கதையாசிரியர் தொகுப்பு: ஷங்கர்பாபு

7 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளை யானை வெளியேறுகிறது

 

 ‘கடவுளே காப்பாத்து’னு ராதாரவி அலர்றாரு. உடனே பிசாசு ஜன்னல் வழியே வந்து ஹீரோவைக் காப்பாத்துது. கூப்பிட்டது கடவுளை… வந்தது பிசாசு!’ – இப்படித்தானா என சரியாக நினைவில்லை. இதுமாதிரி ஒரு கமென்ட்டைத் தட்டிவிட்டதாகவும் லைக்குகள் குவிந்ததாகவும் தாமரைக்கண்ணன் என்னிடம் சொன்னது நினைவில் இருந்தது. கூடவே, ”படிக்கிற காலத்துல புக்கும் கையுமா இருந்தாக்கூட, தலையெழுத்து வெளங்கியிருக்கும். இப்ப எப்பப் பார்த்தாலும் அதென்ன ஃபேஸ்புக்கு..?” என்ற தாமரையின் அம்மாவின் (எனக்கு பெரியம்மா முறை) புலம்பலும் இன்னும் நினைவில் இருந்தது. ”நீயாவது


மாரியப்பன் சிரித்தார்

 

 இன்று… மாரியப்பன் என்னைப் பார்க்க வந்திருக்கும் தகவல் என்னிடம் சொல்லப்பட்டது. அவர் எதற்காக வந்திருக்கக்கூடும்? ஒரு எஸ்.எம்.எஸ்ஸின் வருகைபோல மூளைக்குள் திடீர் வெளிச்சம். அடக் கடவுளே… அந்த விஷயத்தை அப்போதே முடித்திருக்கலாமே… நான் பெரிதும் கலவரம் அடைந்தேன். செய்தியைச் சொன்ன ஊழியன் ரவி கூட எனது அவஸ்தையை உள்ளூர ரசிப்பதாகவே எனக்குப்பட்டது. அவன் ஓர் ஆறுதல் புன்னகை சிந்தினாலும்கூட, அதற்குப் பின்னால் ‘நல்லா மாட்டிக்கிட்டீங்களா?’ என்ற வார்த்தைகள் ஒளிந்திருப்பதாகவே தோன்றின. ”வரச் சொல்லுங்க…” என்றபோது எனது குரலின்


சவீதாவும் அவளது இரு அக்காக்களும்

 

 “அந்த அளவு திறமை உள்ள மாணவர் நம் செயராமன். இன்னும் சிறிது முயன்றால், மாநில அளவில் ஏதேனும் ரேங்க் பெற வாய்ப்பு இருப்பதாக நானும் சக ஆசிரியர்களும் பேசிக்கொண்டோம். படிப்பில் மட்டுமின்றி; ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியவர் செயராமன். அவரது அகால மரணம்…” – தலைமை ஆசிரியர் உருகிக்கொண்டு இருந்தார். சில மாணவ-மாணவியர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர். ‘ஒரு கணித மேதையை, கம்ப்யூட் டர் நிபுணரை, ஐ.ஏ.எஸ். அதிகாரியை நாடு இழந்துவிட்டது. இப்போது நாம் கண் மூடி, அவருடைய


கனவுகளின் மதிப்பெண்

 

 இப்போது எல்லாம் இது மாதிரி ஓடுகள் உள்ள கூரையைப் பார்க்க முடியாது. வெள்ளைக்காரன் இந்தியா வுக்கு டாட்டா சொல்லும் முன், கட்டி விட்டுப்போன கட்டடம். அதன் பெரிய சிமென்ட் தூண்களும் மர உத்தரங்களும் தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். அருகில் மரங் கள், புல்வெளிகள், மைதானம். மழை பெய்கிற தினங்களில் இவற்றின் ஒட்டு மொத்தக் காட்சி பன் மடங்கு அழகாகி விடும். இன்றும் அப்படி ஒரு தினம். லேசான சாரல். மெலிதான குளிர். இந்தச் சூழலில்


பெருங்கடை

 

 அந்தப் பிரமாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் என் சிறிய குடும்பம் நுழைந்தது. நான், என் மனைவி துர்கா, எட்டு வயது மகன் ஆகாஷ். எங்கள் ஊரின் மையப் பகுதியில் இந்த ஆள் விழுங்கிக் கட்டடம், பல மாதங்களாகவே கட்டப்பட்டுக்கொண்டு இருந்தது. இதோ திறப்பு விழா… நாளை திறக்கப்போகிறார்கள்… என்று பேச்சுகளும் அவ்வப்போது கிளம்பி மறைய, இதோ 10 நாட்களுக்கு முன்னால் ஒரு பிரமுகர், (அவருடைய கரங்கள் சாதாரண கரங்கள் அல்ல!) பொற்கரங்களால் திறந்துவைத்தார். ”ஷாப்பிங் மால் எல்லாம் சென்னை,


‘செல்’லாதவன்

 

 நடிகர் மாதவனை எனக்குப் பிடிக்காது. அந்த அலட்சிய வார்த்தைகளும் முகபாவமும்! இத்தனைக்கும் என் தோழிகளை ‘அலைபாயுதே’ மாதவன் மடக்கிவிட்டதைப் புரிந்துகொண்டு ‘நானும் மேடி மாதிரி இருக்கேனா?” என்று மீசையை எடுத்திருக்கிறேன். ‘அன்பே சிவம்’ கமலின் கன்னத்தில் அறைந்த மாதவனைக் கோபித்துக்கொண்ட என் நண்பன் தாஸிடம் ”மாதவன் என்னப்பா செய்வாரு, அவர் கேரக்டர் அப்படி…” என்று மாதவனுக்காகப் பரிந்து பேசியிருக்கிறேன். இப்போதுதான் நிலைமை மாறிவிட்டது. மாதவன் மட்டும் என்றாவது ஜெராக்ஸ் எடுக்கவோ, ஸ்பைரல் பைண்டிங் செய்யவோ, லேமினேஷன் பண்ணவோ


‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’

 

 ‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’ நந்தகுமாரை ஏதாவது பத்திரிகையிலிருந்து அந்தரங்க சர்வேக்காக அணுகலாம். முதல் அனுபவம் எந்த வயதில் கிடைத்தது? சிநேகிதிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்களா? இதுவரை எத்தனை பேருடன் நெருக்கம்? போன்ற கேள்விகளுக்கு அவனால் ஆராய்ச்சியாளர்களைத் திடுக்கிடவைக்க முடியும். ‘‘இன்பம், பரவசம், சந்தோஷம்… இந்த வார்த்தைகளுக்கெல்லாம் உதாரணம் காட்ட கடவுள் கஷ்டமே படலை. ஃபிகர்களைப் படைச்சுட்டு ஒதுங்கிட்டான். ஹார்மோன்கள் தங்கள் கடமையைச் செய்யும் போது தடுக்கிறதுக்கு நாம யாருடா?’’ என்பான். அப்படிப்பட்ட நந்து என்னிடம் அந்தரங்கமாகப் பேசியதில் அதிர்ச்சியடைந்