கதையாசிரியர் தொகுப்பு: த.ராஜன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

புன்னகைகள் புரிவதில்லை…

 

 என் போன்றவர்களுக்கெல்லாம் காதலிக்க அறுகதை கிடையாது. அதுவும் என்னை விட பத்து வயது சிறியவனைக் காதலிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது எனக்கு. ஆண்கள் தன்னை விட பத்து வயது சிறியவளைக் காதலிக்கலாம், மணந்து கொள்ளலாம். ஆனால் பெண்ணாகப் பிறந்தால்? பெண்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அது முறைகேடாம், கலாச்சார சீரழிவாம். மண்ணாங்கட்டி. எனக்கு ஏன் அவனைக் காதலிக்க வேண்டுமென்று தோன்றியது? இதுவரை நான் எந்த ஆணிடமும் பேசியதில்லை. நான் பேசிய முதல் ஆண் அவன் தான். அதனால்


கேளிக்கை…

 

 இருவரும் நடைபாதை ஓரத்தில் பொடிநடையாக ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது உடையும் இன்ன பிற அணிகலன்கலுமே, அவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் என்றும் சொல்லியது. மேலும் அவர்கள் சுமக்கும் குடும்ப பாரங்களை அவர்களது முகம் அப்பட்டமாக காட்டிக்கொடுத்தது. இருவரையும் ஒரு காவல் அதிகாரி தடுத்து நிறுத்தினார். “வா வா ஐயா கூப்டறாங்க” என்று இருவரையும் ஜீப்பின் அருகில் நிற்கும் உயர் அதிகாரியிடம் அழைத்துச் சென்றார். அவர் “என்ன தண்ணி அடிச்சிருக்கிங்களா”


ஸ்மைல் ப்ளீஸ்…! சிரிப்பிற்கு கியாரண்டி…!

 

 இன்று மாலை நான்கு மணிக்கு மாப்பிள்ளைப் பார்க்க வருவதாக பெண் வீட்டில் சொல்லியிருந்ததால், மாப்பிள்ளை வீட்டில் ‘தட புட’ லாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். இந்த வரன் நிச்சயம் முடிந்துவிடும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஜாதகமெல்லாம் பார்த்தாகிவிட்டது, எட்டு பொருத்தம். இது இரண்டாவது வரன், இதற்கு முன் பத்து நாட்களுக்கு முன்னால் இன்னொரு பெண் வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். பெண்ணிற்கு மாபிள்ளையை விட பத்து வயது அதிகம். அதனால் தாத்தா கறாராக சொல்லிவிட்டார், “நம்ம பையன் என்ன ரெண்டாம் தாரமாவா வாழ்க்கைப்


இரயில் பயணம்

 

 இன்று இரவு சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மீண்டும் இரயிலில் பயணம் செய்யப்போவதை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டிருந்தார் செல்வம். இதற்கு இவரது முந்தைய கசப்பான அனுபவம் தான் காரணம். சாதாரணமாக நாம் அனைவரும் தொலை தூரப் பயணம் என்றாலே, பேருந்தை விட இரயில் பயணத்தையே தேர்வு செய்வோம். காரணம்: நிறைய மனிதர்கள்- பேசிக்கொண்டே போகலாம், நினைத்த நேரத்தில் சௌகர்யமாக உணவு உண்ணலாம், சுடச்சுட தேநீர் அருந்தலாம், புத்தகம் படிக்கலாம், உட்கார்ந்து கால் வலித்தால் சிறிது நேரம் உலாவிக்கொள்ளலாம், சுகமான காற்றை


பக்… பக்… பக்…

 

 ப்ரோடீன்ஸ் பிராய்லர் கடை… அவரது மகன் வைத்த பெயர் அது. கோழிகளும், கோழிகளின் தோல் உறிக்கும் இயந்திரமும் இருக்கும் ஒரு சிறிய அறையின் முன்னால் பனை ஓலையால் கூரை வேயப்பட்டிருக்கும். அந்த கூரையில் தோல் உரிக்கப்பட்ட கோழிகள் தொங்கியவாறு இருக்கும். கோழியை வெட்டுவதற்கு தோதாக ஒரு முதிர்ந்த மரத்தின் அடிப்பாகம் வட்டமாக வெட்டப்பட்டு, ஒரு கம்பிக்கூண்டின் மீது அமர்ந்திருக்கும். அந்த கம்பிக்கூண்டில் அன்றைக்கு மரண தண்டனை அனுபவிக்கப் போகும் கோழிகள் அடைக்கப்பட்டிருக்கும். காலையில் வந்த உடனேயே அன்றைக்கு