கதையாசிரியர் தொகுப்பு: ச. முருகானந்தன்

1 கதை கிடைத்துள்ளன.

இறக்கை முளைக்கும் பறவைகள்

 

 ஆழ்ந்த கவலையின் தாக்கத்தால் அசந்துபோய், நாடியை ஒரு கையால் தாங்கியபடி வேதனை ததும்பும் முகத்துடன் தீவிரமான சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தாள் முத்தம்மா. இருந்த சொற்ப அரிசியில் கீரைக் கஞ்சி காய்ச்சி ஒருவாறு சமாளித்துப் பிள்ளைகளை உறங்க வைத்தாயிற்று. பெரியவள் சுந்தரிக்குத்தான் அரை வயிற்றுக்குக் கூடக் காணாது. பருவமாகும் வயதை எட்டும் பூரிப்பு எதுவுமின்றி, பன்னிரண்டு வயதில் எட்டு வயதுப் பிள்ளைபோல் காட்சி தரும் அவளைப் பார்க்க முத்தம்மாவின் பெற்ற வயிறு எரிந்தது. ஊதிய உயர்வின்மை, பொருட்களின் விலையேற்றம்,