கதையாசிரியர் தொகுப்பு: பரமு

3 கதைகள் கிடைத்துள்ளன.

காக்கி

 

 இது வரை இப்படி ஒரு இன்ஸ்பெக்டரை எங்கள் சி.ஐ.டி. காலனியும் அதைச் சுற்றி உள்ள ஏரியாக்களும் கண்டது இல்லை. தீனதயாள் வெறும் ஐந்தரை அடி உயரம்தான். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ சத்யராஜைக் கொஞ்சம் குள்ளமாக நேரில் பார்ப்பதுபோல இருப்பார். பதவி ஏற்றுக்கொண்ட ஒரு மாதத்துக்குள் மொத்த ஏரியாவையுமே தன் கஸ்டடிக்குள் கொண்டுவந்துவிட்டார். பசங்க கும்பலாக டீ குடிக்கக் கூடாது, தெருவில் கூட்டமாக நிற்கக் கூடாது, கோயில் திண்ணையில் கேரம் ஆடக் கூடாது, ஃபுட்போர்டு அடிக்கக் கூடாது, ஃபங்க்


பஞ்சவர்ணம்

 

 ”டேய், எங்க போற… எங்கடா போற… உன்னத் தான்டா…”- பஞ்சு அக்காவின் குரல் என்னை நிறுத்த, ”வேலைக்குப் போறேன்க்கா!” என்றேன். ”எனக்குப் பொடவ வாங்கித் தர்றியா? எந்தத் தூ… பையன்டா சிரிக்கிறது? எந் தம்பிகிட்ட நான் கேப்பேன்டா, உங்களுக்கின்னாடா? தொடப்பக்கட்ட பிஞ்சுடும்!” என யாருமே இல்லாத ரோட்டைப் பார்த்து, அசிங்கமாகத் திட்ட ஆரம்பித்தாள் பஞ்சு அக்கா. வாரத்தில் இரண்டு மூன்று முறை இப்படி நிகழும். நான் இதுவரையிலும் அக்காவுக்குத் துணி எதுவும் வாங்கிக் கொடுக்கவும் இல்லை… ‘ஏன்


கொட்டாய்

 

 ”யாரு மச்சி போட்ருப்பா?” ”எவனுக்குடா இவ்ளோ தில்லு ஊர்ல?” ”எவனோ இந்த எடத்த உஷார் பண்றான் மச்சான்.” ”கிரவுண்ட வுட்ட மாதிரி இத வுட்ரக் கூடாது.” ”யாருனு ஆளப் பாத்துகினு நைட் கொளுத்திரலாம் மச்சி”- பொது இடத்தில் இருந்த கொட்டாயைச் சுற்றி இளைஞர்களின் கோபக் குரல்கள். அரசாங்கத்தால்ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதா னத்தை, ‘ஏழைகளுக்கு இலவசக் கல்வி’ என்றுசொல்லி ஒருவன்ஆட்டையைப் போட்டான். விளையாட்டு மைதானம் இன்று மெட்ரிகுலேஷன் பள்ளி, லேடீஸ் ஹாஸ்டல் என இயங்கிக்கொண்டு இருக்கிறது. ஏழு நெடுக்கு,