் சேர்மன் …நான் வைஸ் சேர்மன் …. “

குரல் – ‘இவன் என்ன குரங்குத்தனம் பண்ண போறானோ ‘

ராஜேஷ் – “ஏன் முனகறீங்க… தைரியமா எழுந்து நின்னு பேசுங்களேன்… இந்த டைரக்ட்டர்ஸ் மீட்டிங்ல நான் ஒரு முக்கியமான ஒரு அனௌன்ஸ்மென்ட் சொல்லப் போறேன்… அதாவது… அட்மின் ஸ்டாப்லேந்து பேக்ட்டரி ஸ்டாப் வரைக்கும் எல்லாருக்கும் நம்ம இலாபத்துல ஒரு பங்கு இந்த நிதி ஆண்டுலேந்து கொடுக்கப் போறோம்… “

குரல் – ‘மிஸ்டர் ராகேஷ் நிதானத்துல தான் பேசறீங்களா? டிவிடென்ட் ங்கறது ஷேர்ஹோல்டர்ஸ்க்கு தான் கொடுக்க முடியும்… ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் , ஊக்கத் தொகை இப்படித்தான் கொடுக்க முடியும்… நீங்க சொல்றது எல்டொரடா… பகற் கனவு…’

ராகேஷ் – “ ஆராய்ஞ்சு பார்க்காம நான் பேசுவேனா ? டைரக்ட்டர்ஸ் மீட்டிங் ல பேசிகிட்டு இருக்கிற விசி ய பார்த்து நிதானத்துல இருக்கிறீ்ங்களா ன்னு வார்த்தையை விடலாமா ? வர்ற ஏஜிஎம் மீட்டிங் ல இதற்கான தீர்மானத்தை நாம முன் வைப்போம். கம்பெனி பார்க்கிற இலாபத்துல குறிப்பிட்ட தொகை நம்ம கிட்ட இருக்கிற நிரந்தர ஊழியர்களுக்கு போவதற்கு வழி செய்வோம்… என்ன நீங்க எல்லாம் வெளியேற போறீங்களா … ஒங்களுக்கு ஏன் கஷ்டம்…

நீங்க குளுகுளு அறையில இருங்க.. நானே வெளியே போயிடறேன். ஆனா நான் முன் வைச்ச திட்டத்தை கண்டிப்பா நிறைவேத்தி காட்டுவேன் …. “

ராகேஷ் , விடுவிடுவென அந்த கூட்ட அறையை விட்டு வெளியேறினான்.

– ட்வின்ஸ் கதைகள், இரண்டாம் பகுதி.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *