கதையாசிரியர் தொகுப்பு: கீதா பென்னெட்

10 கதைகள் கிடைத்துள்ளன.

பணக்கார சிநேகிதி

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவசரமாய் டிபனுக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தேன். நேரத்துக்கு எல்லாம் முடிந்தால் தான் அவர் வீடு திரும்பியதும் கோயிலுக்குப் போகலாம். என் மகன் கண்ணனுக்கு இன்றைக்கு நான்கு முடிந்து ஐந்து வயதாகிறது. இவருடைய சம்பளத்துக்குத் தகுந்த வீக்கமாய்க் குறைந்த விலையில் துணி எடுத்து எதிர்க் கடை விட்டல் ராவ் கைவண்ணத்தில் அவனுக்கு டிராயர் தைத்திருந்தேன். வாசலில் நின்று கொண்டு அப்பாவுக்காகக் காத்திருந்த கண்ணன், பெரிய


மோனோ ஆக்டிங்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மியூஸிக் அகாடமி திரை கீழே விழுந்த போது, அதுவரை அமைதியாய் இருந்த ஆடியன்ஸ் கூட்டம் பலமாய்க் கைதட்டியது. கௌரி மேடையை வீட்டுக் கீழே இறங்காமல் பணிவான கைகூப்பலுடன் தன் ‘குளோஸ்-அப்’ பற்களைக் காட்டிச் சிரித்தாள். அவளை தலுங்காமல் காருக்குக் கூட்டிப் போகக் காத்திருந்தான் ஸ்ரீநாத். அவசரம் அவசரமாகத் தன் பிளிமௌத்தில் ஏறியபோது… ‘டிங் டிங்…’ என்று அலறியது அலாரம் கடிகாரம். கௌரி சட்டென்று


வித்தியாசம்

 

 ஏற்காடு ஏரி! பனி காலமானதால் குளிரில் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்துக் கொண்டது. சீசனாக இல்லாத போதும் தமிழைத் தவிர அவ்வப்போது தெலுங்கும் இந்தியும் ஆங்கிலமும் காதில் விழுந்தது. ஜனார்த்தனன் கழுத்தை சுற்றியிருந்த ம·ப்ளரை இன்னும் இழுத்து விட்டுக் கொண்டார். கம்பளி குல்லாயைத் தடவிக் கொண்டார். ”கல்யாணம் ஆன உடனேயே தேன்நிலவுக்கு ராஜியோடு இங்கே வந்ததுதான். அப்போதும் இதே மாசம் தான். இதே குளிர்தான். ஐம்பது வருஷங்களுக்கு மேல் ஆகிறது என்றால் நம்பவே முடியவில்லையே…….” ஜனார்த்தனம் பழைய நினைவுகளை


சிண்டரெல்லா கனவுகள்!

 

 டைனிங் அறையிலிருந்து ஏகப்பட்ட சத்தம். தட்டு ‘ணங்’கென்று தலையைத் தொடும் ஒலி. அதைத் தொடர்ந்து பாமாவின் உச்சஸ்தாயி கத்தல். மாடியில் ஏதோ வேலையாய் இருந்த சீதா வேகமாய் கீழே இறங்கி வந்தாள். பாமா பத்ரகாளி போல் கத்த, அவள் எதிரில் ஒடுங்கிய பூனைக்குட்டியாய் நின்றிருந்தாள் மைதிலி. சீதாவைப் பார்த்தவுடன் பாமாவின் கோபம் கொஞ்சம் தணிந்தது. ”என்ன ஆச்சு இங்கே? என்னடி பண்ணே…..?” சீதா அதட்டிக் கேட்க மைதிலி மவுனமாகவே இருந்தாள். ”அவ பதில் பேசமாட்டா! எனக்கு காலேஜுக்கு


அதையும் தாண்டி புனிதமானது

 

 பெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள். உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. அம்பயர் கைகள் இரண்டையுமே மேலே தூக்கி, ‘அவுட்’ கொடுக்க, ரசிகர்களின் கூச்சல் காதைப் பிளந்தது. காமிரா மெல்ல நகர்ந்து சில சந்தோஷ முகங்களைக் காட்டிவிட்டு, இரண்டு அரை நிஜார் பெண்களின் வெள்ளை வெளேர் ஆஸ்திரேலியக் கால்களில் போய்த் தயங்கி நின்றது. ஜானகியை இன்னும் யாரும் கவனிக்கவில்லை. சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு, ‘ம்..’ என்று


ஆனால், அது காதல் இல்லை!

 

 ‘அருள் அமுதைப் பருக அம்மா அம்மா என்று…’ மேடையின் நடுவே நின்று அபிநயம் செய்துகொண்டு இருக்கும் என் மேல் மஞ்சள் ஒளி வட்டம். என் வலது புறம் அமர்ந்து பாபநாசம் சிவனின் பாடல் வரியை எடுத்து நிரவி, மிக உருக்கமாகப் பாடுபவள் மானவதி. ‘மதர்ஸ் டே’யை ஒட்டி பாஸ்டன் நகரின் பல்கலைக்கழகம் ஒன்றின் இசைப் பிரிவு, என்னுடைய பரத நாட்டியக் கச்சேரியை ஏற்பாடுசெய் திருக்கிறது. சென்னைக்குத் திரும்பு வதற்கு முன், என்னுடையஅமெரிக்க நிகழ்ச்சி நிரலில் இதுதான் கடைசி


வெள்ளைப் பொய்கள்

 

 வெள்ளிக் கிழமை மாலை. நியூயார்க் சப்வேயில் 5:40 ரயிலைப் பிடிக்கக் காத்திருந்தபோது, அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. ‘ஒயிட் லைஸ்!’ ஏதோ அமெச்சூர் குழுவின் ப்ளே- நாடகம். அதை முழுவதும் படிப்பதற்குள் ரயில் வந்துவிட்டது. அதிசய மாக உட்காரவும் இடம் கிடைத்துவிட்டது. நிம்மதியாக சிறிது நேரம் கண் மூடலாம் என்று நினைத்தபோது, என் அப்பார்ட்மென்ட் பில்டிங்கில் இருக்கும் ஸ்மித் கண்ணில் பட்டான். ‘ஹேய் சுப்ரேமேனியேன்…’ என்று விளித்து, ஏதாவது தொணதொணப்பான். அவன் என்னைப் பார்க்கும் முன் ஐபாடில்


அர்ஜுன் S/O ராஜலட்சுமி

 

 என் அவசரத்துக்கு லாஸ் ஏஞ்சலீஸ் ‘ஃப்ரீ வே’ நகரவில்லை. 70 மைல் வேகத்தில் போக வேண்டிய பத்தாம் எண் ராஜபாட்டை நத்தையாக ஊர்ந்து, இன்னும் படுத்தியது. என் பிள்ளை அர்ஜுன் வழி மேல் விழி வைத்து எனக்காகக் காத்திருப்பான். அவனைவிட அவனைக் கண்காணிக்கும் ‘டே கேர்’ நிர்வாகப் பெண் சூஸன், சுடு நீரில் காலை வைத்தது போல் துடித்துக்கொண்டு இருப்பாள். பத்துப் பதினைந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்பவள், தானும் காலாகாலத்தில் வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைப்பதில்


ஒரு சின்ன தவறு!

 

 சற்றே பெரிய சிறுகதை சின்ன தவறு-தான். செய்தது, திரு–வாளர் நீலகண்டன் சுப்ரமணியன். ஆனால், அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது. ஆறு டிஜிட் டாலர் சம்பளம் கொடுத்தும், அவனுடைய வக்கீ-லால் ஜெயிக்க முடியவில்லை. பத்து மாதங்களுக்கு முன்னால்… கலிபோர்னியாவில், பெரும் பணக்கார ஹாலிவுட் நட்சத்-திரங்கள் வசிக்கும் ‘பெல் ஏர்’ என்கிற இடத்தில் இருக்கிறது அந்த மாளிகை. ஒரு நாள் மாலை ஐந்து மணி சுமாருக்கு, நந்தினி & அதாவது, திருமதி நீலகண்டன் சுப்ர-மணியன் &இரண்டரை மில்லியன்


வேலி

 

 நாளைக்கு மதியம் பயணம். அதற்கு முன், வழக்கம் போல் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு, ‘பயணத்தை நல்லபடியாக நடத்திக் கொடப்பா!’ என்று வேண்டிக்கொண்டு வர வேண்டும். காரை ஓட்டியபடி அந்தத் தெருவுக்குள் நுழைந்தபோதே, சிலீரென்று மனசுக்குள் ஒரு தென்றல். பின்னே? பிறந்ததிலிருந்து இருபத்திரண்டு வருடங்கள் வளர்ந்து திரிந்த வீதி ஆயிற்றே! திருவல்லிக்கேணியில் ஒண்டுக்குடித்தனத்தின் நடுவில் பிறந்து வளர்ந்தவள் நான். இன்று பல அமெரிக்கக் கம்பெனிகளுக்கு உதவும் ‘கால் சென்டர்’ ஒன்றின் முதலாளிகளில் ஒருத்தி.