கதையாசிரியர் தொகுப்பு: எம்.எம்.அலி அக்பர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தியாகத் தாயின் ஹஜ் பயணம்

 

 அதிகாலை 5.00 மணியைத்தாண்ட, என்னங்க சுபஹுத் தொழுகைக்கும் பாங்கு கேட்டு முடிஞ்சிதிங்கோ, எழும்புங்கோ என்றவாறு தன் கணவன் அசனாரை படுக்கையில் இருந்து எழுப்பினார் பரீதா. இந்த நேரத்திற்குப் போனால்தான் 8 கி.மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று வெயில் ஏறுமுன்னர் ஒரு வண்டிலுக்கான விறகுக் கட்டைகளை எடுக்க முடியும். அசனார் பரம ஏழை. அவரிடமுள்ள சொத்துக்கள் என்றால் மாட்டு வண்டியொன்றும், ஒரு சோடி மாடுகளும்தான். வழமையாக மேலும் 4 வண்டிக்காரர்களுடன் சோர்ந்துதான் அசனார் இத்தொழிலுக்குச் செல்வார்.


மூனுரோத சைக்கிள் வண்டி

 

 ஆரிபா வீட்டில் அன்று காலையில் இருந்தே சலசலப்பு சந்தோசம் களை கட்டிக் கொண்டிருந்தது. ஆரிபாவின் இளைய மகன், மூத்த மகள் குடும்பத்தார்களும் அங்கு சமூகமாயிருந்தனர். இதற்குக் காரணம் ஆரிபாவின் மூத்த மகன் கபில் தனது குடும்ப சகிதமாக 12 வருசங்களுக்குப் பிறகு மலேசியாவிலிருந்து வருகை தருவதேயாகும். அங்கு அவர் இன்ஜினியராக கடமை செய்து வருகின்றார். இன்று காலை 6 மணிக்கெல்லாம் கட்டு நாயக்கா விமான நிலையம் வந்து ஒரு மாத விடுமுறையை சந்தோசமாக கழித்துச் செல்ல வாடகைக்