பா.ராமானுஜம்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்:
 
 

டிசம்பர் 2022க்குப்பிறகு சிறுகதைகள்.காம் தளத்தை இப்போதுதான் பார்வையிடுகிறேன். சிறப்பான மாற்றங்களைக் காண்கிறேன். வாழ்த்துகள்! என் கதைகளில் பெரும்பாலானவை தங்கள் இணையதளத்தில் ஒரே இடத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு மறுபிரசுரம் செய்யப்பட்டு இருப்பதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில கதைகள் 1989-1990ல் கணையாழி சிற்றிதழில் பிரசுரம் ஆனவை. பெரும்பாலான கதைகள் 2020-22 காலங்களில் சொல்வனம், திண்ணை போன்ற இணைய இதழ்களில் பிரசுரம் ஆனவை. ஒரு கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சாஹித்ய அகாடமியால் வெளியிடப்பட்டது. இவை எல்லாவற்றையும் சிறுகதைகள் தளத்தில் மறுபதிப்பு செய்து வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி. இன்னொரு மகிழ்ச்சி தரும் விஷயம் நீங்கள் வடிவமைத்திருக்கும் முறை – design features. மேலும், கதைப்பதிவு நாள், பார்வையிட்டோர் மதிப்பீடு, ஒப்புகை, அச்சிடவும் மற்றும் கையடக்க ஆவண வடிவமைப்பில் பதிவிறக்கவும் வசதி இவை அனைத்தும் கவனமாகச் செய்யப்பட்டு இணையதளத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.மீண்டும் வாழ்த்துகளும் நன்றிகளும்!

பா.ராமானுஜம்