கதையாசிரியர் தொகுப்பு: சித்தாந்தன்

1 கதை கிடைத்துள்ளன.

அம்ருதாவின் புதிர் வட்டங்கள்

 

 அம்ருதா தன்னிடமிருந்து என்னிடம் வந்திருந்தாள். அவளது பார்வையில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தபடியே இருக்கும். எனக்கும் அவளுக்குமான விவாதங்கள் சொற்களின் உச்சத் தொனியில் நிகழத் தொடங்கினாலும் எல்லாம் பூச்சியத்தில்தான் போய் முடியும். பூச்சியத்திலிருந்து ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்து அவமானத்தால் தலைகுனிவோம் அல்லது மீளத் திரும்பாத புன்னகைகளைக் காற்றில் எறிவோம். பிறகு எதுவுமே நடக்காதது போலப் பாசாங்கு செய்யத் தொடங்கி விடுவோம். கடலின் கரை அலைகளால் துடைத்தழிக்கப்பட்டுக் கொண்டிருந்து. யுகங்களாத் தொடரும் இந்தத் துடைத்தழிப்பை அன்றுதான் பார்ப்பவள் போல்