கதையாசிரியர் தொகுப்பு: வில்லவன்கோதை

1 கதை கிடைத்துள்ளன.

உறு மீன் வரும்வரை…

 

 விடியற்காலை நான்கு மணியிருக்கும் ! இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று இளைப்பாறிய சதர்ன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நெடுங்காடு ரயில் நிலையத்தை விட்டு தெற்கு நோக்கி தன் பயணத்தை துவக்கியது. அந்த அதிகாலை நேரத்தில் அது எழுப்பிய பார்…..ம் என்ற பிசிரடிக்கும் பேரொலி அந்த மலைப்பிராந்தியம் முழுதும் எதிரொலித்து பெருவாரியான உயிரினங்களின் உறக்கத்தை தொலைத்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்த பெட்டிகளில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருந்து குறைந்தபட்ச சுமைகளுடன் குதித்து இறங்கினான் கௌதம்.. வண்டியிலிருந்து