கதையாசிரியர் தொகுப்பு: தாமரைமணாளன்

1 கதை கிடைத்துள்ளன.

பசி

 

 பசி எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? பசி என்றால், அடுப்பில் மனைவி சாதத்தை வடித்துக் கொண்டிருக்கும்போதே ‘பசிக் கிறது, பசிக்கிறது’ என்று கத்து வோமே அந்தப் பசியையோ, அல்லது ஹோட்டலில் ‘ஸ்பெ ஷல்’ சாப்பாட்டுக்காக டிக்கட் வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, மேஜையைச் சுத்தம் செய்யும்வரை தாள முடியாமல் ஒரு கையால் வயிற்றைப் பிடித் துக்கொண்டு மறு கையால் மேஜையில் சிந்திக் கிடக்கும் சாம்பார் ஈரத்தில் டிக்கட்டை வைத்துக்கொண்டு நிற்போமே அந்தப் பசியையோ குறிப்பிட வில்லை.