கதையாசிரியர் தொகுப்பு: மஹாத்மன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்

 

 இரண்டாம் சுருள்: பதினெட்டாம் வயது. கடந்த ஆறு வருட கடுமையான முயற்சிக்குப் பின் அம்மாவால் எழுதவும் சரளமாகப் படிக்கவும் முடிந்தது. தனது வாசிப்பை அம்புலி மாமாவில் ஆரம்பித்து ராணிமுத்து, கல்கண்டில் நிறுத்திக் கொண்டவர். எப்படி முயன்றும் ‘ஹலோ’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தாண்டி முன்னேற அவரால் முடியாமற் போயிற்று. “போனால் போகட்டும், சனியன். மலாய் சொல்லிக் கொடு” என்று சொல்லி அம்மொழியில் தன் பெயரை மட்டும் எழுதக் கற்று; பேசுவதோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்தோனிசியர்கள் தோட்டத்திற்குள்


மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்

 

 என்னை அழைத்துக் கொண்டுச் செல்லும் இரண்டு தூதர்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாம் எனத்தோன்றியது. பரத்திலிருந்து வந்த வாகனத்தில் வாகாக உட்கார்ந்து ஒருமித்துப் பயணிக்கும் இச்சமயத்தில் கேட்பது இங்கிதமில்லைதான் ஆனாலும் கேட்க வேண்டிய அவசரமும் அவசியமும் உணர்ந்ததால் கேட்டே விட்டேன். “தீய மனச் செயல்பாடுகளை எவ்வாறு எழுதுவீர்?” இருவரிடமிருந்தும் பதிலில்லை. எனக்கு முக்கியமெனப்படும் கேள்வி அவர்களுக்கு முக்கிய மில்லாத வொன்றாக இருக்கக் கூடும். கருமமே கண்ணாயிருப்பதுபோல பிடித்தப் பிடியை விடாமலும் நோக்கியப் பார்வையை அகற்றாமலும் தங்கள் இலக்கை அடையும்


கடவுள் கொல்லப் பார்த்தார்

 

 “நான் இங்கே இருக்கிறேன்” என்றேன். எந்தவொரு ஒளிவு மறைவுமில்லை. பிறந்த மேனி. என்னைப் போல பேரியற்கையும் நிர்வாணம். இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும். துணிந்துவிட்டேன். சுற்றிலும் சுடுமணல். அனல்காற்று. யாரோ கூப்பிட்டதைப்போல அவசரமாய் போய்க்கொண்டிருந்தன வெண்மேகங்கள். எனக்குள் கட்டுக்கடங்காத சீற்றம். இறங்க வேண்டிய மேகம் இறங்காமல் போகிறது. என்ன எகத்தாளம் ? மனம் பெருங்குரலெடுத்துப் பேசியது. “இதோ, மனிதனே இல்லாத இடம் பார்த்து வந்திருக்கிறேன். படைப்பு நான். படைத்தவர் நீர். இங்கு வந்தே ஆக வேண்டும். சாக்குப்


பரதேசி நடையும் அந்த அலறலும்

 

 நடப்பது சுகமாய் இருந்தது. வெய்யிலின் உக்கரம், வியர்வை நாற்றம், மழையின் சகதி, கால் நோவு, அசதி- இதைத் தவிர வேறொன்றுக்கும் கவலைப்படும்படி இல்லாதிருந்தேன். என் ஆவி, ஆத்மா, சரீரத்தை பயப்படும்படி செய்வது ஒன்றே ஒன்றுதான். அவள். அவளின் அந்த அலறல். பேருந்திலும் இரயிலிலும் என் முன்னாள் உட்கார்ந்திருப்பவளை அல்லது நின்றுக் கொண்டிருப்பவளை ஒரு நிமிடம் போல பார்த்துக் கொண்டிருந்தால் அவளாகிறாள். கழுத்து நரம்புகள் தெரிய அலறுகிறாள். உடனே அவ்விடத்தை விட்டு நான் காணாமல் போக நேர்கிறது. கருவிழிகள்