கதையாசிரியர் தொகுப்பு: நிலாமகள்

6 கதைகள் கிடைத்துள்ளன.

சிரித்தால் அழகு!

 

 “என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா. ஆம். என் கையிலிருக்கும் இந்த புகைப்படம் கடந்த ஒருமணி நேரமாக என்னை எங்கெங்கோ கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றிருக்கிறது தான். எனது பக்கத்துப் படுக்கை, நோயாளி யாருமின்றி காலியாக உள்ளது. எனவே தான் இரண்டாம் வகை சிறப்பு அறை, முதலாம் வகை சிறப்பு அறை போன்ற ஏகாந்தத்தை தருகிறது எனக்கு. எனது தந்தையின் மத்திய அரசுப் பணிக்கான சிறப்புச் சலுகை என் குடும்பத்தினருக்கான


ஆறுதலாய் ஒரு அழுகை

 

 பதினோராவது தடவையாக கைப்பேசியை உயிர்ப்பித்து மணி பார்க்கிறேன். வண்டி வரும் தடயமில்லை. 5.35 ஆகிடுச்சு. மத்தியப் பேருந்து நிலையத்தில் 5.20 க்கு சரியா கிளம்பியிருக்கணுமே… கெளம்பறச்சே பேருந்துல தான் ஏதேனும் கோளாறோ… மந்தாரக் குப்பம் போய்விடலாமா? விருத்தாசலம் வழியா வர்ற சேலம் –சிதம்பரம் வண்டி ஏதாவது கெடைக்கலாம்…. சிதம்பரம் போயி மாயவரம் போகணும். ம்ம்ம்… என்னோடு புதுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் மர நிழலில் தலை நுழைத்து நிற்கும் சிலரும் பேருந்து வரும்


யாவாரம்

 

 மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மனைவி காசாம்பு. கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின் முதிர்வு இருவரையும் சீக்கிரமே சோர்வாக்கியது. “எத்தனை கட்டு தேறுது புள்ள?” தலைக்கு மேல் தூக்கித் தூக்கி துழாவிய அலக்கு தந்த தோள்வலியோடு, கழியை கீழிறக்கி தரையில் அண்டை கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டே


வீழ்ந்தவன்!

 

 “எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்ல” ஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள். சின்ன வயசில் கூட்டாளிகளால் வைத்த பட்டப் பெயர் இது. கொண்டவன் வீட்டிலும் நிலைத்து, இப்போது பஞ்சம் பிழைக்க வந்த இடத்திலும் முதலாளியிலிருந்து சக தொழிலாளி வரை ஜானகி என்று கூப்பிடுவார் யாருமின்றி ஜாங்கிரியாகவே இருப்பவள். இத்தனைக்கும் காரணமான அவள் தலைமுடி எண்ணெய் காணாமல் வறண்டு சுருண்டு மேலேறியிருந்தது. எடுத்து ஒரு ரப்பர்பேண்டில் அடக்கி வைத்திருந்தாலும் அந்த


யயாதியின் மகள்

 

 “யேய்… தனா… மிஸ் உன்னையே பார்க்கிறாங்க முழிச்சுக்கோ” அடிக்குரலில் கிசுகிசுத்த பக்கத்து இருக்கைக்காரி மிருதுளா, டெஸ்க் மறைப்பில் தனாவின் தொடையை இலேசாக சுரண்டினாள். கண்கள் செருகிட கிறக்கத்திலிருந்தாள் தனா. தானொரு ப்ளஸ் டூ மாணவி என்பதோ கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறதென்பதோ நினைவற்ற கனவொன்றில் அமிழ்ந்திருந்தாள் அவள். “ஆல் ஆஃப் யூ அண்டர்ஸ்டாண்ட்…?” எல்லோர் முகத்தையும் வருடி வந்த டீச்சரின் பார்வை தனாவிடம் நிலைத்தது. தளர்ந்தும் சரிந்தும் அயர்ந்துமிருக்கும் அவள், அவரது கடுப்பைக் கிளப்பப் போதுமானவளாயிருந்தாள். “தனலட்சுமி…


லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு?

 

 லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு? கொடைக்கானலின் ஏரிக்கும் பூங்காவுக்கும் இடையில் வரிசை வரிசையான கடைகள் மட்டுமின்றி, மசாலா சுண்டல், மாங்காய் பத்தை, சோளக் கதிர், பஞ்சு மிட்டாய், ஐஸ் க்ரீம் என தள்ளு வண்டிகள் நிறுத்தப்பட்டு கனஜோராய் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மலர்க் கண்காட்சி மற்றும் அக்னி நட்சத்திரம் காரணமாய் மக்கள் கூட்டம் வெகு அதிகம். அந்தி சாயும் நேரம். மதியம் அடித்த மிதமான வெயில் சரிந்து குளிர் தழுவி வீசியது மென்காற்று. “”அம்மாம்மா… இங்க பாரேன்… இந்த