கதையாசிரியர் தொகுப்பு: எம்.கோசலைராமன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

விருப்பம் – ஒரு பக்க கதை

 

 கரண்ட் கட். மின்சாரம் திரும்ப வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் ஆகும். பொழுது போகாத திவ்யா, தன் ஐந்து வயது தர்ஷிணியைத் தூக்கி வைத்துக் கொண்டாள். பத்து நாள் பாட்டி வீட்டில் இருந்து விட்டு வந்த தர்ஷிணியின் அனுபவத்தைக் கேட்க தாயாரானாள். ”நம்ம வீட்ல மாதிரி, அங்க ஏ.சி இல்லைம்மா” ”ம்!” ”டி.வி.இல்லை!” ”ம்!” ”ரேடியோ கூட இல்லை!” ”ம்!” ”போனும் இல்லை. நீங்களே என் கூடப் பேசறதுக்கு பக்கத்து வீட்டு போனுக்குத்தானே கூப்பிட்டீங்க?” ”ம்!”


ரிசல்ட் – ஒரு பக்க கதை

 

 பையனின் ரிசல்ட்டைப் பார்த்ததும் சாந்திக்கு பகீரென்றது. 400 மார்க்குக்கு மேல் வரும் என்று எதிர்பார்த்திருந்தாள். ஆனால் 256 மார்க்குதான் வந்திருந்தது. வெடித்துச் சிதறிய சாந்தியை கணவர் ஆறுதல்படுத்தினார். டென்ஷனாகாத.. இனிமே ஒழுங்கா படிப்பான்! ஆமா கிழிப்பான், ஏண்டா, அடிக்கடி டி.வி. பார்க்காதே, படிக்கிற வழியைப் பாருன்னு எத்தனை தரம் சொன்னேன். பையன் அலட்டிக் கொள்ளவில்லை. தப்பு அவன் மேல இல்லடி, நம்ம மேலதான்! நாம என்னங்க பண்ணினோம்? டி.வி. பார்க்காதே, படின்னு அவனைச் சொல்லிட்டு நாம டி.வி.


ஆயிரத்தில் இருவர்!

 

 தப்பு என் மீதா… இல்லை அவர்கள் மீதா என்று தெரியவில்லை. சேரில் அந்த இளைஞனின் மடிமீது உட்கார்ந்திருந்த அந்தக் கடை யுவதி, உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். எதிர்பாராத அதிர்ச்சியில் நிலைகுலைந்த அந்த இளைஞன் சேரிலேயே உட்கார்ந்திருப்பதா அல்லது எழுந்து நிற்பதா என ஒரு கணம் யோசித்து, பின் எழுந்து நின்றான். அவனுக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சிதான் எனக்கும். திறந்த கதவை மூடிவிட்டு வெளியே போவதா அல்லது கடைக்குள் நுழைவதா எனத் துணுக்குற்று, பின்