கதையாசிரியர் தொகுப்பு: மாலினி அரவிந்தன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

முடி துறந்த கதை

 

 அவள் அழகாக இருந்தாள், நீண்ட முடிமட்டுமல்ல, அவளது முகத்திலும் ஒருவித வசீகரம் இருந்தது. தலைமுடிக்குப் பூசும் நிறமைகளைத் தயாரிக்கும் பிரபல கம்பெனி ஒன்று மொடல்கள்; தேவை என்று விளம்பரப்படுத்தி இருந்தனர். அவள் அதற்கு விண்ணப்பித்திருந்தாள். நேர்முகப் பரீட்சையில் அவளைத் தங்கள் மொடல்களில் ஒருத்தியாக அவளைத் தெரிந்தெடுத்திருந்தனர். போட்டோ சூட்டில் பலவிதமான படங்களை எடுத்து அதில் சிறந்ததொன்றைத் தெரிவு செய்து அவளது படத்தைப் பெரிதாகப் பல இடங்களிலும் விளம்பரப் படுத்தி இருந்தார்கள். தலை முடிக்குப் பூசும் கறுப்பு நிறமையுக்கான


எனக்கொரு சினேகிதி

 

 நான் படித்த பெண்கள் பாடசாலையின் பழைய மாணவர் சங்க கனடா கிளையில் இருந்து வருடாந்த இராப்போசன விருந்திற்கு வரும்படி அதன் தலைவி என்னையும் அழைத்திருந்தார். ஒவ்வொரு முறையும் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பித்துக் கொள்வேன். இந்தமுறை அப்படித் தப்பித்துக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் எனது சினேகிதி சியாமளாவும் லண்டனில் இருந்து வந்து இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளப் போவதாக எனக்குக் கிடைத்த செய்தியேதான். அதனால்தான் கட்டாயமாக போகவேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தேன். சியாமளா! அவள்


விலங்கு

 

 அலாரம் ஒருமுறை அடித்து ஓய்ந்து போயிருந்தது. காலையில் எழும்பி வீட்டு வேலைகள் செய்ய மனம் இல்லாதவளாக கட்டிலில் பிரண்டு கொண்டு இருந்த தமயந்தி, மெல்ல அயர்ந்து கொண்டு போனபோது திரும்பவும் அலாரம் சிணுங்கியது. திடுக்கிட்டு விழித்தவள் கைகளை நீட்டி அலாரத்தின் தலையில் ‘பேசாமலிரு’ என்று செல்லமாய் ஒரு தட்டுத்தட்ட அது வாயடைத்துப்போய் நின்றது. ராமைப்போலத்தான் அவன் வாங்கி வந்த இந்த அலாரமும். கட்டிலைவிட்டு எழும்பும்வரையும் அவளை நச்சரித்துக் கொண்டே இருக்கும். தூக்கம்வராத இரவுகளில் அதன் டிக்.. டிக்..


பறவைகள்

 

 அந்த ஏரி பனியால் மூடியிருந்தது. மாலதியும் ஹரியும் தமது நண்பர்களுடன் பனியில் சறுக்கி விளையாடுவதற்காக ஏரிக்கரைக்கு வந்திருந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் ஹரியோடு கைகோத்து இந்த ஏரிக்கரை நீரில் கால் நனைய நடந்த ஞாபகம் அவளுக்கு வந்தது. இன்று நீரை மூடிப் படர்ந்திருக்கும் பனியைப் பார்க்க, எவ்வளவு வேகமாக இந்த மண்ணில் எல்லாம் மூடிமறைக்கப் பட்டுவிடுகின்றன என்பதை நினைக்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பறவைகளின் கூக்குரல் கேட்டு அண்ணார்ந்து பார்த்தாள். வெள்ளை நிற சீ-ஹல் பறவைகள்


மௌனமே பேசு..!

 

 யன்னல் காட்சிகள் ரசிப்பதற்கு மிகவும் அழகானவை என்பதை எங்க புதிய வீட்டு யன்னலை முதல் நாள் திறந்து பார்த்த போதுதான் எனக்குத் தெரிந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இயற்கையை தினமும் ரசிக்க வேண்டும் என்றால், யன்னல்கள் காட்சிகள் அற்புதமானவை. வெளி உலகைப் பார்ப்பதற்கு எப்பொழுதும், முக்கியமாக எங்களைப் போன்ற பெண்களுக்கு உதவியாக இந்த யன்னல்கள்தான் இருந்திருக்கின்றன. பள்ளிப்படிப்பு காரணமாக பள்ளிக்குக் கிட்டவாக புதிதாக ஒரு காணி வாங்கி ஆசையாசையாய் நாங்கள் ஒரு கல்வீடு கட்டிக் குடிபுகுந்தோம்.