கதையாசிரியர் தொகுப்பு: நீர்வை பொன்னையன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஜீவநாதம்

 

 (1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இதயத்தின் சோகச் சுமையுடன் ஜடமாய் உட்கார்ந்திருக்கின்றாள் விஜயா. அவளுக்கு முன்னால் ஒரு சூட்கேஸ்’ திறந்த படியேயிருக்கின்றது. வானவில்லின் வர்ண ஜாலம் கோலமிடும் அவளது உடைகள், அவள் எடுத்துச் செல்லவிருக்கின்ற அந்த சூட்கேஸ்ஸில் அடுக்கடுக்காக, மடித்து வைக்கப்பட்டும் வைக்கப்படாமலுமிருக்கின்றன. பலரது இன்பதுன்பங்கள், தேவைகள், இதயச் சுமைகள், தாபங்கள் எல்லாவற்றையும் தமதகத்தே தாங்கிய உள் நாட்டு வெளிநாட்டு கடிதங்கள், கொழும்பில் தபாலில் சேர்க்கப்படுவதற்காக, பொலீத்தீன் உறையில்


பாதை

 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இப்பதானே வாறாய் மோனை?” பஸ்சிலிருந்து இறங்கிய வேலுப்பிள்ளையை வாஞ்சையுடன் கேட்கின்றார் அம்மான் கந்தையா. “ஓம் அம்மான்” புதிய றோட்டை ஆவலுடன் பார்த்தபடியே கூறுகின்றான் வேலுப்பிள்ளை. “எப்பிடிச் சுகம்?” “ஏதோ, கந்தசாமியாற்றை தயவாலை சுவமாயிருக்கிறன்.” “சாடையாக் கறுத்துப் போனாய் போலை கிடக்கு”. “மாறை வெய்யிலெண்டால் கேக்க வேணுமே?” “அட அநியாயமே!” அம்மானுடைய குரலில் அனுதாபம். “அது மாத்திரமே? கருங்கல்லு உடைக்கிற வேலை…” “இதெல்லாம் அந்தப்