கதையாசிரியர் தொகுப்பு: கமலன்

1 கதை கிடைத்துள்ளன.

மனைவிக்கு வாங்கிய பொம்மை

 

 காற்று புகாத கண்ணாடி காகிதத்தினுள்ளும் கைநீட்டி குறும்பாக சிரித்தது அந்த வெள்ளை நிற டெடி பொம்மை. பொம்மைக்கு முற்றும் முரணாக கரடுமுரடான முகத்துடனும் கன்னத்தில் வெட்டுத்தழும்புடனுமான அந்த நடுத்தர வயது மனிதரின் மடியில் மூச்சு விடாமலும் மனதளவில் சிரித்துக்கொண்டேயிருந்தது அந்த டெடி. பத்திரமாக ஒரு கையால் பொம்மையை அணைத்தும் மறுகையால் முன்சீட்டுக் கம்பியை இறுக்கமாக பிடித்தபடியுமாக பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். டிரைவர் சீட்டின் பின் இருக்கை என்பதால் முன்புறக் காட்சிகள் தெளிவாக இருக்க, ஏதோ தீவிர யோசனையுடன்