கதையாசிரியர் தொகுப்பு: சுபத்ரா

9 கதைகள் கிடைத்துள்ளன.

முதலிரவுக் கதை

 

 எச்சரிக்கை: உங்களுக்கு ஐக்மோபோபியா என்றால் இந்தக் கதையைப் படிக்காதீர்கள். சில இடங்களில் ரத்தம் இருக்கலாம்! “இதுக்கு முன்னாடி எப்பவாவது இந்த மாதிரி மயக்கம் வந்திருக்கா?” டார்ச் லைட் ராதாவின் கண்களைக் கூசச் செய்ய, ‘இல்லை’ என்பது போல அவள் லேசாகத் தலையை அசைக்க முரளி “இது தான் முதல் தடவை டாக்டர்… போன வாரம் பில்லா படம் பார்க்கும் போது” என்று தொடர்ந்தான்.. “ஓ” “படத்தில் ரத்தம் வரும் சீன்ல எல்லாம் குழந்தை மாதிரி முகத்தைத் திருப்பிக்கிட்டா…


ஒரு நாயகன்

 

 “ஹலோ” “எல ராசு, எங்க இருக்க?” “வீட்லதாம்ல சொல்லு” “நம்ம ஜாவா எங்கெருக்கு?” “எது, ப்ரீடுக்கு வாங்கிக் குடுத்தியே ஒரு கரும்வளவி, அதுவா?” “ம்” “நேத்து தான் செத்துப்போச்சி. ஒரு வாரமா சீக்கு” “என்னது?!” “போன மாசமே ரொம்ப வீக்காகி சரியா சாப்பிடல. தலைய தொங்கபோட்டுக்கிட்டே கிடந்துச்சு. கொஞ்சம் சின்ன வெங்காயம் உரிச்சி கொடுத்தவுடனே தேறிடுட்டு. பிறகு இப்போ ஒரு வாரமா ரொம்ப முடியாம இருந்து நேத்து செத்துப்போயிட்டுல” “ஓ காட்! எத்தன வைப்பு எடுத்த?” “என்னத்த


முகமூடி

 

 நான் உங்களுக்குப் புரியாத பாஷை ஒன்றில் பேசப்போகிறேன். அல்லது புரிந்த பாஷையில் புரியாத வார்த்தைகளை இழைத்துப் பேசி என் மனப்பாரத்தைச் சற்று இறக்கிவைக்கப் போகிறேன். உங்களுக்குப் புரியப்போவதில்லை என்று இப்போது நான் சொன்னதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம். புரிந்துகொண்டால் மட்டும் எனக்காக நீங்கள் என்ன கிழித்துவிட முடியும் என்ற மனச்சலிப்பே நான் அப்படிச் சொன்னதற்குக் காரணம். நீங்கள் சற்றே எரிச்சலுற்றாலும் தொடர்ந்து படிக்கிறீர்களென்பதே எனக்கு ஆறுதலாக இருக்கிறது. இதற்குமேல் உங்களது கவனம் நீங்கள் வாசிக்கப்போகும் வார்த்தைகளிலேயே மையம்


அவள் பெயர் பூவெழினி

 

 ஆளுக்கொரு பொருளை வைத்துக்கொண்டு ஐந்துபேரும் சேர்ந்து அந்தக் குழியைத் தோண்டத் துவங்கியிருந்தோம். “அட்வென்ச்சர் வேணுங்கிறதுக்காக இதெல்லாம் ஓவர் திவ்யா” லலிதா (எ) லல்லி நூறாவது முறையாக அந்த டயலாகை சொல்லி முடித்தாள். அந்தக் குளிர் பனியிலும் அவளது முகம் வேர்த்து வெளுத்திருந்தது. “உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா? இந்த ஸ்மெல்ல எப்படித்தான் தாங்கிக்கிறீங்களோ” “எவ்வளவோ பண்ணிட்டோம்; இதப் பண்ண மாட்டோமா? அப்படினு என் மனசு சொல்லுது” சிரித்துக்கொண்டே நான் சொன்னதைக் கேட்டவள் மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு அருகிலிருந்த வேறொரு


பேருந்தில் நீ எனக்கு

 

 மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன. சாலையில் சென்ற பெண்களின் உடைகளை எல்லாம் காற்று களவாடப் பார்த்தது. சிக்கென்று பிடித்துக் கொண்டு சென்றனர் அனைவரும். மறு கையில் குடை வேறு எதிர் திசையில் மடங்கிக் கொண்டது. குழந்தையோடு வரும் பெண்மணி அதன் கண்களை கை வைத்துப் பொத்திக் கொள்கிறாள். வெகு நாட்களாகத் திறக்கபடாமல் பூட்டி இருந்த டீக்கடை ஒன்று அனைவருக்கும் ஒதுங்க இடம்


எல்லைக்கு அப்பால்

 

 ஒரு மந்தமான மதிய வேளை. உண்ட களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அது என்னவோ தெரியவில்லை எல்லோரும் விழித்திருக்கும் நேரங்களில் உறங்குவதற்கும் உறங்கும் நேரங்களில் விழித்திருந்து வித்தியாசப்படுவதற்கும் மிகவும் பிடித்திருந்தது. ஒரு வழியாக முழுவாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியிருந்தது. அடுத்தவருடம் நான்காம் வகுப்பு! உமா டீச்சரின் வகுப்புக்குப் போக வேண்டும். “ஏ பட்டு.. அங்க போவாத!” “அதைச் செய்யாத!” “அண்ணன் கூட சண்ட புடிக்காத!” “பள்ளிகூடம் போகனும் சீக்கிரம் எந்திரி!” போன்ற வசனங்கள் அல்லாத


குழப்பம்

 

 அப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ? ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோமே! தலையைத் திருப்பிப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த தரணி சாரைப் பார்த்தால் அவர் எப்போதும் போலப் புன்னகைத்துவிட்டு ‘என்ன’ என்பதுபோல் பார்த்தார். ‘ஒன்றுமில்லை’ எனத் தலையசைத்துவிட்டுத் திரும்பி வேலையைத் தொடர்ந்தேன். கொஞ்ச நாளாகவே இப்படித்தான் இருக்கிறது. அலுவலகத்தில் ஒரே குழப்பம். ஒரே இரைச்சல். ஒருமுறை அலுவலகத்திலிருந்தவாறே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவள் கேட்டது நினைவுக்கு வந்தது. “என்னடி பேபி


விலை

 

 “கீர்த்தி, என்னடி அமைதியாக இருக்க? உனக்கு இந்தப் புடவை ஓ.கே. தான? அமுதாவுக்கு இந்தப் பாசிப்பச்சைக் கலர் நல்ல சூட் ஆகும்னு நினைக்கிறேன்” கேட்டுக்கொண்டே வந்த வித்யாவையும் அவள் கையில் இருந்த புடவையையும் பார்த்தாள் கீர்த்தி. “நல்லா இருக்கு” அமைதியாக ஒரு புன்னகை. “ஏய்.. இவ எனக்கெல்லாம் செலக்ட் பண்ணித் தர மாட்டா.. அவ மட்டும் அழகா செலக்ட் பண்ணி ராணி மாதிரி டிரஸ் பண்ணிக்குவா” கோபித்துக் கொண்ட அமுதாவைச் சமாதானப் படுத்த முயன்றனர் மற்ற இருவரும்.


நாமிருவர்

 

 “என்னங்க.. ஸ்கூல் வேன் வந்திருச்சா?” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள். அப்போதைய அசதியைப் போக்குவதற்கு எனக்கு ஒரு ஸ்ட்ராங் காபி தேவையாக இருந்தது. அட! மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தம்ளரை இப்போது தான் பார்க்கிறேன்! ஆறிப்போய்விட்டதோ என்று தொட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே ஏமாற்றத்துடன் திரும்பிவந்தாள். “இன்னைக்கு லேட் ஆன மாதிரி தெரியல? எப்பவும் 4.20 மணிக்கெல்லாம் ஸ்கூல்விட்டு வந்திருவானே..!” மஞ்சள் பூசி முகம் கழுவித் தலைவாரிப் பூவைத்துப் பாண்ட்ஸ் பவுடரின்