கதையாசிரியர் தொகுப்பு: பாரதி கிருஷ்ணகுமார்

6 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாவும், அந்தோன் சேக்கவும்

 

 அம்மா ஒருமுறைகூட,தன் தேவைகளுக்காகப் பிறர் உதவியை நாடியது கிடையாது.அந்த ராத்திரியில்,குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு எழுப்பியது ஆச்சரியமாக இருந்து. “ரொம்பத் தொண்டையெல்லாங் காஞ்சு போச்சு..எந்திரிக்க முடியாம தாகம் அமுக்குது..தம்பீ..தண்ணீ கொண்டாடா… ” என்றாள். அவள் குரலில் மரணத்தின் நெடி ஏறி விட்டிருந்ததுது.எனக்குப் புலப்படவில்லை.இரவு ஒன்றரை மணியில் இருந்து,காலை ஐந்து மணிக்குள் நாலைந்து சொம்பு குடித்தும் தாகம் தீரவில்லை. உதடுகள் வறண்டு,பிளந்து கிடந்ததுது;துயரம் தருவதாக இருந்தது.நாக்கினால் இரண்டு உதடுகளையும் புரட்டிக்கொண்டே இருந்தாள்.ஐந்தரை மணிக்குக் கொஞ்சம் பால் கொடுத்தேன்.உறங்கப் போகுமுன்,எல்லா சமுத்திரங்களும்


அப்பாவின் வாசனை

 

 இன்று அதிகாலையில் நடந்ததை உங்களிடம் சொல்லுகிறேன். நம்புவது உங்கள் விருப்பம். நடக்காததைச் சொல்லி, ஆக வேண்டியது எதுவும் இல்லை. காசு, பணம், வீடு, நகை, நட்டு என்று எதற்கும் அப்பா குறைவைக்கவில்லை. அம்மாவும் அப்பாவும் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டதால், உறவுக்காரர்கள் என்று யாருமே வருவது இல்லை. அதை எப்போதுமே, ஒரு குறையாக உணர்ந்ததும் இல்லை. இன்றைக்கு நடந்ததை மட்டும் சொன்னால், உங்களுக்குப் புரியாதபடி நான் சொன்னேன் என்றாகிவிடும். அதனாலேயே இந்தச் சின்ன முன்னோட்டம்… அம்மா படுக்கையில் விழுந்து


கோடி

 

 எங்கும் மீன்கள் செத்துக்கிடக்க, வறண்டு கருத்த குளம் போலாகி இருந்தது அப்பாவின் முகம். முப்பது ஆண்டுகளாகக் கட்டிச் சுமந்து திரிந்த பொய் மூட்டை ஒன்று அவிழ்ந்து, வீடெங்கும் பொசுங்கிய ரோமத்தின் துர்நாற்றம், முற்றத்தில் நின்ற தூண்களைப்போல நிலைகொண்டு நின்றது. தரைக்குள் முகம் புதைத்துக்கொள்ளும் நெருப்புக் கோழிபோல, முகத்தைத் தொண்டைக்கும், மார்புக்கும் நடுவில் புதைத்துக்கொண்டார் தாத்தா. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, வீடு தேடி வந்திருந்த அத்தையையும் மாமாவையும், தாத்தாவும் அப்பாவும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தாத்தா உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு நேர்


அப்பத்தா

 

 உப்புக் காகிதத்தைக் கண்ணாடியில் அழுத்தித் தேய்க்கிற சத்தம் போல இருந்தது. நெஞ்சுக்குழிக்கும், தொண்டைக்குழிக்கும் இடையே உயிர் ஊசலாடியது. ஆறு நாளாக மல்லுக்கட்டுகிறது அப்பத்தா. காய்ச்சல், தலைவலி என்று ஒரு நாள் படுத்ததில்லை. அப்பத்தா படுத்தா, வைத்தியம் பார்க்கக் கடவுள் தான் வரணும் என்று தாத்தா சொன்னது சரியாகி விடும் போலிருக்கிறது. மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் எல்லோரும் கட்டிலைச் சுற்றி நின்றார்கள். பிள்ளைகளும், பேரன் பேத்திகளும் பால் ஊற்றினால், அடங்குமென்று ஊற்றச் சொன்னார்கள். பால் இறங்கிக் கொண்டே


தெய்வநாயகம் சார்

 

 அரசாங்க வேலை போல சீக்குப் பிடித்த வேலை உலகத்தில் இல்லை. மூணு ரூபா இங்க் பாட்டில் வாங்க ஏழு ரூபா பேப்பர் செலவாகும். ஆறுபேர் கையெழுத்துப் போட வேண்டும். ஐந்து பேர் முழுக் கையெழுத்துப் போடவேண்டியதில்லை. இனிஷியல் மாத்திரம் சின்னதாக மூட்டைப்பூச்சிமாதிரி வைக்கவேண்டும். பெரிய அதிகாரிகள் படித்தெல்லாம் பார்க்கமாட்டார்கள். மூட்டைபூச்சிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதாவென்று எண்ணிப்பார்ப்பார்கள். ஒன்று குறைந்தாலும், முழுக் கையெழுத்தும் போட்டுத் திருப்பி அனுப்பி விடுவார்கள். வேகமாகப் பைல் பார்க்கிறவர் என்கிற புகழும் அப்படி அதிகாரிகளுக்கு


லுங்கி

 

 அப்பாவுக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது. அதற்கு ராமரோ, பாபரோ காரணமல்ல. அப்பா புதிதாக வீடு கட்டுகிறபோது, தெருவை மறித்து, சாக்கடையை அடைத்து அட்டூழியங்கள் செய்தபோது, சித்திக் பாய் தான் அதைக் கண்டித்தார். வேறு யாராவது நியாயம் கேட்டிருந்தால், அப்பா மல்லுக்கு நிற்பார். அல்லது அப்போதைக்கு மௌனமாக இருந்து விட்டுப் பிற்பாடு தனது “ஆட்களிடம்“ சொல்லி நியாயம் கேட்ட ஆளை ஒரு வழி பண்ணி விடுவார். சித்திக் பாய் அப்படி ஏதுவும் செய்ய இயலாத தோற்றத்தில் இருந்தார். அவரது உடையும்,