கதையாசிரியர் தொகுப்பு: டீனா

2 கதைகள் கிடைத்துள்ளன.

வாய்ப்புக்கு நன்றி!

 

 மாறன் அறிவது, இத்துடன் மத்தியஅமைச்சரின் சுற்றுப்பயண விவ ரங்களை இணைத்துள்ளேன். நம் திட்டப்படி பொதுக்கூட்டத் தில்வைத்து முடித்துவிடவும். எத்தனையோ தோழர்களுக்குக் கிட்டாத தியாக வாய்ப்பு உனக்குத் தரப்பட்டுள்ளது. -ஜீவன் பின் குறிப்பு: உன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வோம்! இயக்கத் தலைவர் ஜீவன் அவர்களுக்கு… வாய்ப்புக்கு நன்றி. என் பொறுப்பை கச்சிதமாய் முடிப்பேன். வெடிகுண்டு பெல்ட்டைத் தங்களின் கைகளால் அணியக் காத்திருக்கிறேன். தங்களை எப்போது சந்திக்க வேண்டும் எனத் தெரிவிக்கவும். மாறன் பின் குறிப்பு: என் குடும்பத்தைப் பற்றி கவலையில்லை!


பிழைப்பு

 

 புரோக்கர் அய்யாதுரை ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை திலகா கைகளில் திணித்தான். அக்கம்பக்கம் உஷாராகப் பார்த்துக் கொண்டு, சட்டென ஜாக்கெட்டுக் குள் பணத்தைப் பத்திரப்படுத்திக் கொண்டாள். ”பார்ட்டி ரெடி பண்ணிட்டேன். நாளைக்கு வந்துடு!” & அய்யாதுரை சுருக்கமாகச் சொன்னான். மற்றதை திலகா அறிவாள். ”அண்ணே, ஆளு எந்த ஊரு? ”யாராயிருந்தா உனக்கென்ன? ரெண்டு, மூணு மணி நேரம் இருக்கப் போற. நல்லா மேக்கப் பண்ணிட்டு வந்துடு. எல்லாம் முடிஞ்சதும் மீதியை செட்டில் பண்றேன்!” திலகாவுக்கு 30 வயது.