அழகிருக்குது உலகிலே ஆசையிருக்குது மனசிலே!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 6, 2024
பார்வையிட்டோர்: 5,774 
 
 

காலங்காத்தால கண்ணதாசனையா நொந்துக்க முடியும்?! அவனவன் தலைஎழுத்து என்ன பண்றது?! வாழ்க்கை சிலருக்குச் சந்தோஶத்தையும் சிலருக்குச் சங்கடத்தையும் தொடர்ந்து சந்திக்க வைக்குது. இது, வாழ்க்கையோட தப்பில்லை.. வாழறதுல தப்புன்னு கடைசிவரை புரியவே மாட்டேங்குது!

அவளைச் சந்தித்த போது பளிச்சுன்னு ஒரு மின்னல்…!’ ‘அம்மோவ்! கண்ணே போயிடும்போல இருந்துச்சு! பட்டுன்னு காதுல ஒலிச்சது கண்ணதாசன் பாட்டுத்தான்.

‘அழகிருக்குது உலகிலே! ஆசை இருக்குது மனசிலே..! அனுபவிச்சா என்னடா தம்பி.. அனுபவிப்போம்!’

‘சே! அது ரொம்பத் தப்பு தம்பி!’ பள்ளி வாத்தியாருக கத்துக் கொடுத்தது பாடமா ஒலிக்க, அடக்கி வைக்க, ஆசைக்கு அணை போட்டது இன்னமும் நியாபகம் இருக்கு!

இப்படி வாத்தியாருக பாடத்துக்கு மனசை அடக்கி அடக்கியே வயசாகிப் போனதுதான் மிச்சம்! அவனவன் நியாய அநியாயத்தைத் தூக்கி எறிஞ்சுட்டு நிதர்சன வாழ்வை நிம்மதியா அனுபவிக்கறான்.

அவளிடம் சொல்லலாமா? கூடாதா? அதுஒரு ரெண்டுங்க்கெட்டான் வய்சில்லை!.. ரெண்டு மடங்கு கெட்ட வயசு! சொல்லி வைப்போமே! ‘பார்வையைப் பார்த்து வைப்போமா? கேள்வியைக் கேட்டுவைப்போமான்னு’ முடிவு பண்ணி அவள் புன்னகைக்கும் பொழுதில் ‘ஐ லைக் யூ! என்று ஒன்றைவரியைச் சொல்வதற்குள் ஒண்ணுக்கே வந்துடுச்சு! அதுவும் அவள். ‘என்னை பத்தி என்ன நெனைக்கிறே?’ன்னு புன்னகையோடு கேட்டு… தூண்டிவிட்ட பிறகு உசித்த துணிச்சலின் வெளிப்பாடுதான்.

நான் சொன்னதை அவள் பெரிதாய் எடுத்துக் கொள்லவில்லை. ஒற்றைவரியில் ஒரு பதில் சொன்னாள் பாருங்க! அதுதான் உங்க எல்லாருக்குமான உச்சகட்ட பாடம்! அதுதான் கதை!

‘ஐ லைக் யூன்னு சொன்ன வாயால ‘ஐ லவ் யூன்னு சொல்லீடக்கூடாது!’ன்னு ஒரு அணை கட்டினாள்! நாம்தான் ரொம்ப யோக்கிமாச்சே! வாயைக் கண்ணை மனசை மூடி ஆசையை மறைச்சோம்…மறந்தோம்..! முதல் காதல் முப்பது வயசானாலும் முட்டிட்டு நிக்கும்தானே?!.

அனுபவிராஜா அனுபவி அதே நாகேஷ் தான் சர்வர்சுந்தர நாயகி ‘ஐ லைக் யுவர் இன்னசென்ஸ்னு’ சொன்னதைக் ‘காதல்’னு நெனைச்சு ஏமாந்தார். லைக்குக்கும், லவ்வுக்கும் வார்த்தைலதான் வித்யாசமிருக்குன்னு எந்த வாத்தியும் ஏன் சொல்லித் தரலையோ தெரியலை!. அவள் அழகுகுத் தகுந்த வாழ்க்கை அவளுக்கு அமைஞ்சது. நம்ம அறிவீனத்து அடி நமக்கு வாழ்க்கையா விழுந்தது!

வாழ்க்கை யாருக்கும் துரோகம் பண்றதில்லை…! அது கத்துக் கொசுப்பதைத்தான் நாம் சரியாப் புரிஞ்ச்சுக்கறதில்லே! மின்னல் வந்த போதே எச்சரிக்கையாயிருக்க வேண்டாம் அடுத்து இடி இறங்கும்னு?!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *