கதையாசிரியர் தொகுப்பு: கணேஷ் வெங்கட்

1 கதை கிடைத்துள்ளன.

கலையும் பிம்பங்கள்

 

 பிந்தியா மிகவும் அழகு என்று சொல்லி விட முடியாது. ஆனால் சந்திப்பவரின் மனதில் பதிந்து போகிற முகம் அவளுடையது. நல்ல நிறமில்லை; ஆனால் நவீன நடை உடை பாவனைகள் வாயிலாக நினைவை நிறைத்துவிடக் கூடியவள். அவளுடைய பகட்டில் கொஞ்சமும் செயற்கைத்தன்மையைக் காண முடியாது. பஞ்சாபி கலந்து பேசும் இந்தியை நாள் முழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஸ்ட்ராபெர்ரி கேக்கை வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள். நான் கேட்ட கேள்விக்கு அவளின் பதிலை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். காபியின் நுரையின் மேல் க்ரீமினால்