கதையாசிரியர் தொகுப்பு: பி.விமல் ராஜ்

6 கதைகள் கிடைத்துள்ளன.

நானும் தண்டம் தான்!

 

 அந்த காலை நேரத்தில் வழக்கம் போல G70 பஸ் கூட்டமாக தான் இருந்தது. விஜய்க்கு பஸ்சில் போவதே கடுப்பு; அதுவும் கூட்டமாக இருக்கிறது என்றால் இன்னும் கடுப்பு தான். தன் அம்மா வள்ளியை முன்னால் எற சொல்லிவிட்டு, அவள் உள்ளே முண்டியடித்து போகும் வரை பார்த்துவிட்டு, இவனும் பின்புற வழியாக ஏறி கொண்டான். உள்ளே போக இடமில்லை. நான்கு பேரோடு ஐந்தாவது ஆளாய் கடைசி படிக்கட்டில் தொத்தி கொண்டான். “ரெண்டு வடபழனி..” என பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லி


கனவு கலைந்தது

 

 காலை ஆறு மணி. அலாரம் அடித்தவுடன் அஜயின் தூக்கம் லேசாக கலைந்தது. வீட்டு கூடத்தில் அவன் அம்மாவும், அப்பாவும் எதோ பேசி கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது. “தஞ்சாவூரிலிருந்து வந்த ஜாதகம் நம்ம அஜய்க்கு பொருந்தியிருக்கு. பொண்ணு படிச்சிருக்கு, நல்ல வேலை. எங்க அண்ணனும் நேர்ல போய் பேசிட்டு வந்துட்டார். பொண்ணு வீட்ல சரின்னா அடுத்தடுத்த மாசத்திலேயே கல்யாணத்த வச்சிடலாம்.” – அவன் அப்பா. “ஹ்ம்ம்… நல்ல படியா முடிஞ்சா சரிதான்.. “, அம்மா. அரை தூக்கத்தில்


கடற்கரை கோவில்

 

 “பசங்களா! ரெண்டு பெரும் ரெடியா? கிளம்பலாமா?” என்று கேட்டார் தாத்தா. “நாங்க ரெடி ! அப்பவே கிளம்பிட்டோம்.. ” “வாங்க போகலாம்.. ” “ரவி, ராஜு… ரெண்டு பேரும் இங்க பாருங்க.. தாத்தா கிட்ட சாப்பிட அது வேணும் , இது வேணும்னு அடம் பிடிக்கக் கூடாது.. இங்கே வீட்ல நிறைய ஸ்நாக்ஸ் இருக்கு… சமத்தா போயிட்டு, சமத்தா வரணும்.. சரியா ??”- அம்மா. “ஒ.கே. மம்மி !! ….” “சரிப்பா..போயிட்டு இருட்டுறதுகுள்ள சீக்கிரம் வந்துடுங்க ”


தண்ணீர் சிறுவன்

 

 அந்தி சாயும் வேளையில், அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வெள்ளை அரண்மனை போல தோற்றமுள்ள அந்த கட்டிடத்தின் பின்புறத்தில், பெரிய மைதானத்தில் அலங்கார மேடை போடப்பட்டிருந்தது. வளாக நுழைவு வாயில் முதல் மேடை வரை மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வளைவுகள், தோரணங்கள், வசதியான நாற்காலிகள், வி.ஐ.பி. சீட்கள் என ஆடம்பரமாக இருந்தது. மேடையின் மீது நான்கைந்து குஷன் நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டு, அதற்கு முன் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலும், சில காகிதங்களும், டீப்பாயின் மீது வைக்கபட்டிருந்தது.


நட்சத்திரம்

 

 “ரொம்ப சந்தோஷம், ஆண்ட்டி… உங்க பொண்ணு வள்ளி-க்கு முதல் பிரசவத்திலேயே பையன் பொறந்துட்டான். புள்ள நல்லா கொழு கொழுன்னு இருக்கான். முதல்ல போய் சுத்தி போடுங்க…” “நிஜம் தான் சாந்தி.. பேரன் பிறந்தது சந்தோசம் தான் .. ” என்றாள் பார்வதி. “ஆங்..உங்க பேரனுக்கு பேரு வைச்சாச்சா ? என்ன நட்சத்திரம்? ” “ரோகிணி நட்சத்திரம்… பேரு விஜய் ஆனந்த் -னு வைச்சிருக்கோம்..” “… ரோகிணியா ??? பகவான் கண்ணன் நட்சத்திரம்.. இவனுக்கு தான் இரண்டு மாமன்களாச்சே


ரிஜிஸ்டர் நம்பர்

 

 “நான் போயிட்டு வரேன் மா…” எனக் கூறிவிட்டு காலேஜுக்கு புறப்பட்டான் விஜய். “ம்ம்.. ஐ.டி கார்டு, பர்ஸ், ரயில் பாஸு எல்லாம் எடுத்துகிட்டியா ???” – அவன் அம்மா. “ஆங்… ” ” சரி. பத்திரமா போயிட்டு வா..” கிளம்பும் முன் பாண்ட் உள் பக்கெட்டில், வீட்டில் டப்பாவிலிருந்து ‘சுட்ட’ நூறு ரூபாய் இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டான். மனதில் நமுட்டு சிரிப்புடன், சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். “ஒன்பதரைக்கு ஒரு ஷோ ; அதைவிட்டா ஒரு